Life expectancy மிக குறைவாக இருந்த போது குகை மனிதனாய், மனுஷன் சந்தோஷமா வாழ்ந்துட்டு செத்தான்.
தினம் சாப்பாட்டுக்கு வேட்டையாடியவுடன் தூங்க போனான். ஒரு நாள் முடிந்தது.
உயிர் வாழும் வருடம் கூட கூட தூக்கத்தை தொலைத்தான் மனிதன்.
சாப்பாடு இரண்டாம் இடத்துக்கு போனது.
பின்பு தங்க வீடும், உடுத்த உடையும் சாப்பாட்டோடு சண்டை போட்டு வென்றது.
இந்த சண்டையை அவனே தினம் தூங்காமல் விழித்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
அனேகமாக மூவருக்கும் இடையேயான இந்த சண்டை ஓவராக போனால், கடைசியில் ஆமை போல் 500 வருஷம் அமைதியாக ஒரு மூலையில் பனங்கா மண்டையில் மூடி போட்டுக் கொண்டு வாழ்ந்து சாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Actually, வாழ்க்கை மிக தட்டையாக மெதுவாக போய்கொண்டு இருக்கிறது.
We are heading towards a tortoise life.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆமை ஓட்டுக்குள் அடங்கும் வாழ்க்கையடா
well said
3 wife 10 sons 30 grandchildren + ஒவ்வொருவருக்கும் ஐந்து தலைமுறை சொத்து என்று தீயா வேலை செய்றான் குமாரு!
இனி வரும் பரம்பரைகளுக்கான சொத்து என நினைக்கிறேன்.
இருக்குமோ அய்யா!
Very true
Related: http://returntonow.net/2016/05/29/agriculture-worst-mistake-humans-ever-made/
வேளாண்மை என்பதே இயற்கை தழுவிய செயற்கை… அது முன் வாழ்ந்து வந்த அதாவது கற்கால மனிதனது வாழ்க்கை தான் இயற்கை சார்ந்த அதனை அழிக்காத வாழ்க்கை. ஆனால் மனிதனது அறிவுதான் ,தேடல் தான் , ஆசைதான் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது
உண்மை.
வேளாண்மையே இயற்கையின் இயல்பழித்து அதில் சிலவற்றை இயல்புமீறி இனப்பெருக்கம் செய்தல்தானே.
இயற்கையை திரித்தல் கண்டோம்
இயல்பினை மறைத்தல் கண்டோம்
கிராமியம் அழிதல் கண்டோம்
கிறுக்கனாய் அலைதல் கண்டோம்
மரபணுத்திருத்தம் கண்டோம்
மரணத்தின் விருத்தம் கண்டோம்
மானுடம் மரித்ததே நாளும்
ஊணுடம்பு உலவுதல் கண்டோம் – எழுதியதில் topic related lines
Beautiful! You certainly are a wonderful poetess!
காணாததைக் கண்டோம்
காணவேண்டியது காண்கிலோம்!
செயற்கையாய் செய்தாலும் இயற்கை தழுவியதாய்க்கூட இன்றைய விவசாயம் இல்லையே! மேலும் உயிரின் மரபணுவரைக்கும் மனித அறிவியல் விளையாடுகிறதே… புவியைக்கெடுத்துவிட்டு அண்ட வெளியிலும் அசுத்தம் கொட்ட முயல்வது ஏன்? இப்புவி அழித்து புதிய பூமி தேட பணத்தையும் அறிவையும் கொட்டுகிறான்…. சூரியன் காலமும் முடியுமென்று மாற்று சூரியன் உருவாக்கத்திட்டமாமே அண்மையில் கேள்விப்பட்டேன்… எதை நோக்கிப்போகிறது மனிதஇனம்?
இந்தச் சொல்லைக் கேட்ட ஞாபகம் உள்ளதா திருமதி. கங்கா?
“அமைதியை நிலைநாட்டப் படைகொண்டுச் சென்று போரிடுகிறோம்”….
இந்நிலைதான் இன்றைய இயற்கையும் அறிவியலும் – தலைகீழ் விகிதம்.
இந்திய வளங்களைக்கெடுத்து அவன் பொட்டலங்களை வாங்கவைக்கச் செய்வது மீண்டும் மீண்டும் நம்மை சந்தைகலாக்கத்துடிப்பது எல்லாம் நடுங்க வைக்கிறது
Palaniswami Rathanaswami அருமை யான உதாரணம் கொடுத்தீர்கள்…இது பெரிய அளவில் விவாதிக்க வேண்டியது..அந்த அமைதிப்போர் என்பதே கண்கட்டி வித்தை
அதுதான் இன்றைய உலகம்!
அமைதியா….
போரா……
அமைதிக்கான போரா….
அமைதியினால் போரா…..
அந்த அமைதிப்புறாக்கள் தான் ரத்தக்காட்டேரிகள்…. இன்று தமிழனை வைத்தே இந்திய அரசை வைத்தே நம் இனக்கண்களைகுத்த வைக்கிறான்.. எதிர்த்துப்போரிட்டால் அவன் அமைதிபோர் புரியவருவான்…
ஐயா நீங்கள் தூங்கப்போங்கள்…. அதிகம் சிந்தித்தால் தூக்கம் வராது
தூக்கமா…. அதற்குள்ளாகவா…. இந்த அதிகாலையிலேயா…. ஹ ஹா.
????
Very well articulated Sridar! It is the unfortunate truth!
Super helmet.