Rustom:
பணம், புகழ், அழகு, தேசப்பற்று, அரசியல் காதல், கள்ளக் காதல், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு சென்சேஷனல் கொலை ….
1959 ல் உண்மையில் நடந்த ஒரு கொலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.
மேனக்ஷா நானாவதி எனும் navy commander அடிக்கடி அலுவல் காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்து வந்தார். மனைவி ஒரு பிரிடீஷ். பெயர் சில்வியா. அழகி. குழந்தைகளும் இருந்தன.
நானாவதியின் 15 வருட நண்பன் பிரேம் அஹுஜா. நாநாவதி, தேசிய கடமைக்காக நாட்டை காக்க போன போது, அஹுஜா சில்வியாவிடம் நெருங்கினார். சில்வியாவும் நாநாவதி வீட்டில் இல்லாத காரணத்தை பயண்படுத்தி மொன்னை காரணத்துக்கு பிரேமிடம் சரண் அடைந்தார்.
பிரேம் சில்வியா இடையே கள்ளக்காதல் மற்றும் சந்திப்புகள் அதிகமாகி ஒரு சில வருடத்தில் கள்ளக்காதல் ஒரு திருமண பேச்சு வரை வந்தது. நானாவதியை விவாகரத்து செய்துவிட்டு தன்னிடம் வந்துவிடுமாறு பிரேம் சொல்ல, சிலிவியாவும் அறை குறை மனதுடன் சம்மதிக்க… இது எதுவும் தெரியாத நானாவதி ஒரு நாள் வீட்டுக்கு திரும்பினார்…
மனைவியின் செயல்களில் சந்தேகப்பட்ட நாநாவதி கள்ளக்காதலை கண்டுபிடித்துவிடுகிறார். காமேண்டர் கோபத்தின் உச்சிக்கு போய், பிரேமை போட்டு தள்ள முடிவு எடுக்கிறார்.
மனைவியை சினிமா தியேட்டரில் விட்டு விட்டு பிரேமை தன் ராணுவ துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுக் கொன்றுவிட்டு தானே சரனடைகிறார்.
பின்பு நடந்தது ஒரு அரசியல் எமோஷனல் டிராமா. கொலைக்கு பின் சில்வியா தன் கணவன் பக்கம் சாய்ந்தார். நாநாவதி ஒரு பார்ச்சி. செத்தவன் ஒரு சிந்தி. அரசியலில் அப்போது பார்சிகள் ஆதிக்கம்.
தேசத்துக்கு போராடி பதக்கம் பெற்ற இராணுவ வீரனான நானாவதிக்கு public சப்போர்ட் அலை மோதியது. நாநாவதி பிரேமை போட்டு தள்ளியது சரியே என்று மீடியாக்கள் எழுதின. சிலர் சில்வியாவையும் சேர்ந்து போட்டு தள்ளி இருக்கலாம் என்றார்கள். சிலர் இது திட்டமிட்ட கொலை என்றும் வாதாடினார்கள்.
பிரேமின் சகோதரி நானாவதியை விடுவதாக இல்லை. சட்டம், எமோஷனல் டிராமா என்று இந்தியாவை 1959 ல் உலுக்கிய இந்த கொலை வழக்கில் கடைசியில் அரசியல் புகுந்து நாநாவதி வெறும் மூன்று வருட சிறை தண்டனையுடன் விடுதலை ஆகிறார். Prosecution ன் தரப்பில் வாதாடியவர் ராம் ஜெத் மலானி.
உண்மையில் நானாவதியும், சில்வியாவும் கனடாவில் குடியேறி செட்டில் ஆகிறார்கள். 2013 ல் தான் நாநாவதி Toronto வில் இறந்தார்.
படம் வரும் போது கண்டிப்பாக பார்க்கவும்.
வாழும் சிலருக்கு பாடமாக அமையும். என்றும் கணவனே கண் கண்ட தெய்வம்.
Leave A Comment