இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ்.
ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள்.
குற்றாலீஸ்வரன் என்று சொன்னால்மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும்.
இவர் ஒரு தங்க மீன்.
13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி கடந்தவர்.
அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி மிர் சென்னின் உலக சாதனையை முறியடித்தார். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி நீந்தி உலக கடலையே கலக்கினார். கின்னஸ் முதல் குப்புசாமி வரை இந்த ஈரோடு மாணவனை திரும்பி பார்த்தது.
அப்போ வருடம் 1994.
நடுத்தர குடும்பம்.
இதுதான் டேக் லைன்.
உடனே தமிழ்நாட்டில் எல்லோரும் தன் பையன் போட்டு இருந்த ஸ்கூல் யூனிபோர்மை எல்லாம் கழட்டி விட்டு, குட்டி ஜட்டி மட்டும் மாட்டிவிட்டு, தன் மகன்தான் இனி அடுத்த குற்றாலீஸ்வரன் என்ற நம்பிக்கையில் குடும்பத்தோடு மஞ்சள் கட்டை பையில் ஜட்டி பனியனுடனும் தோளில் துண்டோடும் ஓடி “தும் தும்” என்று மகன்களை கிணற்றிலும் ஆற்றிலும் பிடித்து தள்ளிய தமிழகத்தின் பொற்காலம் அது.
ஒரு உலக சாதனை, கோடி இளம் சாதனையாளர்கள் தட்டி எழுப்பும் வல்லமை கொண்டது. குற்றாலீஸ்வரன் தட்டி எழுப்பியது மொத்த இந்தியாவை.
இந்த சலசலப்பு, அடுத்த 3 வருடத்தில் முடியும் போது குற்றாலீஸ்வரனுக்கு அர்ஜுனா விருது தன் 17 வயதில் கிடைத்தது.
அதற்கு பின் அவர் என்ன ஆனார்?
அவரை நம்பி கிணறில் குத்திய பல இந்திய சிறுவர்கள் என்ன ஆனார்கள் ?
காத்து இருந்து இருந்து பின் எல்லோரும் மறந்து போனார்கள் என்பது மட்டுமே உண்மை. நாமும் மறந்து போனோம்.
நடந்தது இதுதான்.
இவரின் திறமையை பார்த்த இத்தாலிய நேஷனல் கோச் நீ இத்தாலிக்கு வந்துவிடு. உன்னை இந்த நாடு தத்து எடுத்து உன் வாழ்க்கையில் என்ன என்ன தேவையோ அனைத்தும் இந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். இத்தாலிய பிரதமரிடம் பேசி அனுமதி கூட வாங்கி ஆகிவிட்டது. ஓரே கண்டிஷன்…நீ இனிமேல் இத்தாலி நாட்டுக்கு மட்டுமே நீந்த வேண்டும். மற்றவற்றை என் நாடு பார்த்துக் கொள்ளும் என்றார். என்ன சொல்கிறாய் என்றார்?
13 வருட வயதில் யாரிடமும் கேட்காமல் எனக்கு இந்தியாதான் உயிர்.
உயிர் இல்லாமல் இந்த மீனுக்கு நீந்த வராது, மன்னிக்கவும் என்று சொல்லி தங்க மீனானார் குற்றாலீஸ்வரன். அதையே அவர் பெற்றோரும் ஆமோதித்தனர்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் ….
சாதனை நடத்தியவுடன் பேசியவர்கள், ஊக்கமளித்தவர்கள், இந்திய அரசாங்கம், அரசு, அரசியவாதிகள், சோ called இந்தியன் சிஸ்டம் எல்லாம் அவரை மெதுவாக கை கழுவி விட ஆரம்பித்தன.
ஒரு long distance ஸ்விம்மிங் போட்டியில் உலக அளவில் கலந்து கொள்ள பணம் தேவை. முதலில் அரசாங்கத்தை நாடினார். இங்கே அங்கே என்று அழைக்கழித்தார்கள். அடுத்து பிரைவேட் நிறுவனங்களை நாடினார். கடலில் நீந்தும் போது கூட்டம் வராது என்று கிரிக்கட் பக்கம் திரும்பி கொண்டார்கள்.
அவர் அப்பாவே தன் சேமிப்பில் இருந்து செலவு செய்து போட்டிக்கு அனுப்பினார்.
ஜெயித்தால் கைதட்டுவார்கள். ஆனால் அவரின் அடுத்த போட்டிக்கு partial sponsorship கூட கிடைக்காமல் அவதிபட்டார். தனக்காக தான் தந்தை ஒவ்வொரு இடமாக sponsorship தேடி அலைவது பொறுக்காமல் தன் ஸ்கூல் பென்சிலில் swimming என்று எழுதி பின்னால் Full-stop ஒன்றை கண்ணீரில் வைத்தார்.
