இன்று தொழிலாளர் தினம். உலகில் ஒரு காலத்தில் hardwork மட்டுமே இருந்தது. அந்த காலத்தில் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை வாங்கி புழிந்தார்கள் முதலாளிகள். உண்மையாகவே கொடுமையான உலகம் அது.

இவர்களை எதிர்த்து 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் உலகளாவிய தொழிற் புரட்சி நடந்தது. அல்பேனியா முதல் ஜெர்மனி, கிரீஸ், சீனா, கௌதமாலா, இந்தியா, ஈரான், இத்தாலி, வெனின்சுவேலா, கொலம்பியா, கியூபா வரை தொழிலாளர் புரட்சி ஓங்கியது.

கம்முனிசம், சோசியலிசம் ஒன்றாக போராடி நம் வேலை நேரத்தை 8 மணியாக குறைத்தார்கள். ஒர்க் லைப் பாலன்ஸ் உருவானது. இன்று நாம் சாயிந்தரம் facebook ல் நேரம் செலவழிக்க permission வாங்கித்தந்து இந்த தொழிலாளர் புரட்சிதான். இன்று வீக்கெண்டில் பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் என்று நம் குழந்தைகளை அழைத்து செல்ல நேரம் ஒதுக்கி தந்தது இந்த தொழிலாளர் புரட்சிதான்.

சண்டை போட்டு வாங்கி தந்த நேரத்தில் சிலர் நிம்மதியாக தூங்கி பின் வேலை பார்தார்கள். சிலருக்கு அதிகம் தூக்கம் வந்தது. சிலர் தூங்க மட்டுமே பழகினார்கள். சிலருக்கு அதிகம் உழைக்க தோன்றியது.

இவர்கள் எல்லோரும் போக போக ஒரே குடையின் கீழ் கூட்டாக கம்யூனிஸ்ட் என்று ஆனார்கள். இந்த கூட்டணி முயற்ச்சியால் softwork என்ற புதிய பதம் கம்யூனிஸ்ட்களில் ஒரு சாராரால் உருவாக்கப்பட்டது. அதாவது, வேலை செய்யாமல் சம்பளம் கேட்பது. உரிமை என்ற பெயரில் வேலை பார்க்காமல் இருப்பது. இதை பார்த்த உண்மையான கம்யூனிச தொழிலார்கள் குழம்பி போனார்கள். புரியவைக்க முயன்று தோற்றும் போனார்கள். கொடி பிடித்தால் சம்பளம் கிடைக்கும் என்று முழு நேரம் கோடி பிடிப்பதையே வேலையாக செய்ததின் விளைவு கம்முனிசம் ஒவ்வொரு நாடாக செத்தது.

இன்று கம்யூனிச நாடுகள் அனைத்தும் ஏழை நாடுகள். உடனே சீனா என்று ஓடி வராதீர்கள். சீனாவின் கதையில் Hardwork – Softwork இரண்டுக்கும் இடையே துப்பாக்கி பேசியது. கப் சிப் என்று அடங்கி போய் hard work பக்கம் சாய்ந்தார்கள். துப்பாக்கி இல்லாமல் கம்யூனிசம் பேசுவது சக்கரை இல்லாமல் பாயாசம் செய்வது போன்ற ஒரு கடின செயல் ஆகிற்று. கொலம்பியா போராளிகள், வெனின்சுவேலா போராளிகள், மாவோயிஸ்ட்கள்எ, நாகசல்பாரிகள் என்று  காட்டில் உலவ ஆரம்பித்த்தார்கள்.

கம்யூனிஸ்ட்களுக்கு Hardwork – Softwork பற்றிய குழப்பம் இன்றும் இருக்கிறது. ஸ்மார்ட் ஒர்க் என்றால் என்ன என்பதை கடைசி வரை கற்றுக்கொள்ளாமல் போனதுதான் இதன் உலகளாவிய தோல்விக்கு ஒரு காரணம். இதை புரிந்த பல நாடுகள் இந்த சிந்தாந்தத்தில் இருந்து வெளியேறியது. கம்யூனிசம்  எதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட்டு அவர்கள் வெகு தொலைவுக்கு வந்த பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஹோசிமின், மாவோ ஜிடோங், லெனின் கல்லறைகளில் கம்யூனிச சித்தாந்தம் இறந்து போனது. லெப்ட் ரைட் என்று பிரிந்து போனார்கள்.

