அந்த காலத்தில் இங்கிலாந்து கட்டிய பல கப்பல்களின் பெயர் HMS என்று ஆரம்பிக்கும்.
HMS என்றால் Her Majesty’s Ship …. ராயல் நேவி கட்டிய கப்பல் என்று அர்த்தம்.
பனி பிரதேசம் தொடர் எழுதும் போது இதைப் பற்றி எழுதலாம் என்று இருந்தேன், நியூஸ் முந்திக்கொண்டது.

மேட்டர் இதுதான். அந்த காலத்தில் இங்கிலாந்தில் இருந்து உலகில் உள்ள பல இடங்களுக்கு கப்பல்களில் மாலுமிகளும் இயற்கைவியாளர்களுக்கும் கிளம்புவார்கள்.
ஏன் ..evolution எனும் உன்னத அறிவியலை உலககிற்கு சொன்ன சார்லஸ் டார்வின் போன்றோரும் இதே போல் கப்பல்களில் கிளம்பியவர்கள்தான். அவர் சென்றது HMS பீகிள்.

இது HMS Teror எனும் கப்பலை பற்றியது. இது 1813 ல் கட்டப்பட்ட போர் கப்பல்.
பின்னாளில் ஆர்டிக் பகுதியை ஆராய பல்வேறு பயணங்களில் ஈடுபடுத்தப்பட்டது. 1945 ஆண்டுக்கு முன்னரே இரண்டு முறை அது ஆர்டிக் எல்லை வரை சென்று வந்துவிட்டது.
1985 ஆம் ஆண்டு sir. ஜார்ஜ் பிராங்கிளின் என்பவரின் தலைமையில் ஆர்டிக் கடலின் உள்ளெ புகுந்து களமாட திட்டம் தீட்டபட்டது.

இவர் இதற்கு முன் மூன்று முறை ஆர்டிக் கடலை கப்பலில் சென்று களமாடிய ராணுவ தளபதி.
இந்த முறை சென்றால் அது நான்காவது முறை. அவருக்கு அப்போது வயது 59.

பயணத்தின் முக்கிய நோக்கம் ஆர்டிக் பிரதேசத்தின் magnetic data வை கலெக்ட் செய்வது. பயணத்துக்கு இரண்டு கப்பல்கள் ரெடி செய்தார்கள்.
ஒன்று Terror. இன்னொன்று Erebus. பெயிண்ட் முதல் என்ஜின் வரை எல்லாமே சக்தி வாய்ந்ததாக மாற்றப்பட்டது.

இந்த நெடும் தூர பயணத்துக்கு தேவையான எல்லா உணவு மற்றும் இதர ஐட்டம்கள் இரண்டு கப்பல்களிலும் ஸ்டாக் செய்யப்பட்டன.
இரண்டு டன் புகையிலை, 8000 டன் உணவு கேன்கள், 8000 லிட்டர் டாஸ்மாக் ஐட்டம், 1500 புத்தகம் கொண்ட லைப்ரரி.

இது கடந்து செல்ல வேண்டிய பாதை நார்த் passage என்பார்கள். இதுவரை எந்த கப்பலும் செல்லாத பாதை.
நார்த் passage என்றால், பூமியின் மேல் தட்டில் உள்ள உறைந்த பனியை பெயர்த்து ஆர்டிக் பனி பிரதேசத்தை தாண்டி பூமியின் மேல் தட்டில் பயணித்து செல்லும் அதி பயங்கர பாதை.
19 May 1845 ஆண்டு கென்ட் எனும் இடத்தில இருந்து கிளம்பினார்கள்.
மூன்று மாதம் கழித்து கடைசியாக கனடாவின் baffin bay அருகில் பார்த்தாக தகவல். அத்தோடு சரி.
அந்த இரண்டு கப்பல்களும் போன வாரம் வரை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது.
மொத்தம் 129 பேர், 15 ஜெனரல்கள் உட்பட என்ன ஆனார்கள் என்பது ஒரு கடல் மிஸ்டரி – மிஸரி.

2010 முதல் அட்ரிக் பகுதியில் அதிக கவனம் வந்தது. காரணம் கடந்த 150 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு பனி உருக ஆரம்பித்து உள்ளது.
ஆங்காங்கே நிலப் பரப்பு தெரிய ஆரம்பித்து உள்ளதால் ஆர்டிக்கின் நிலப்பரப்பை சொந்தம் கொண்டாட பல வட ஆர்டிக் நாடுகளுக்கு இடையே பஞ்சாயத்து ஆரம்பித்து உள்ளது
யார் முதலில் தொட்டார்களோ அவர்களுக்கு நிலம் சொந்தம் என்ற அதர பழைய ரூல் இன்னமும் கூட உண்டு.

இதனால் கனடா, இங்கிலாந்து என போட்டி போட்டு ஆர்டிக்கில் தன் நாட்டுக்கு சொந்தம் கொண்டாட ஏதாவது கிடைக்குமா என்று 2010 ல் இருந்து தேட ஆரம்பித்தார்கள்.
2014 ல் பாரக்ஸ் கனடா, தொலைந்த ஒரு கப்பலை ( HMS Erebus) கண்டுபிடித்தது. அதில் உள்ள எலும்பு கூடுகளை ஆய்வு செய்த போது அதில் லெட் பாய்சன் இருப்பது தெரிய வந்தது.
Tinned உணவு பொருளில் விஷம் வந்து அந்த உணவை உண்டு இறந்து இருக்கலாம் என்று ரிப்போர்ட் சொன்னார்கள்.

அடுத்த கப்பலை தேடும் பனி ஆர்டிக் research foundation தொடர்ந்தது.
Sammy Kogvik எனும் inuvik பழங்குடி இந்த டீமில் சேர்ந்தார்.
அவர் சுமார் 7 வருடம் முன்பு தன் நண்பருடன் விளையாடும் போது ஒரு கப்பலின் ஒரு பகுதியை உறைபனியில் கண்டதாக சொன்னார்.
தன் நண்பரை காமெராவில் போட்டோ எடுக்க சொல்லியுள்ளார். பின்னர் அந்த கேமரா தொலைந்து போனதால் இதை யாரும் நம்ப போவதில்லை என்று விட்டுவிட்டார்.

இதை போல் முன்னர் ஒரு முறை ஆர்டிக் பழங்குடிகள் பொழுது சாயும் வேளையில் இரண்டு கப்பல்களை கண்டோம் என்று பாரக்ஸ் கனடாவிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் செவி வழி கதையாக சொன்னார்களாம்.
அவர்கள் சொன்ன இடத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தேடி உள்ளார்கள்.

இந்த முறை Sammy Kogvik, தான் வேலைக்கு சேர்ந்த கப்பலின் காப்டனிடம் தன் 7 வருட பழைய கதையை சொல்லி உள்ளார்,
வண்டிய திருப்புடா என்று ஆடர் இட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் terror கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லோரும் எப்படி இறந்தார்கள் என்று இனி தெரியவரும்.
ஆர்டிக் ஒரு பகுதியை இங்கிலாந்து கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.