சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார்.
அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி.
வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது.
இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார்.
உயிர் இல்லை. இப்போதுதான் போய் இருக்கிறது. மண்டையில் அடி. சில மணி நேரமாக ரத்தம் கசிந்துதான் இறந்து உள்ளார். யாருமே உதவவில்லை போலும். இருட்டில் பார்த்த போது மண்டையில் பலத்த அடி. உடம்பு எல்லாம் சிராய்ப்பு. அவரால் என்ன நடந்தது என்று யூகிக்க முடியவில்லை. ரத்தம் கசிவதை தடுத்து இருந்தால் அவர் உயிர் காப்பாற்றபட்டு இருக்கும் என்று மட்டுமே அவரால் யோசிக்க முடிந்தது.
துடிதுடித்த டாக்டர் அவர் சடலத்தை நடு ரோட்டில் இருந்து நகர்த்தி சாலையின் ஓரம் வண்டிகள் சடலத்தின் மீது ஏராமல் இருக்கும்படி வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு அருகே உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். நடந்தவற்றை கூறி உள்ளார். உடனே duty யில் இருந்த inspector, டாக்டரின் எல்லா தகவல்களையும் வாங்கி வைத்துக் கொண்டு அவர் மனிதாபிமானத்தை பாராட்டிவிட்டு அவருக்கு ஒரு காபி வரவழைத்து குடிக்க வைத்து உள்ளார்.
டாக்டருக்கு ஆதங்கம். ஸார் அடிபட்டு எப்படியும் ஒரு ரெண்டு மூணு மனி ஆகியிருக்கும். முன்னாடியே யாராவது help செய்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்… சே ..யாருமே நிருத்தவில்லை ஸார் … என்று நொந்து கொண்டார். Inspector அதுக்கு…நீங்க வந்து சொன்னதே ஒரு பெரிய உதவி ஸார் … நன்றினு சொல்லிவிட்டு அவர் spot க்கு கிளம்பிவிட்டார்.
Wireless அலறும் காவல் நிலையத்தில் கேட்க ஆரம்பித்தது. டாக்டர் கோவை. வரும் வரை அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம் எந்த எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்து… இந்த சமுதாயம் சீர் கெட்டு விட்டது. ஏன் இப்படி எல்லாரும் வண்டியை நிறுத்தாமல் சென்றார்கள் என்ற கேள்வி அவரை துளைத்து எடுத்தத்து” என்றார்
இந்த சம்பவத்தை அவர் என்னிடம் சொன்ன போது நானும் அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டினேன். விடுங்க சார்…எல்லோரும் உங்களை போல் இருக்க மாடடார்கள். நீங்கள் டாக்டர். ஒரு சமுதாயத்தின் பார்வை உங்களுக்கு வேறு மாதிரி இருக்கிறது. டாக்டர்கள் எப்பவும் கடவுளுக்கு அடுத்து உயர்வானவர்கள். உயிரை காப்பாறும் கடவுள் போன்றவர்கள் என்றேன்.
உடனே அவர் ” நீங்க வேற ஸார் … நான் part -1 மட்டும் தான் சொன்னேன்”. மீதியை கேளுங்கள் என்றார்.
Part 2:
ஒரு மாதம் கழித்து இவருக்கு ஒரு போன் கால்.
அதே inspector த்தான் கூப்பிட்டார். ஸார் ஒரு சின்ன formality. நீங்க நாளைக்கு பத்து மணிக்கு வரனும் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
ஒரு மாசம் கழித்து ஏன் போன் என்று ஒரே குழப்பம் டாக்டருக்கு.
டாக்டர், தன் எல்லா appointment களையும் cancel செய்துவிட்டு அந்த காவல் நிலையம் மீண்டும் சென்றார்.
இரவில் பார்த்த காவல் நிலையம் வேறு..பகலில் பார்க்கும் காவல் நிலையம் வேறு.
அங்கு அதே இன்ஸ்பெக்டர்…சாருக்கு ஒரு சூடான காபி என்று ஒரு அதட்டு அதட்டினார்.
காபி டாக்டரின் தொண்டையில் இறங்கும் போது … இன்ஸி …ஒரு குண்டை தூக்கி போட்டார்.
ஸார், அன்னிக்கி நீங்க பார்த்தது அது கொலை case ஸார்.