அங்கங்கே ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாத் போல் சிலர் மூச்சு இருக்கும் வரை போராடினார்கள். நல்லகண்ணு போன்ற ரியல் கம்யூனிசவாதிகள் வாழும் காலத்திலேயே தா.பாண்டியன் போன்றவர்கள் மண்ணில் மண்டியிட்டு மண்வெளி பாம்புகள் போல ஊர் முழுக்க ஊர்ந்து வந்தார்கள். மக்கள் அதனால் கட்டையை கொண்டு அடித்து போலி கம்முனிச பாம்புகளை துரத்தினார்கள்.

சிவந்த ரத்தம் சிவப்பு கொடியில் கரையாய் படுகின்றது. கேரளாவில் கொடி பிடித்து வேலை செய்யாமல் softwork மூலம் அவர்கள் சாத்தித்தைவிட, அரேபிய பாலைவனத்தில் hardwork மூலம் மலையாளிகள் உழைத்து முன்னேறி சாதித்ததுதான் அதிகம்.

இந்த உலகம், அறிவாளியாக இருந்தும் சோம்பேறியாக இருப்பவனை விட, கடுமையாக உழைக்கும் முட்டாளுக்குத்தான் அதிகம் வெற்றிகளை கொடுத்து இருக்கிறது.

கொடி பிடிக்காமல், முடியும் என்று உழைத்தால் நீயும் ஒரு முதலாளி என்ற கோட்பாடை சொல்லிக்கொடுக்காத கம்யூனிசவாதியாக வீணாக போகாமல், hardwork உடன் ஸ்மார்ட் திங்கிங் உடன் கேப்பிடல் உலகில் சம்பாதித்து பில் கேட்ஸ் போல தான் சம்பாதித்த காசின் பெரும் பகுதியை சொசைட்டிக்காக கொடுக்கும் சோசியலிச பிளான்த்ரோபிஸ்ட்டாக வாழ நினைப்பதே உண்மையான தொழிலாளன் ஆவான்.

உண்மையாக உழைக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் அந்த நிறுவனத்தின் முதலாளி என்று கேபிடலிசம் தன்னை மாற்றிக் கொண்டது. அறிவாளியான Steve Jobs மீண்டும் அழைத்துக்கொண்டது ஆப்பிள் நிறுவனம்.

இப்போது எல்லாம்  திறமையாவருக்கு கம்பெனி ஷேர்களை வாரிக்கொடுக்கிறது கேபிடலிசம். Facbook கம்பெனியில் எல்லோரும் 8 மணி நேரம் வேலை பார்க்கும் போது மார்க் மட்டும் இன்றும் 12 -14 மணி நேரம் உழைக்கிறார். 24 மணி நேரமும் Elon Musk சிந்துத்துக்கொண்டே பேட்டரி கார்களுக்கும், விண்வெளியில் சைக்கிள் ஒட்டவும் துடித்துக்கொண்டு வேலை  பார்க்கிறார்.

முதலாளிகள் இன்று தொழிலாளியைவிட அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது. அதிகம் சிந்தித்து உழைப்பவன் அதிகம் பொருள் ஈட்டுகிறான்.

இந்த உலகில் இப்போது தொழிலாளி, முதலாளி என்றும் யாரும் இல்லை.
நீங்கள் நினைக்கும் வரை.

உழைத்து வாழும் அனைவருக்கு, மே தின வாழ்த்துக்கள்.

“The three great essentials to achieve anything worthwhile are, first, hard work; second, stick-to-itiveness; third, common sense.”

― Thomas A. Edison

ஸ்ரீதர் ஏழுமலை