ஒரு பிளேட்டில் 4 இட்லியும் ஒரு மூலையில் சட்னியும் இருக்கு. 
எந்த இட்லியை முதலில் பிய்த்து சட்னியில் முக்கி சாப்பிடுவீர்கள்? 

எந்த இட்லி, சட்னிக்கு அருகாமையில் இருக்கோ அந்த இட்லியை நோக்கிதான் கை தானா போகும். மூளை அனிச்சையாக இந்த command தான் கைக்கு கொடுக்கும்.
இதற்கு பேர் spatial psychology. பெரிய டாப்பிக். 

நீங்கள் Walmart, Canadian Superstore சென்றால் இதன் அடிப்படையில்தான் பொருட்கள் அடிக்கப்பட்டு இருக்கும்.

ஒவ்வொருமுறை நீங்கள் Walmart கார்டையும், president choice கார்டையும் தேய்க்கும் போதும் உங்கள் ராசி, நட்சத்திரம், குரு புத்தி, கேது கத்தி என அனைத்தும் analytics க்கு அனுப்பப்படும். இதை வைத்து நீங்கள் உள்ளே நுழையும் போதே எதை வாங்க வந்து இருப்பீர்கள் என்று யூகிக்க முடியும்.

கல்யாண வயசில் பொண்ணு இருக்கிறவன் கோவிலுக்கு வரும் போதே ஒரு நல்ல வரன் வேண்டும் என்றுதான் வேண்டுவான் என்று கடவுளுக்கு தெரிவது போல, உங்கள் buying and household stock க்கும் ஓரளவு யூகிக்க முடியும்.

கடைகளின் நோக்கம், உங்கள் விருப்ப பொருட்களின் list ஐ பெரியதாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.

அதனால்தான் நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் உங்கள் விருப்ப பொருளை உடனே வாங்க முடியாது. சிறிது தூரம் நடக்கும் தொலைவில் அதை வைத்து இருப்பார்கள். அதற்கு அருகாமையிலும், போகும் வழியிலும் உங்கள் list ல் இல்லாத பொருட்களை அடுக்கி வைப்பார்கள். 

நீங்கள் நினைக்கலாம்… எனக்கு பிடித்தது, இதுவரை வாங்காதது மட்டும் அடிப்படையாக வைத்து எப்படி அடுக்க முடியும் என்று…?  

ஒரு store க்கு பெருவாரியாக வரும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பதான் இட்லி placing இருக்கும். 

Milk, bread வாங்கதவர்கள் மிக குறைவு. இது எப்போதுமே கடையின் கடைசி மூலை முக்கில்தான் இருக்கும். தேன் மிட்டாய், கடலை பர்பி, குச்சு மிட்டாய் போன்றவற்றை பில் போடும் இடத்தில் வைத்து இருப்பார்கள்.
ஒரு சின்ன லாஜிக் உபயோகித்து பாருங்கள். கடையில் reverse order ல் shop செய்து பாருங்கள். புது அனுபவமாக இருக்கும். 

இல்லை நாம் அதே ஆடரில்தான் இட்லி வாங்க வால்மார்ட் போவேன் எந்தக் கடைசியில் சட்னியாக திரும்பி வருவார்கள்.