புள்ளி வைத்தது அவர் என்றாலும் வைக்க வைத்தது நாம்தான்.
காரணம் அப்போது நாம் எல்லோரும் மிகவும் பிசி. I mean பயங்கர பிசி.
ஒரு பக்கம் 10 மணிக்கு ராமானந் சாகரின் இராமாயணம் சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது. அருண் கோவிலும், தீபிகாவும் காட்டில் அலையும் போது தாரா சிங் ஹனுமானாக பறந்து கொண்டு இருந்தார்.
பறப்பது முக்கியமா இல்லை நீந்துவது முக்கியமா?
குற்றாலீஸ்வரன் பார்த்து குளத்தில் குதித்த ஸ்கூல் மாணவர்கள் ஈர ஜட்டியுடன் இழுத்து வந்து டிவி பெட்டி முன் அமர வைத்தார்கள் பெற்றோர்கள்.
ஜட்டி காய்ந்தது.
அறிவு தேய்ந்தது.
Idiot box முன்னால் குடும்பமாக இடியாப்பம் உண்டார்கள்.
இதிகாசத்தை நம்பாதவர்களுக்கு வேறு கடவுள்கள் இருந்தார்கள்.
ஜெயயலலிதா எனும் கடவுளை கைது செய்ததற்கு பஸ்ஸில் மாணவர்களை உயிரோடு வைத்து எரித்தார்கள். கருணாநிதி, வைக்கோ சண்டையில் சில தொண்டர்கள் தீக் குளித்து செத்தார்கள். ராமதாஸ் மரம் வெட்டினார். அன்புமணி மருத்துவ கல்லூரியில் மேங்கோ மரம் நாட்டார். அத்வானி ரதம் ஓடினார். சல்மான்கான் மான் சுட்டார். முத்துராமன் ஊட்டியில் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். ஸ்டாலினுக்கு பேர பிள்ளை பிறந்தான். பிரியங்கா காந்திக்கு வளைகாப்பு நடந்தது. ராகுல் காந்தி ரொட்டி தின்றார். ராஜீவ் காந்தி ஒரு முறை இறந்தார். காந்தி வருடா வருடம் அக்டோபர் மாதம் பிறந்தார். சேகுவாரா முதல் செங்கிஸ்ஸான் வரை நேஷனல் ஹீரோ ஆனார்கள். விமான நிலைய கண்ணாடி உடைந்தாலே அது breaking news.
Talent Shows நாடு எங்கும் நடக்க ஆரம்பித்தது.
டிவியில் ஆப்பிளை வாயால் எடுத்து கடித்து காட்டினார்கள்.
ஜோக் சொல்லி சிரிக்காதவனுக்கு பரிசு கொடுத்தார்கள்.
Multiple Choice Questions கேட்டு கோடி வரை வென்றார்கள். செல்ல குரலுக்கு செல் போனில் ஓட்டு போட்டார்கள். நீயா நானாவில் கணவனும் மனைவியும் எதிர் எதிரே சண்டை போட்டுவிட்டு ஒன்றாக மீட்டர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று ஒரே கட்டிலில் படுத்து தூங்கினார்கள். அறிவு ஜீவி குழந்தைகள் அடுத்த நாளே பிறந்தது.
இப்படி இந்தியா முழுவதுமே பிசியோ பிசி.
..நிற்க..
குற்றாலீஸ்வரன் யோசித்து பார்த்தார்.
இத்தனை பிஸியான சமூகத்தில் பூவா உண்ண நான் கடலில் நீந்திக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து இத்தாலிகாரனுக்கு கொடுத்த பதில் போல் இல்லாமல் அமெரிக்க விசா ஆபீசரிடம் உண்மையை சொல்லி இன்று IBM ல் சாப்ட்வேர் என்ஜினீயராக கலிபோர்னியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
யோசித்து பாருங்கள்.
இன்று அமெரிக்காவில் அவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை பார்க்கும் போது எப்படி அவரின் மனது என்னவெல்லாம் நினைத்து பார்க்கும் ? எப்படி வலிக்கும்?
இந்தியாவை விட்டு வெளியே வந்தவர்களில் பல குற்றாலீஸ்வரன்கள் இருக்கிறார்கள்.சாதனை படைத்த, படைக்க இருந்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இப்படி பல குற்றாலீஸ்வரன்களை இந்தியா உருவாக்கியது தான் இந்த நூற்றாண்டின் இந்தியாவின் மிகப் பெரிய இழப்பு.
