கபாலியின் ஹீரோ 25 வருடமா சிறையில் இருக்கும் ஒரு கேங் லீடர்.
டான்னு அவங்களே சொல்லிக்கிறாங்க.

படத்தின் ஒன் லைன் இதுதான்.

படம் ஆரம்பிக்கும் போது கபாலிக்கு குடும்பம் இல்லை. படம் முடியும் போது கபாலியே இல்லை.

அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி என்பதை அவர் சிறையில் படிக்கும் ” சந்தா மாமா ” எனும் புத்தகத்தை வைத்து படிப்பது போல கதை ஆரம்பிக்கிறது.
அவர் சிறையில் இருந்து வெளியில் வரும் போது எடுக்கும் இரண்டு புல் அப்ஸ் – இன்னும் அவர் strong என்பதை நமக்கு புரிய வைக்கிறது.

இப்படி ஒரு பெரிய பீல்டப்புடன் வெளிய வரும் போது…
இனி படம், பட்டாசா போக போகுதுனு நாம் சீட் முனைக்கு வந்து உட்காருவோம்.

அப்ப ஒரு hand shake.

அப்ப பார்த்து ஒருத்தன் கபாலிக்கு சந்துக்குள்ள கைவிட்டு கையை புடிசிச்சு நம்பிக்கையா சொல்லுவான்
” தலைவா ..நீ இப்ப போ …நான் ரெண்டு மாசத்தில் வெளிய வரேன்னு’ கைதட்டி சொல்லுவான்.
நானும் அப்படித்தான் அவன் சொன்னதை நம்பினேன்.
அப்புறம் ஒவ்வொருத்தரா கை தட்டி, கடைசியில் தியேட்டரே கைதட்டி படம் அதகளமா ஆரம்பிச்சது.

இதில் எல்லாரும் ஒண்ணு மிஸ் செய்துட்டோம்.
சிறையில் கை கொடுத்து வெளிய வரேன்னு கபாலிக்கு சொன்னவன் படம் முடியும் வரை வரவே இல்லை.

பத்து நிமிஷம் தான்.
அவனும் வரலை. கடைசி வரை கபாலியும் வரலை.

ஏன்னு பார்ப்போம்…

இவர் ஒரு …

டாப்டா டக்கர் டானா ?
சீர் திருத்தவாதியா ?
சமூக புரட்சியாளரா ?
நோ ஜாதி தலைவரா?
கேங் லீடரா ?
பாசமுள்ள புருஷனா?
அன்புள்ள அப்பாவா ?
இல்ல புக் படிக்கிறவரா?
இல்லை ஸ்கூல் நடத்தும் வாத்தியாரா?
யாரு சார் யாரு ?

கபாலி என்பவர் யார் என்பதை தெளிவா குழப்பம் இல்லாம ஒரு அட்டகாசமான திரைக்கதையில் ரஞ்சித் சொல்லி இருக்கலாம்.
ஆனா அவர், மேல் சொன்ன எல்லாம் சேர்ந்த ஒரு Wind  Mobile –  bundle pack தான் கபாலின்னு சொன்னதுதான் படத்த்தின் மிகப் பெரிய வீக்னஸ்.
Signal இல்லாத Service க்கு wind  மொபைல் ஓனர் தாணு செய்த ப்ரோமோஷன் ஓவர்.
சில இடத்தில் சிலருக்கு signal வரும். சிலருக்கு வராது.
சிலருக்கு மிகவும் பிடித்தும், சிலருக்கு பிடிக்காமல் போனதுக்கு மேல் சொன்ன bundle pack தான் காரணம்.

ரஜினி டவர் கீழயே வீடு கட்டி 20 வருஷமா இருக்கிறவனுக்கு இது பத்தி கவலை இல்லை.
ஏன்னா அவன் பாரம்பரிய லாயல் customer. அவங்க போனுக்கு மட்டும் லாயலடி plans இருக்கும்.

அதனால் அட்வெர்ட் பார்த்து, நம்பி வாங்கி signal கட் ஆனவங்க மட்டும் படிங்க.

ரஜினி நல்லா நடிச்சு இருக்கார். நானும் அதைத்தான் சொல்கிறேன்.
ரஜினியின் மேஜர் ஸ்ட்ரென்த் அவர் characterization adaptation.
ஆட்டோ driver வேஷம் போட்டாலும் அதை தன் கேரக்டராக மாற்றி விடும் திறமை உள்ளவர்.
ஆடியன்ஸுக்கு தான் யார் என்பதை ஒரே ஒரு சீனில் சொல்லி விடுவார்.
ரஜினி நன்றாக நடித்தார் என்பார்வர்களிடம் படத்த்தில் ரஜினி யார் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு விதமாக யோசிக்க வைத்ததுதான் இந்த படத்தின் வீக்னஸ்.

இதுவரை அவர் படங்களில் எதுக்குமே ஆடின்ஸ்களை குழம்ப மாட்டார்.
சட் சட்டு முடிவு செய்து action னில் இறங்கும் quick thinker character தான்.
இது கபாலி character க்கு மட்டும் அல்ல ஒரு gang லீடர் என்றால் இவைதான் பண்பு.

