பருத்தி வீரன் படத்தில் பாட்டுக்கு இடையே ஒரு குரல் வரும்?
“என்ன நாயனக் காரே வச்சிட்டு வேடிக்க பாத்துட்டிருக்கீங்க?”
இந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை.
வான்கூவரில் வசிக்கும் திரு.சக்தி கிருஷ்ணா அவர்களின் குரல்தான் இது.
இது மட்டும் அல்ல, மறைந்த டைரக்டர், நடிகர் கொச்சின் ஹனீபா நடித்த மலையாள படத்தின் தமிழ் டப்பிங்கில் நிறைய படத்துக்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார்.
தமிழில் ஒரு சில படங்களில் கொச்சின் ஹனீபாவின் குரலில் பேசிய படங்களில் மதராசபட்டினமமும் ஒன்று.
சக்தி கிருஷ்ணா ஒரு பின்னணி குரல் கலைஞர், பாடகர், கவிஞர், டப்பிங் பட தயாரிப்பாளர். மதர் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார்.
சென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டூடியோ அருகில் “ஆரபி” ரெக்கார்டிங் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.
திரைப்படத் துறையில் 20 வருட அனுபவம் உள்ளவர் .  சின்ன கேரக்டர், காமெடி, வில்லன் ஹீரோ என இதுவரை 1000 படங்களுக்கு வரை டப்பிங் பேசி இருக்கிறார்.
இது தவிர டிவி தொடர்கள், டிஸ்கவரி,NGC, விளம்பர படம், கார்டூன் என்று இவர் குரல் கேட்க்காத இடம் இல்லை. மிக்கி மவுஸ் – கதாபாத்திரத்திற்கு, வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் அங்கீகரிக்கப்பட்ட பின்னணி குரல்கலைஞன் இவர் மட்டுமே . 400 பேரை voice test செய்து, அதில் இவரை தேர்ந்தெடுத்தனர். பக்தி பாடல்கள், டப்பிங் படத்திற்கு பாடல்கள் பல எழுதி உள்ளார். தேசிய விருது பெற்ற மலையாளப் பட இயக்குனர் துளசிதாஸ் அவர்கள் இயக்கத்தில் 2 மாதங்களுக்கு முன் தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் வெளி வந்த நதியா உட்பட ,முழுக்க பெண்களே நடித்திருந்த “திரைக்கு வராத கதை” என்ற திரைப்படத்தில், ஒரு பாடல் எழுதியுள்ளார். தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட் அன்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தில் பொருளாளராக இருந்துள்ளார்.  fefsi யின் பொதுக் குழு உறுப்பனராகவும்  இருந்துள்ளார். தற்போது வேன்கூவர் தமிழ் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார்.
வான்கூவர் என்றுமே கலைக்கு மதிப்பு அளிக்கும் ஒரு ஊர்.
இவரின் திறமை நம் தமிழ் சமூகத்திற்கு மிக அவசியம்.
இவரே இசை அமைத்து இயற்றிய பாடல் தான் இது.
____________________________________________________________________________