எல்லோரும் கொத்தி எடுத்த Restaurant பிளேட்டில் வாடும் கடைசி சிக்கன் பீஸ் போல இன்று இந்தியாவில் மிச்சம் இருக்கும் திறமையை ஒவ்வொரு துறையிலும் கைவிட்டு எண்ணலாம்.
இதை Brain and Talent Drain என்பார்கள்.
இது ஒழுகி ஒழுகிதான் இன்று ரியோடி ஜெனிரோரோவில் நாறிக்கொண்டு இருக்கிறது. ஒலிம்பிக் என்பதால் இந்த துறையில் இது வெளியே தெரிகிறது. தெரியாத பல துறைகளில் இருக்கும் நாற்றத்தை மக்கள் சுவாசிக்க பழகி கொண்டார்கள்.
உண்மையில், இந்தியாவில் தினம் தினம் பல தங்க மீன்கள் இறந்து இந்துமகா சமுத்திரம் வற்றிக்கொண்டு இருகிறது. தப்பி பிழைக்க பல மீன்கள் பசிபிக் கடல் நாடி வந்து பல வருடங்கள் ஆகிறது.
அதில் தப்பி பிழைத்த குற்றால் ரமேஷ் எனும் “தங்க மீனின்” கதைதான் இது.
அதில் தப்பி பிழைத்த குற்றால் ரமேஷ் எனும் “தங்க மீனின்” கதைதான் இது.
Terrible to know na….!
Terrible to know na….!
Well said!
Well said!
Reality makes me feel bad and sad .. Very well written article.
Reality makes me feel bad and sad .. Very well written article.
நிதர்சனம் வேறு கனவு வேறு . தெளிந்த நடை..கருத்துக் கோர்வை.பிரமாதமான எண்ண வெளிப்பாடு !
நிதர்சனம் வேறு கனவு வேறு . தெளிந்த நடை..கருத்துக் கோர்வை.பிரமாதமான எண்ண வெளிப்பாடு !
Very sad
Very sad
Well documented
Well documented
very sad and heart breaking
very sad and heart breaking
🙁 🙁
🙁 🙁
Wow! Very nicely written article on brain and talent drain… this is the fact in India. Though India has improved in so many areas, there are some basic things there that will never change.. very unfortunate and very sad…

அருமை..படித்து முடித்தபோது மனம் கனமாகிவிட்டது.
LinkedIn profile பார்த்தேன்,, இவரும் Calgary வந்து செட்டில் ஆகிட்டார் போல இருக்கு. விதி வலியது.
அருமை..படித்து முடித்தபோது மனம் கனமாகிவிட்டது.
LinkedIn profile பார்த்தேன்,, இவரும் Calgary வந்து செட்டில் ஆகிட்டார் போல இருக்கு. விதி வலியது.
Larry Man
அப்ப அவரை இங்க கூப்பிட்டு இங்க ஒரு விழா எடுத்திட வேண்டியதுதான்.
100%. Nan ready..
Larry Man
அப்ப அவரை இங்க கூப்பிட்டு இங்க ஒரு விழா எடுத்திட வேண்டியதுதான்.
100%. Nan ready..
nice writing sridhar
nice writing sridhar
படித்ததில் வலித்தது !
படித்ததில் வலித்தது !
ஒரு தகுதியுள்ள நீச்சல் வீரருக்கு , தகுந்த நேரத்தில் உதவத் தவறிய அரசாங்கத்தை என்னவென்று சொல்வது? மனம் வெறுத்து போகிறது. ஸ்ரீதர் , அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ஒரு தகுதியுள்ள நீச்சல் வீரருக்கு , தகுந்த நேரத்தில் உதவத் தவறிய அரசாங்கத்தை என்னவென்று சொல்வது? மனம் வெறுத்து போகிறது. ஸ்ரீதர் , அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
அருமையான கட்டுரை… கழுத்து அறுபட்ட நிலையிலும் வெளியில் சொல்லாமல் தவிக்கும் எத்தனையோ இளம் வீரர்கள் / வீராங்கனைகள் இவரைப் போல உள்ளனர். இந்திய ஹாக்கி பெண்கள் அணியை சற்றொப்ப முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் நிகழ்விற்குத் தகுதி பெற வைத்த அணித்தலைவி, தலைமைப் பொறுப்பிலிருந்து மட்டுமல்ல … அணியிலிருந்தே நீக்கப்பட்ட கொடுமைக்குச் சொந்தக்கார நாடு, நமது தாய்நாடு!

Shocking …. but reality?
Shocking …. but reality?
