நேட் ஜியோ புகைப்படக்காரர் கிரிஸ்டியன் ஜீலர் காங்கோ காட்டில் 2013 ல் ஒரு நாள் பயணித்துக் கொண்டு இருந்தார்.

காங்கோவில் சுமார் 15 வருடமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்ற செய்தி கேட்ட பின்புதான் இரவு தூங்க போவான்.

அவன் விழித்தால் அடுத்த நாள் அவனுக்கு செய்தி.
விழிக்காவிட்டால் அது இன்னொருவனுக்கு செய்தி.

காங்கோ வைரக் கற்கள் துப்பாக்கி தோட்டாவாகி வெடித்து சிதறும் வெளிச்சம் அந்த நாட்டின் காட்டை விட்டு இன்னும் வெளியில் வரவில்லை.
இதில் இறந்த காட்டு உயிரினங்கள் கோடியை தாண்டும்.

இவர் அந்த காட்டில் தன் புகைப்பட கருவியுடன் நடக்கும் போது…

இந்த நான்கு வயது சிம்பன்சி டக் என்று அவர் கமேரா முன்பு தாவிக் குதித்து ஒரு பார்வை பார்த்தது.
பின்..சில வினாடிகளில் காற்றில் கரைந்தான் இந்த குட்டிப் பையன்.

இந்த சிம்பன்சி வகையான பொனொபோ ஆப்ரிக்காவின் ரிப்ட் பள்ளத்தாக்கின் பூர்வ குடி.
மரபணு உயிரோட்ட விதியின் படி இவன்தான் மனிதனுக்கு மிக நெருங்கிய குரங்கு இனம்.
உலகில் இன்னும் உயிர் வாழும் வெறும் 40,000 முப்பாட்டன், பூட்டனின் ஒரே பேரன்.

இன்று உலகில் வாழும் மனிதனின் DNA வும் இந்த பொனொபோ சிம்பன்சியின் மரபணுவும் 98.6% ஒத்துபோவும்.

மீதம் வெறும் 1.4 % சதவீதம் என்றுதானே என்று நினைக்காதீர்கள். இதில் 35 மில்லியன் சிங்கிள் நியூங்கிலியாய்டு மாற்றங்கள், ஐந்து மில்லியன் இடை செருகல்/ நீக்கல் ஜீனோம் நிகழ்ச்சிகள், மற்றும் குரோமொசோம்களின் வரிசைமாற்றங்கள் இந்த 1.4 சதவீதத்தில் பொதிந்து உள்ளன.

இந்த சிம்பன்சி மனிதனாக மாற ஜஸ்ட் ஒரு மில்லியன் ஆண்டு மட்டுமே தேவைப்பட்டது.

இத்தனை சிக்கல்களுடன் என்னை விட்டு பிரிந்த மனித இனமே ….
இன்னும் நான் இவ்வுலகில் எத்தனை நாள்?

இந்த ஒரு கேள்வியை மனிதன் முன் கேட்டுவிட்டு போய் விட்டான் இந்த குட்டி பையன்.
இந்த ஒரு பார்வையில்தான் எத்தனை பதில் தெரியாத கேள்விகள்?