நேத்து நைட் மொத்தம் மூணு மேட்டர் நடந்தது.

என் Facebook ஸ்ரீதர்.காம் ப்ரொபைலில் என் மொபைல் நம்பர் இருக்கிறது.

நைட் ஒரு மணிக்கு ஒரு போன்.
இந்தியன் சென்ட்ரல் ஸ்போர்ட்ஸ் மினிஸ்டரியில் வேலை பார்க்கும் ஒரு உயர் அதிகாரி பேசினார். 15 நிமிடம் பேசினார். விரிவா நாளை பேசுறேன்னு சொல்லி வைத்து விட்டார்.

அடுத்து மூணு மணிக்கு ஒரு போன்:

முன்னாள் இந்திய ஒலிம்பிக் ஹாக்கி டீம் பிளேயர் நான் என்று ஒரு குரல் தழு தழுத்தது. என் பதிவை மும்பை தமிழர் ஒருவர் இவருக்கு translate செய்து படித்ததாக சொன்னார். ஒரு Article ஆங்கிலத்தில் எழுத முடியுமா என்று ஹிந்தி பாதி ஆங்கிலம் மீதியில் கேட்டார். இந்தியா வரும் போது கண்டிப்பாக மீட் செய்ய வேண்டும் என்றார்.

அடுத்து நாலாரை மணிக்கு போன் அடித்த போது தூக்க கலக்கம். போனை சுவிட்ச் ஒப் செய்து தூங்கிவிட்டேன்.

காலையில்தான் எழுந்து பார்த்தேன்.
போனில் 4.30 மணிக்கு ஒரு message வந்து இருந்தது.

அந்த மெஸ்சேஜ் இப்படித்தான் ஆரம்பித்து இருந்தது…

ஹாய் ஸ்ரீதர்,
This is Kutraleeswaran…Saw your write-up about me. என்று வரிகள் ஆரம்பித்தன.
கடைசியில் ஜெய் ஹிந்த் என்று முடித்து இருந்தார்.

நான் எழுதிய பதிவை குற்றாலீஸ்வரனே படித்துவிட்டு எனக்கு அதிகாலையில் எழுதிய வரிகள் இவை. முதல் வரியையும் கடைசி வரியையும் பதிவிட்டு உள்ளேன். இடைப்பட்ட வரிகளைகளை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்.

இவ்வளவு நடந்தும், அவர் மனதில் இந்தியாவை பற்றிய நம்பிக்கை போகவே  இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதில் ஒரு சதவீதம் இந்திய விளையாட்டு துறைக்கு இருந்து இருந்தால் கூட நாம் இன்று இருக்கும் நிலையே வேறு மாதிரி இருந்து இருக்கும். கொடுமை.

அந்த கடைசி “ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தை, அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதை காட்டிவிட்டது.

அதை அவர் ரியோவில் நீச்சல் மேடையில் அல்லவா சொல்லி நாம் கேட்டு  இருக்க வேண்டும்.

இந்த மனிதரையா இந்தியா இழந்தது?

இந்த தங்க மீன்  நீந்திய கடல் இந்த உலகம் அழியும் வரை இருந்து இந்த தமிழனின் கதையை உலகிற்கு சொல்லும்.

வாழ்க பாரதம்.

முற்றும்.
ஸ்ரீதர் ஏழுமலை