தாவுத், சோட்டா ஷகீல், டோனி லீ இப்படி எல்லாரும் சட் சட்டுனு உட்காந்த இடத்தில் இருந்தே எடுக்கும் பாத்திரத்த்தில் கபாலி மட்டும் NON PROFIT ORGANISATION தலைவர் போல ஓடி ஓடி தேடுகிறார்.
பிள்ளாக்ககா பைய்யன் கதவு தட்டுனா எல்லாம் பயப்படும் ஒரு கேரக்டர் assassination.
25 வருஷமா சிறையில் சந்தா மாமா படிக்கிறதை விட்டுட்டு, பொண்டாட்டியை அடிச்சவனை சிறையில் இருந்தே போட்டு தள்ளினா தான் அவர் கேங் லீடர்.
ஒண்ணு அவரை கேங் லீடரா காமிக்கணும். இல்லை மக்கள் லீடரா வேஷ்டி சட்டையோட காமிக்கணும்.

இதை விட்டுட்டு, வெளியே வந்து ஒவ்வருத்தனையா புடிச்சு நீ ஏன் கொன்னே? யார் கொன்னானு காங் லீடரா கேக்குறார் கபாலி.
உயிரோடு இருக்கும் ஒருத்தரை ஏன் கொன்னேனு கேட்டா…. பாவம், வில்லன்கள் என்ன செய்வார்கள்.
இல்லைன்னுதான் சொல்லுவான். அவனை கொன்னுட்டு அவன் புள்ளைகிட்ட ஜஸ்ட் லைக் தட் சாரி கேட்டா எப்படி ரஞ்சித்?

இப்படி படம் முழுவதும் ரஜினி, விடை தெரியாத ஒரு குழப்பமான கேரக்ட்டராகவே தெரிகிறார்.
பொண்டாட்டியை அடியாள் நைட் சுவர் ஏறி போய் பார்த்துட்டு வாரான். 25 வருஷமா பார்க்காத புருஷன் ஹோட்டல் ரூமில் உட்க்காந்து நைட் யோசிச்சிட்டு இருக்கார்.
பாண்டிசேரி ஆரோவில் அமைதி பூங்காவில் இருக்கும் பொண்டாட்டியை பார்க்க கேட் ஏறி குதிக்க முடியாத கபாலி எப்படி ரத்த பூமியான மலேசியாவில் தமிழர்களின் வாழ்க்கையை மீட்டு எடுக்க முடியும்?

ரஜினியை வித்யாசமா காமி. யார் வேணான்னு சொன்னா?
ஆனா, வீக்கான ரோலில் காமிக்ச்சு இவர் ஒரு வீர பரம்பரைன்னு சொன்னா எப்படி?

இதனால்தான் முதல் 10 நிமிஷம் முடிந்ததும் கபாலியே டயர்டாகி…அப்பா ரஞ்சித்து …நான் யாருனு நீயே யு டியூபில் போய் சொல்லுன்னு சோபாவில் போய் உட்கார்ந்து விட்டார்.
தனுக்கு ஒத்துவராத காட்சியில் நடிக்க பிடிக்காமல் ஜன்னல் பக்கம் போய் 17 முறை கபாலியை திரும்பி நிற்க வைத்த பெருமை இயக்குனரையே சேரும்.

அவர் ஸ்ட்ரென்த் எப்பவுமே டயலாக் டெலிவரிதான்.
அவர் பேச வேண்டிய வசனத்தை எல்லாம் அமீர், குமிர்னு எவனவனோ பேசுறான்.
அடியாள் பேச வேண்டிய புறா கதை, நண்டு கதை, கோழி கதை எல்லாம் கபாலிக்கு கொடுத்து கடுப்பு ஏத்துறார் டைரக்ட்டர்.

வசனம் டயலாக் எல்லாம் டைமிங் மிஸ் கூட.
எல்லோரும் கும்பலா மூஞ்சை உம்ம்ன்னு வச்சு இருக்கும் போது கபாலி மட்டும் வந்து மகிழ்ச்சினு சொன்னா அவர் கூட படத்தில் இருக்கும் கேரக்டர்க்ளுக்கே மகிழ்ச்சியாய் expressions இல்லை.

டான் தான் முடிவு எடுக்கணும்.டான்தான் வண்டி ஓட்டணும். டானுக்குத்தான் எல்லாம் தெரியணும்.
இங்க, கபாலி எல்லாத்துக்கும் இன்னொருத்தனை நம்பிதான் இருப்பார்.
தேடும்ட போது டபுள்ஸ்ல பைக்ல பின்னாடி உத்காந்துகிட்டு போறார்.

இது இல்லாம திரை கதையில் ஆயிரம் ஓட்டைகள்.
ஒரு பழைய காரை மலேசியாவில் ஓட்டுவார். அதே காரைதான் தாய்லாந்திலும் ஓட்டுவார்.
தாய்லாந்தில் துப்பாக்கியில் சுட்ட குண்டு மலேசியாவில் அவர் ஸ்கூல் பொண்ணு மண்டையில் வந்து டுமீல்னு விழும்.
படத்தில் இப்படி லாஜிக் இல்லாம பல பேர் சாவாங்க.
கபாலி, அவர் பொண்டாட்டி எல்லாரும் செத்து செத்து பொழைப்பாங்க.

