என் மகன் பெயர் கிருஷ்: அவன் ஒரு பசுநேசன் !!!

கிருஷ்ணர், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னையை மணந்தார் என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.
நீளாதேவி, யசோதையின் சகோதரர் கும்பனின் மகள் நப்பின்னையாக அவதரித்தார்.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் மனைவியர் ஆவர்.
கிருஷ்ணாவதாரத்தில் நீளாதேவியும், வராக அவதாரத்தில் பூதேவியும், ராமாவதாரத்தில் ஸ்ரீதேவியும் அவதரித்தனர்

கிருஷ்ணர், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னை என்ற நீளா தேவியை மணந்தார் என்பது நம்மாழ்வார் பாடிய நாலாயிரம் திவ்விய பிரபந்ததில் குறிப்பிட்டு உள்ளார்.

என் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஸ்ரீரங்கம் அரவையர் சேவையை அணுகி கேட்கவும்.
கிருஷ்ணரின் வளர்ப்புத்தாய் யசோதையின் சகோதரன் கும்பனின் மகள்தான் அவர்.

தேனினுமினிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் “கிருஷ்ணர் ஆடிய ஜல்லிக்கட்டிற்கு” சான்றாக அமைந்திருக்கும் பாசுரமாவது:

தோளிசேர் பின்னை பொருட்டு எருதேழ் தழீஇக்
கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
தாளினை மேலணி தண்ணனந்துழாயென்றே
நாளுநாள் நைகின்றதால் என்தன் மாதரே
இப்பாடலில், “எருதேழ் தழீஇக் கோளியார்” என்ற தொடர் “ஏழு எருதுகளை வீரமாக அடக்கியவர்” என்று கிருஷ்ணரை குறிப்பிடுகிறது.
த்வாபர யுகத்திலேயே எருதுகளை அடக்கி வீரத்தினை வெளிப்படுத்துவது வழக்கத்திலிருந்தது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

இந்த உலகத்தின் மகா உன்னத கடவுள்களில் கிருஷ்ணரும் ஒருவர்.
அவரே இந்த நவ யுக உலகின் Multi Cultural சமுதாயதின் பிராண்ட் அம்பாசிடர்.

மதம், இனம், ஜாதி உள்ளது என்று எந்த புனித நூலும் சொன்னதில்லை.
பசுவும், காளையும் இல்லாத கோகுலமும் இல்லை. பசுவும்கி காளையும்ரு இல்லாத இந்திய கலாசாரம் இல்லை.

இது என் தனிப்பட்ட நம்பிக்கை.

நாளை கிளம்பும் முன் ….

“I support Jallikattu என்று வான்கூவர் ஆர்ட் கேலரி முன் உரக்க கத்த போகிறேன் கிருஷ்ணா” என்று சொல்லிவிட்டு தான் வருவேன்.
இது என் தனிப்பட்ட நம்பிக்கை. கிருஷ்ணை தினம் துதிக்கவே என் மகனுக்கு கிருஷ் என்று பெயர் வைத்தேன்.

அவர் ஆசி இல்லாமல் ஏது என் வாழக்கை?

கடவுள் கலாச்சாரத்தை உருவாக்குவதில்லை.
கலாச்சாரம் உருவாக்கவே கடவுள் தோன்றுகிறார்.
அவதாரமாக.

குறிப்பு:
———————————-

நம்மாழ்வார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய 12 ஆழ்வார்களில், முக்கியமானவராக கருதப்படுபவர் நம்மாழ்வார். பிறந்தது முதல் வாய்பேச முடியாமல் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரால் ஆட்கொள்ளப்பட்டு, பல பாசுரங்களை பாடினார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 1352 பாசுரங்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டவை. ஸ்ரீரங்கத்தில் அரவையர் சேவை, நம்மாழ்வாரை சிறப்பித்து சேவை சாதிக்கப்படுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தம்

மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை எடுத்துரைக்கும் 4000 தமிழ் பாசுரங்களைக் கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம், 12 ஆழ்வார்களால் பாடப்பட்டு, நாதமுனி என்பவரால் 9-ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழ் வேதம் என்று போற்றப்படும் திவ்ய பிரபந்தம், அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும், வைஷ்ணவர் இல்லத் திருமணங்களிலும் இன்றும் பாடப்பட்டு வருகிறது.