நான் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இதோ வந்துவிட்டேன்.
என் சிரிப்பில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள் …நான் நலம்.

இங்கு அனைத்தும் இப்போதைக்கு நலம்.

வான்கூவருக்கு சவால் விடும் பனி.
-12 என்று சொல்கிறார்கள்
இன்றோடு இரண்டு நாள் ஆகிவிட்டது.

கூட இருக்கும் வட நாட்டு இந்தியர்கள் சாப்பாடு போட்டார்கள்.
வெளியில் உள்ள ஒரு Restaurant க்கும் அழைத்து சென்றார்கள்.

சொன்னால் நம்புங்கள்.
இந்து மறைத்து வைக்கப்பட்ட ஒரு மாயா ஜால உலகம்.
எங்கெங்கும் பிரமாண்டம்.

முதலில் பார்த்ததால் ஒருவேளை அப்படிதான் இருக்கும் என்று நினைத்து இரண்டாவது நாளும் வெளியில் சென்று பார்த்தேன்.
ஆளே இல்லாத ஊரில் ஏன் இந்த பிரமாண்டம்?

வான்கூவரில் வசித்த தமிழன் என்பதால் புகைப் படம் எடுக்க கைகள் பர பரத்தன.
புகைப்படம் எடுத்து மாட்டிக்கொண்டால் அதே கைகளால்தான் கம்பியும் எண்ணி, கோதுமை கஞ்சியும் குடிக்க வேண்டும்.
தேவையா? அதான் விட்டுவிட்டேன்.

அகலமான ரோட்டில் ஒல்லியான பெண் போலீஸ்
பார்க்கவே இந்த ஊர் ஒரு ரம்மியம்தான்.

ஆஃபிஸில் வேறு எந்த வேலையும் இல்லை.
பேச்சுத் துணைக்கும் ஆளில்லை.

வீட்டு வேலை செய்ய வேலைக்க்காரிகள் 2 பேர் தருவார்கள் என்று நினைக்கிறன்.
பேச்சு துணைக்கு அவர்களை வைத்துக்கொண்டு, நானே சமைக்கலாம் என்று இருக்கிறேன்.

ஒன்று மட்டும் இப்போது விளங்கவில்லை ….
என்னை ஒரு அலங்கரிக்கப்பட்ட அட்டை பெட்டியில் அடைத்து வைத்து உள்ளார்களா இல்லை
இல்லை ஊரே ஒரே அலங்காகாரமா…

ஒன்று மட்டும் நிச்சயம்

வட கொரியா ஒரு அப்சரா …
அழகில் ஒரு ஆபத்து..

வட கொரிய பொங்கியாங் நகரத்தின்
எதோ ஒரு கட்டிடத்தில் இருந்து

லிங்கி செட்டியின் குரல்
ஸ்ரீதர்.காம் வழியாக