இங்கு வளரும் குழந்தைகளுக்கு இளமைப் பருவம் இனிதாக செல்கின்றது. கேட்டது எல்லாமே கிடைக்கின்றது. தெரிந்தோ தெரியாமலோ எதைக் கேட்டாலும் அதை பெற்றோராக நிறைவு செய்கிறோம். 
18 வயது சிட்டுக்குருவியாக கூட்டைவிட்டு பறக்க தெரிந்த இவர்களுக்கு ரியல் டைம் risk aversion and management போன்றவை தெரியாமலே வளர்கின்றார்கள். 
I mean…தெரியாமலே வளர்க்கின்றோம்.

As long as flight சரியாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. கழுகு ஒன்று வந்து முதல் ஒரு கொத்து கொத்தினால்… தப்பிக்கவும் தெரியாமல், மீண்டும் கூட்டுக்கு பறந்து வர வழியும் தெரியாமல் திசை மாறி இன்னொரு வழியையும் தேடாமல் சிட்டுக்குருவிகள் தங்கள் இறக்கைகளை இழப்பது இங்கே சர்வ சாதாரணம்.

GxE=P

Genotype x Environment = Phenotype

இங்கே நாம் கொடுப்பது 100% guaranteed safety environment. Class முடியும் 10 நிமிடம் முன் நாம் வெயிட் செய்து பிக் செய்யும் ஒரு கியாரண்டி உலகம். எல்லாமே வின்னர் படத்தில் நாய்க்கு வடிவேலு போடும் ஒரு பிஸ்க்கட் கணக்கு போல. எவ்ரி திங் pre ordered, pre planned. 

உண்மையில் இது ஒரு டேஞ்சர் zone.

இந்தியாவில் வளரும் குழந்தைகளுக்கு ஒரு வித கேரண்டி இல்லா சூழ் நிலையை தினமும் சந்திக்க வாய்ப்பு உண்டு. Exam க்கு படிக்கும் போது கரண்ட் போய்விடும். இருந்தாலும் எக்சாம் நடக்கும். காலேஜ் சீட் கிடைக்கும் போது ரூல்ஸ் முதல் நாள் நைட் மாற்றுவார்கள். மைக்ரோ முதல் மேக்ரோ changes நொடிப் பொழுதில் நடக்கும். இதில் அடிபட்டு அடிபட்டு மனதளவில் பலசாளியாக வளர்கிறார்கள்.
அங்கே வளரும் குழந்தைகள் இந்த crisis manage செய்வதில் இருக்கும் ஆற்றலை விட இங்கே வளர்க்கப்படும் குழந்தைகள் அதை தெரிந்து கொள்வதற்கு அதிக opportunity இல்லை என்பதே உண்மை… அப்படியே இருந்தாலும் அதை நாம் overtake எடுத்து ஒரு safety யை நாம் வளர்ந்த நாட்டின் பரிசாக ஒரு வித கியாரண்டி பரிசாக அவர்களுக்கு கொடுத்து விடுகின்றோம். ஒரு varied environment ட்டை இங்கே risk என்று அழிக்கின்றோம்.
சிட்டுக் குருவிக்கு வளரும் போதே ஒரு unbalanced realism கற்றுக்கொடுக்க வேண்டிய கடமை தாய் தந்தை குருவிகளுக்கு உண்டு. வட அமெரிக்காவில் இந்த வகை elastic environment இல்லை. ஒரு மாதத்திற்கு நம்மால் காலெண்டர் வைத்து வாழ்க்கையை நடத்த முடியும். Outlook crash ஆனவுடன் வாழ்க்கை இழுத்து மூடப்படும்.
ஒரு சிட்டுக்குருவிக்கு சுதந்திரமான பல short round trips on its own மிக மிக அவசியம். கூட்டை சுற்றிய environment ம், அதில் நாமும் கொடுக்கும் variants மிக முக்கியம். கூட்டை சுற்றி இருக்கும் மற்ற பறவைகளும், சிட்டுக் குருவியின் நண்பர்களும் கற்றலின் ஒரு மிக முக்கிய காரணி. The same old 7 நாட்களும் அதே same old கடிகாரத்தில் அச்சரம் பிசகாமல் நகர்வது ஒரு மெஷின் வாழ்க்கை.
பயந்தும், முன் ஜாக்கிரதையான பாதுக்காப்புடனும் வளர்வது முக்கியமில்லை. 
வாழக் கற்றுக் கொடுப்பதை விட பறக்க கற்றுக் கொடுத்தால்தான் குருவி கழுகிடம் தப்பித்து மீண்டும் கூடு திரும்பும். 
Developing nations ல் வளரும் குழந்தைகளே உலவியலில் மிக தைரியமான குழந்தைகள். அங்கே படித்துவிட்டு முதுகலைக்கு இங்கு வந்தால் மட்டுமே போதும். வாழ்க்கை என்பதை போராட்டம் என்று எடுத்துக் கொண்டால் இதை இங்கு இள வயதில் கற்க opportunity இல்லை. 
G= மரபணுவில் வந்தது.  நீ சிட்டு குருவி என்று பிறந்தவுடன் குருவிக்கு சொல்லிவிடும். 

E = environment 

இதை நாம் தான் உருவாக்க வேண்டும்.

P = பறப்பது. 

வாழ்வது முக்கியமா
பறப்பது முக்கியமா???