Super ji
Super ji
http://tamil.oneindia.com/news/tamilnadu/an-fb-post-about-kutraleeswaran-259953.html
http://tamil.oneindia.com/news/tamilnadu/an-fb-post-about-kutraleeswaran-259953.html
ஆம் நம்நாடு ஒரு நல்ல நீச்சல் expertஐ இழந்து விட்டது.இன்னு ம் இந்தlist ல்எவ்வளவுபேர்களோ தெரியவில்லை.Happy to note that he has taken a nice decision to safe guard his future.if the situation is like this ,why should we blame the youngsters that they are going toU k ,U .S and othercountries
All the Best Ramesh
May God bless you.

PAINFUL……
PAINFUL……
நல்ல பதிவு.Sridar Elumalai.
மடைதிறந்த வெள்ளம் போல் கொட்டித் தீர்த்து விட்டீர்கள் . வேறு எதோ shared post ல் உங்கள் பதிவு 4000 likes ,shares என்று அதகளபட்டுக் கொண்டிருக்கிறத்து. வாழத்துக்கள்.
இதைப் படிக்கும்போது மரிய இதயம் ,சத்துவாச்சேரி பளுதூக்கும் வீரர்கள் முதலியோர் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை .
சில வருடங்கள் முன்பு நான் மலேசியாவில் இருந்த போது நடந்த உலக கேரம் போட்டியில் சென்னையை சேர்ந்த சேரி பகுதியில் இருந்து வந்த இரண்டு மூன்று பெண்கள் அசால்டாக எல்லா gameகளையும் வென்று வெளுத்துக் கட்டியதைக் காண நேர்ந்தது. ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனரின் மகள். சரியாக சாப்பிட கூட வழியில்லாத மாதிரி தெரிந்தது.
தங்க மீனுக்காகவது அமெரிக்க தண்ணீர் தொட்டி கிடைத்தது.
நம்மூர் சேற்று செந்தாமரைகள் சேற்றோடவே மடிய வேண்டியதுதான் .
எனக்கென்னவோ இந்தியாவின் சாபமான. மேல் தட்டு பசப்பு இங்கேயும் வேலைகாட்டுகிறது என்றே தோன்றுகிறது .
கிரிக்கட் குதிரைகளை கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுக்கும்,மேலாதிக்க சாதியினரால் நிரம்பி வழியும் இந்திய corporate இவர்களைப் போன்ற எளியவர்களுக்கு ஒரு கிள்ளுக்கீரையையும் எறிய ஏன் மனம் வருவதில்லை என்று புரியவில்லை ?
இதில் யாருக்கும் வெட்கமில்லை.

சோகமான உண்மை ..
அருமையான பதிவு ..!
சோகமான உண்மை ..
அருமையான பதிவு ..!
azhavechitteenga sir, Neenga idahi theriyappaduthrirukkatti engallukku indha manidhar patri therindiurukkadu, Nanri
azhavechitteenga sir, Neenga idai theriyappaduthrirukkatti engallukku indha manidhar patri therindiurukkadu, Nanri
Lingi Chetty
காலையில் எழுந்து பார்தேன் ஸார். உங்கள் கமெண்டுக்கும் பல லைக்ஸ்.
கேரம் சாம்பியன் மரியா இருதயத்தை ஒரு முறை சந்தித்து உள்ளேன். அர்ஜுனா விருது பெற்ற ஒரே கேரம் பிளேயரும் அவரே. அவரின் நிலமையும் இதேதான்.

இதயம் விம்மி வெடித்த
ஒரு அபாரமான பதிவு!
இதயம் விம்மி வெடித்த
ஒரு அபாரமான பதிவு!
Shame to know how sports people are treated and encouraged in India.. excellent write-up????????????
Shame to know how sports people are treated and encouraged in India.. excellent write-up????????????
thala, unga post ah nan potrundhen, 334 share, idhula sila senior journalist lam irukanga. me too got some msg in inbox. I told this is not my write up and I directed them to your profile.
நன்றி கண்ணன்

Just now vinod read the post for me
. awesomeee
Thanks. Ramya Vinod
Just now vinod read the post for me
. awesomeee
Thanks. Ramya Vinod
Another one…
https://www.youtube.com/watch?v=Fcre4nQZWa0
Must watch..impact of thanga meen..sridar !!!hats off !!!
Another one…
https://www.youtube.com/watch?v=Fcre4nQZWa0
Must watch..impact of thanga meen..sridar !!!hats off !!!
An Excellent Post. It shows how insensitive we are in neglecting the potential.
Sorry bro, ithai ippathaan paarka, padikka mudinthathu. I open facebook mostly for your writing. treat to read. well composed. Collected lot of information. We all are proud of you to reveal the hidden and untold truth. Salute to Kutral Ramesh. Now he is fishing and inventing coding for IBM. Ungal (Ramesh) mana vedhanaiyil naan endrum pangeduthukolven. Mana ganathudan……..