படத்தை பார்க்கலாம். மோசம் எல்லாம் இல்லை.
உண்மையை சொல்ல வேண்டுமானால் படத்தை சுமார் பத்து முறை பார்த்தால்தான் கதையே புரியும்.
அப்படி ஒரு complex ஆன சிக்கல் மிகுந்த வெயிட்டான கதை மற்றும் கதைக்களம்.
இந்த ஒரு படத்துக்குள் 42 கதைகள் ஒளித்து வைத்து ரஞ்சித் கலக்கிவிட்டார்.
அதகளம்.
ரஞ்சித் மாதிரியே நானும் கதையை சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும்.
அதனால் வேறு பார்வையில் …
முதலில் வில்லன்:
டோனி லீ …டோனி லினு ஓரே ஒரு பெரிய வில்லன்.
அவனுக்கு கீழ ஒரு 22 குட்டி வில்லன்கள்.
அதில் ஒருத்தனுக்கு ரிஷப ராசி. பெட் ஷாப் ஓனர்.
இன்னொருத்தனுக்கு மீண ராசி. மீண் சுட்டு நக்கி நக்கி சாப்பிடுவான்.
அவங்க கீழ ஒரு 10 பொடியன்கள். எல்லோருமே சம்மர் கட். முக்கா பேண்ட்.
இவங்க எல்லாரும் சின்ன வயசில் இருந்தே நகை பைத்தியங்க.
உச்சா போகும் இடத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் சின்னதும் பெருசுமா தங்க நகை தொங்கும்.
டெரர்ரா கும்பலா இருப்பாங்க. கும்பலா டெர்ராவும் இருப்பாங்க.
ஒரு வில்லன் சீனில் குறைந்தது 43 பேர் இருப்பதால் ஊரில் இவர்களை 43 என்று அழைப்பார்கள்.
வில்லன் தனியா இருக்க மாட்டார். இருந்தா ஹீரோ கொன்னுடுவாருனு அவங்களுக்கு தெரியும்.
வில்லன் பசங்க, பொண்டாட்டிங்கனு கூட ஒரு 6 பேர்.
ஒரு மூணு பேர் யார் பக்கம்னு தெரியாம டோனி கூட சில நாளும் ஹீரோ கூட சில நாளும் இருப்பாங்க.
எல்லாத்தையும் கூட்டினா மொத்தம் 43 வில்லன்கள்.
இது ஒரு gang. பேர் 43 காங்.
கூட்டம் கூட்டமா படம் பூராவும் அலைவாங்க.
யார் யாருக்கு வில்லன், யார் யாருக்கு அடியாள் என்பது நமக்கு மட்டும் அல்ல ..பெரிய வில்லன் டோனி லீக்கே தெரியாத வண்ணம் சிறப்பான ஒரு கதை அம்சம்.
டோனிக்கு புடிச்ச உணவு சூப்.
புடிச்ச உடை ஆரஞ்சு.
லக்கி நம்பர் 43. சிம்பிள்.
இருந்தாலும் இது நாம் படம் பார்க்கும் போது புரியாது.
வீட்டுக்கு வந்து யோசிச்சு பார்த்தாதான் புரியும்.
டோனிக்கு மொத்தம் 6 language தெரியும்.
இங்கிலீஷ், மலேயா தமிழ், சிங்கப்பூர் தமிழ், மாண்டரின், கண்டோனீஸ் அப்புறம் தாங்கலிஸ்.
அவனுக்கு ஒரு வினோத நோய் உண்டு …
அவன் கிட்ட யார் எந்த மொழியில் பேசினாலும் அவன் அதை தவிர மத்த மொழியில்தான் அதுக்கு பதில் சொல்லுவான்.
காரணம் அவன் ஒரு foreign வில்லன். ஹீரோ கிட்ட தமிழிலும், அடியாள் கிட்ட மலேய மொழியிலும் மாத்தி மாத்தி பேசியே கொல்லுவான்.
ஒரு சமயம் ஸ்விட்ச் ஆஃப் ஆன போனை வாங்கி கூட பேசும் தில் பார்ட்டி.
டோனி லீக்கு ஒரு வயசான அப்பா. அம்மா கிடையாது.
அவனுக்கு பொண்டாடி கிடையாது. காரணம் அவன் bachelor .
அதனால டோனிக்கு பாசமா கூட இருக்க ஒரு நாய் வளர்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை.
இந்த ஆசை டோனிக்கு இருக்கு என்பதை படத்தில் ரஞ்சித் மிக நாசுக்காக கையாண்டு இருப்பார்.
எப்படி?
அவன் மெயின் ஆசை நாய் வாங்கணும்.
அதனால டோனி லீ, அவன் கிழட்டு அப்பாவுக்கு திடடீர்னு birthday கொண்டாடுவான்.
