நமக்குனு உள்ள டைமில் யாருக்கும் appointment கொடுக்க கூடாது.
உதாரணம், எல்லா வீக் end ம் எல்லாருக்கும் appointment கொடுத்து எல்லா பார்டிக்கும் அடிச்சு புடிச்சி போக கூடாது. 
75% நம்ம டைம். 

மீதிதான் அடுத்தவங்களுக்கு.
பொதுவா weekend ல் என் family கூட நானே enjoy செய்வேன்னு ஒரு மனப் பக்குவம் வந்துட்டா அதுவே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி. 

No, I am not available என்பதை சொல்லி பழகனும். 25% time ல் இருந்தா உடனே coming னு சொல்லி slot fill செய்யனும்.
அப்ப invite செய்றவங்க தப்பா நினைக்கமாட்டாங்களா?
அது அவங்க பிரச்சனை. Time Management ல் முதல் படி, நம்ம டைமை கெட்டியா பிடிச்சுகிட்டு அளந்து அளந்துதான் மத்தவங்களுக்கு கொடுக்கனும். அப்படி இப்படி சில வாரம் டைட்டா போனாலும் வாலி பாலில் centre position போல மீண்டும் நடு செண்டருக்கு வந்து நின்னுடனும்.

———————-

“வாலிபால் டைமிங்” புத்தகத்தில் ஸ்வாமிஜி