Long Exposure Photography என்பது ஒரு தனித்துவமான கலை.
உயிரோடு இருப்பவரை போஸ்ட் மார்ட்டம் செய்தபின் கொலை செய்து உயிர் கொடுப்பது போல் ஒரு reverse இன்ஜினியரிங் process.
எதோ ஒரு டைமிங்கில் Tripod வைத்து ஆட்டாமல் ‘டக்” ‘டக்’ என்று அடித்தால் எப்படியும் ஒரு Long Exposure கிடைத்துவிடும் என்று எண்ண வேண்டாம்.
நான் எடுத்த ஒரு புகைப்படத்தை பற்றிய பதிவுதான் இது.
இதை படித்த பின்பு ஓரளவு Long Exposure Photography பற்றி புரிதல் வரும் என்று நினைக்கிறன்.
இதை படித்த பின்பு ஓரளவு Long Exposure Photography பற்றி புரிதல் வரும் என்று நினைக்கிறன்.
Stock Photography என்பது புகைப்படத்தின் ஒரு வடிவம். அதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன்.
சுமார் 13 கம்பனிகளுக்கு ஸ்டாக் image போட்டோகிராபிகராக வேலை செய்கிறேன்.
அதில் ஒரு கம்பெனிக்கு லாஸ் வேகாஸ் நகரின் நைட் ஷாட் ஒன்று தேவைப்பட்டது.
அதாவது அந்த தூங்கா நகரத்தின் மீது உள்ள காதலை அந்த படம் சொல்ல வேண்டும்.
வழக்கமாக Las Vegas – Night Photography என்றால் ஓரே மாதிரியான shots தான் இருக்கும்.
சில்க் ஸ்மிதா என்று இணையத்தில் தேடினால் எல்லா புகைப்படத்திலும் அவர் ஈரம் தோய்ந்த கண்களுடன் இருப்பார்.
சில்க் ஸ்மிதா என்று இணையத்தில் தேடினால் எல்லா புகைப்படத்திலும் அவர் ஈரம் தோய்ந்த கண்களுடன் இருப்பார்.
இப்படி லாஸ் வேகாஸ் நகரத்தின் பல வின்டேஜ் பாயிண்ட்டில் இருந்து ஒரே மாதிரியான Shots ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன.
அவர்களுக்கு தேவை மிகவும் வித்தியாசமான நைட் ஷாட் ஒன்று.
அது ஒரு மிக முக்கியமான Advert க்கு தேவை என்பதே ப்ராஜெக்ட்.
அது ஒரு மிக முக்கியமான Advert க்கு தேவை என்பதே ப்ராஜெக்ட்.
யாருக்கு தேவை என்பது நமக்கு விற்ற பின் தான் தெரியும்.
இப்படி ப்ராஜெக்ட் என்று வந்துவிட்டால் அவர்களுக்கு தேவை பல நூறு படங்கள் அல்ல.
ஜஸ்ட் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே.
இதற்காக நாம் மெனக்கெடவேண்டும்.
Research, Planning and Execution மிக அவசியம்.
Research, Planning and Execution மிக அவசியம்.
பல நேரங்களில் நாம் எடுக்க நினைக்கும் படம் எடுக்க முடியாமலே திரும்பிய பல போட்டோ ட்ரிப்ஸ் உண்டு.
Especially, ஒரு பக்காவான லாங் exposure பட ப்ராஜெக்ட் பல unknown factors களை உள் அடக்கியது.
சொல்லப்போனால், ஒரு நல்ல புகைப்படம் பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத்தில் ஒசாமா போல் ஒளிந்து இருக்கும்.
நாம்தான் தேடி பிடித்து கொலை செய்ய வேண்டும்.
அது அங்கேதான் இருக்கிறது என்று அங்கு இருப்பவர்களுக்கே தெரியாது.
Research, Planning and Intelligence மூலம் கண்டுபிடிக்க வேண்டும்.
யூகம், லாஜிஸ்டிக்ஸ் என்று பலது உதைக்கும்.
எல்லாம் செட் ஆன பின்னால் sniper படம் போல் ஒரு துப்பாக்கி எடுத்துக்கொண்டு, பைரவா படத்தில் விஜய் போல் ஒரு பெரிய பையுடன் ஒரு உயரமான கட்டிடத்துக்கு போய் சுட்டுத்தள்ளி செய்த Photo கொலைபற்றிய பதிவு இது.
தொடரும்
ஸ்ரீதர் ஏழுமலை
In Sridar’s Camera Club.
https://www.facebook.com/groups/1022183857874493/
Looking forward to the next instalment!
good explanation