அன்னிக்கு அழகிகள் கூட ஒரு முக்கியமான ஒரு குடும்பத்துக்கு இன்விடேஷன் அனுப்புவான்.
அந்த குடும்ப தலைவர் பேர்தான் கபாலி. இவர்தான் ஹீரோ.
ஏன் டோனி இந்த கபாலிக்கு இன்விடேஷன் அனுப்பினான் என்பதுதான் படத்தின் மிகப் பெரிய டிவிஸ்ட்.
ஏன்னா, டோனிக்கு நாய் பிடிக்கும்.
கபாலிக்கு மனுஷனா பொறக்கவே பிடிக்காது.
அதனால டோனி கபாலியை தனியா ஒரு ரூமுக்கு கூப்பிட்டு ” டேய் .. கபாலி ..நீ எனக்கு நாயா இருக்கியான்னு பாசமா கேட்பாரு”
கபாலிக்கு டக்குனு கோவம் வந்து டோனியை ஒத்தக்கை டுப்பாக்கி வச்சு டுமீல் டுமீல்னு சுட்டுடுவாரு.
அவன் பிஞ்ச கையோடு நாய் மாதிரி ஊளை இட்டுக்கொன்டே ஓடிப் போய் டமால்னு குதிச்சு செத்துடுவான்.
படமே இங்க இருந்துதான் ஆரம்பிக்குது.
கபாலி ஏன் சுட்டார், எதுக்கு சுட்டார் என்பதுதான் கதை.
அடுத்து ஹீரோ குடும்பம்.
தொடரும்…
தொடரும்
I’m not going to read the review. One word review please Gurji: Yay or Nay?
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். மின்மம் 10 டைம்ஸ்.
உங்க வாய்லேர்ந்து இப்படி வந்தாலே அது உலக அதிசயம் தான் குருவே
10 times to understand the story-line or to enjoy the movie…Anyways its uploaded in Tamil Rockers… Tamil Rockers daaaaaaaa B|
Sridar Elumalai பத்து தடவை பார்த்தா தான் கதையே புரியுமா?
Gang name 43 இல்லையா? ????
நன்றி தம்பி. Corrected
செம ரிவியூ.. ????
குருநாதருக்கு வந்த நேரடி மிரட்டல்கள் காரணமாக அடக்கி வாசிக்கிறார் என்று நினைக்கிறேன் ????
இது வில்லன் பார்ட். தம்பி… மெயின் ரோல் அடுத்த பார்ட்தான்.
ரஜினியின் கோட் சூட்டுக்கான காரணத்தை அறிய, ஐயம் காத்துட்டு இருக்கேன் குருநாதா ????
கடலை முட்டாய் கொடுத்து newest தலைவி Shanthi என்னை அடக்கிட்டாங்க தம்பி.
Santhi Rathinakumar
படத்தை நன்கு அனுபவித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்த அனுபவம் கிடைக்கப்பெறாத நாங்கள் துரதிஷ்டசாலிகளே!!
????????????????????????????????????
Tony lee is here. Looking for Kabali.
ஹ ஹ ! யுவர் மறூவாசிப்பு இஸ் சூப்பர் !
Part 2eppa varudu. Your review is intersting. I have no time to go and see the movie in theatres. Your review is full of humour, seems to be more interesting.
I read your “review”. Lol. I thought it was the real review and expecting plot/spoilers I refused to read it back then. Haiyoo haiyoo!
????????????????????
Onnume puriyalanga
Enna solringa
Padam ok r not????
Fyi…indhu Rajni nadicha padam Kabali review illa
Can someone please enlighten me who is gang 43????????
படம் பார்த்துக் கதை அறிக.
Athulaum paathuchu, paathutha puriala madam????????????
“ஙே”????
Gang4, Gang8, Double7, Gang18, Gang24, Gang36 – These are some of the top 10 gangs of Malaysia. Gang43 is just a name.
I think Guruji should take Part 2 Kabali. Enjoyed reading Part 1
Leftla type panna appadithan. Yenna solromnu namakke puriyadhu. Sasikitta rendu poorikattai konduvarasollanum
படம் மொக்கையா இருக்கும் போது ரைட்டில் அடிச்சா என்ன பூரி கட்டையில் அடிச்சா என்ன? மொக்கைனா மொக்கைனுதான் அடிப்போம்.
Kavitha, பாவம் விட்டுருங்க, ஏற்கனவே கையில கட்டு. இப்படி எல்லாம் அடி மிரட்டல் வரும்னுதான், Sasi படம் releaseசாகர மதியமே ஊருக்கு ஓடிட்டாங்க.
Thilaka ippo Dhan villain story mudinjirukku. Climax varadhukulla adakkalena ivaru adangamaattaaru