படத்தில் மிக முக்கியமான 2 சீன்ஸ் உண்டு:

1. லவ் சீன் :படத்தின் ஓரே லவ் சீன் முகம் தெரியாத அந்த பாண்டிச்சேரி பிரென்ச் லவ்வர்ஸ்.
2. சென்டிமென்ட் சீன்: படத்தில் ஒரு முறை வீட்டுக்கு முன்னாடி இருக்கும் புல் தரையில் வீட்டு சாவியை முட்டி போட்டு தேடி அது கிடைத்தவுடன் போது கபாலி அழுவார்.

இந்த கொடுமையாவது பரவாயில்ல. வெட்டு கிளி வேடத்தில் வேடுக்கு வெடுக்குனு அட்டகத்தி தினேஷ வேற …
சும்மா சொல்லக் கூடாது. கொடுத்த காசுக்கு மேல செம ஆக்ட்டிங்.
பாக்கெட்டில் துப்பாக்கி வச்சு கிட்டு டோனி லீ கழுத்து டையை புடிச்சு இழுக்கும் ஒரு அறிவுள்ள அடியாள்.
அடியாளுக்கே இவ்வளவு அறிவுனா, கேங் லீடருக்கு எவ்வளவு அறிவு இருக்கும்னு வில்லன் யோசிக்க மாட்டானா என்ன ?

இது இல்லாம எடிட்டிங் கொடுமை வேற ஒரு பக்கம்.
அட்டகாசமா youth லுக்கில் ஒரு காட்சி வரும். கை தட்டலாம்னு பார்த்தா அங்க கட்.
ஆனா கபாலி பேண்ட், பெல்ட்டில் நிக்காம மூணு முறை தூக்கி விடுவார் ..அதை எல்லாம் எடிட் செய்யாமல் படத்தில் அப்படியே இருக்கும்.
எங்க எல்லாம் கை தட்டலாம்னு நமக்கு தோன்றி நாம் கை தூக்கும் போது டைரக்டர் கத்திரியில் கை வைத்து விடுகிறார்.
வேகமான ஷாட் எல்லாம் எடிட்டிங்கில் slow செய்து நட நட என ரஜினியை நடிக்க விடாமல் நடக்க வைத்து இளைக்க வைத்ததுதான் மிச்சம்.

இது இல்லாம ஓப்பனிங் சங்கில் இரண்டு மைக்கேல் ஜாக்சன் கொடுமை ஒரு பக்கம். படத்தில் 5 songs எங்க வந்ததுனே தெரியல.
Music போட சந்தோஷ் நாராயணன் ரெடியா இருந்தும் ஸ்கூல் பசங்க டாக்குமெண்டரி கணக்கா ஓவரா பேசியதால் அவருக்கு music போட கேப் கிடைக்கவே இல்லை.

இதே நிலைமைதான் ராதிகா ஆப்தேவுக்கும். நடிக்கும் வாய்ப்பே இல்லை.
அதனால் அவங்க அழுத ஒரே சீனை ஊரே ஓவரா பேசுது.

இத்தனை கொடுமைக்கும் ஈடு கொடுத்து நம்மால் தியேட்டரில் நம்மால் உட்கார முடிந்தது என்றால் அது ரஜினி என்ற ஒருவரால் மட்டுமே முடியும்.
வித்தியாசமான ரோலை தேர்ந்தேடுத்தத்துக்கு ஒரு பெரிய சுபாஷ். 65 வயதில் நமக்கு எல்லாம் இவரை போல உட்கார முடியுமா என்று கூட தெரியாது.
தன்னிடம் கதை சொல்லி சொதப்பிய ரஞ்சித்துக்கு தன் 200% உழைப்பை கொடுத்து நடித்து உள்ளார்.

ஆனால் ரஞ்சித் தன் அட்டகத்தி, மெட்ராஸ் பட கூட்டத்தை ஒரு பஸ்சில் ஏற்றி தான் படித்த சந்தா மாமா புத்தகத்தின் பல பக்கங்களை ஆளுக்கு ஒரு page கிழித்து கொடுத்து பேச சொல்லி மலேசியாவில் காணாமல் போன கபாலியின் பொண்டாட்டியை பாண்டிசேரியில் அம்பேத்கர் தெருவில் கண்டுபிடிக்க எடுத்த படம் தான் கபாலி. ஒரு மிக அருமையான சான்ஸ் மிஸ் செய்து விட்டார்.

இப்படி ஒரு சான்ஸ் எந்த இயக்குனருக்கும் கிடைத்ததில்லை.
ரஜினி இனி யாருக்கும் கொடுக்க போவதும் இல்லை.

கபாலியில் எனக்கு மிகவும் பிடித்தது:

1. ரஜினி
2. டீசர்
3. போஸ்டர்

இவங்க மூணு பேர்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தவர்கள்.