யாரோ மண்டியில் கடபாரையில் அடித்து போட்டு இருப்பாங்க போல. Postmortem சொல்லுது.
யாருனு ஒரு மாசமா தேடுறோம் ஆளே கண்டுபிடிக்க முடியல.
பைய்யன் பிஹாரி. கூலி தொழில் செய்ய வந்தவன்னு trace செய்துட்டோம்.
நாங்க யார் கொலையாளினு கண்டுபிடிக்க முடியல. மேல இருந்து ஏகப்பட்ட pressure.
கேசை முடிக்கனும். உங்க உதவி தேவை என்றார்.
டாக்டர் உஷாராகி… ஸார் நான் என் வக்கீலோடு வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வர பார்த்து உள்ளார்.
ஸார், பயப்படாதீங்க. நான் சொல்வதை மட்டும் நீங்க சொல்லுங்க..மீதியை நாங்க பாத்துக்குறோம்.
இதுக்கு உங்க லாயர் எல்லாம் வேண்டாம் என்றார். அப்படியே லாயர் வந்தாலும் இதே procedure தான்.
உங்களுக்குத்தான் காசு விரயம்….
இன்ஸி …சார் ..சார் tension ஆகாதீங்க.
இது கொலை caseன்னு postmortem செய்த டாக்டர் சொன்னாலும்நாங்க FIR report ல் accident னு தான் நாங்க பதிவு செய்து இருக்கோம்.
ஆளை நேரில் பார்த்த ஒரே சாட்சி நீங்கதான். கோர்ட்டுக்கு வந்து ஒரே வரி சொன்னா போதும்.
என்னனு சொல்லனும் ஸார்? என்று டாக்டர் கேட்டு உள்ளார்.
அதுக்கு inspector…..வெரி சிம்பிள் சார்.
” வண்டி வரும் போது ரோட்டில் ஒருத்தன் இருட்டில் தள்ளாடிகிட்டே வந்தான். திடீர்னு ஒரு காருக்கு முன்னாடி தள்ளாடி வந்து விழுந்ததை பார்த்தேன்.
எவ்வளவு அழுத்தி பிரேக் போட்டும் அந்த காரை நிருத்த முடியல. நான் இறங்கி போய் பார்த்தேன் ..ஆள் ஸ்பாட் அவுட். சாராய வாடை …” … அவ்வளவுதான் ஸார்.
Doctor அதுக்கு…சார் accident ஓக்கே. நான் எந்த வண்டியும் அவரை மோதினதை பார்க்கவில்லையே சார்..நீங்க எந்த வண்டியை சொல்றீங்க ” என்றார்.
அதுக்கு இன்ஸ்பெக்டர் ” சார், அந்த காரை ஓட்டினது நீங்க தான். அது உங்க கார்தான்…டாக்டரின் கார் நம்பரை inspector ஒப்பித்தார்.”…
ஜஸ்ட் இது ஒரு பார்மாலிட்டி. நீங்கதான் சம்பவத்தை பார்த்த ஒரே ஆள். செத்தவனும் பீஹாரி. ஆல்ரெடி பாடியை எரிச்சாச்சு.
ஒரு பிரச்சனையும் வராது சார். நான் பாத்துக்குறேன் என்றார்.
உடனே டாக்டர்..சாரி இன்ஸ்பெக்டர்… இதுக்கு நான் ஒதுக்க மாட்டேன். நீங்க வேற ஆள் பாருங்க நான் வரேன் என்றவரிடம்…
சார், நோ பிராப்லம் சார் …இப்போ போங்க …. monday வந்தா போதும். ஏட்டய்யா போன் செய்வாரு என்றவுடன்…மீண்டும் டாக்டர் அடங்கி போனார்.
டேய் ….டாக்டருக்கு ஒரு பிரியாணி சொல்லு என்று சவுண்டு அந்த காவல் நிலையத்தில் தானே ஒலித்தது.
இன்ஸி ..பேச ஆரம்பித்தார். சார் இது ஒரு சிம்பிள் கேஸ். ஜுட்ஜ் எல்லாம் கரெக்ட் செய்தாச்சு. ஒரே கேள்வி கேட்பார். அரசு வக்கீல் அறிவழகன்தான்.
ஒன்னும் அதிகமா குறுக்கால கேட்கமாட்டார். இதுக்காக நான் ஒரு புது ஆளை கூட்டிட்டு வந்து செட் செய்தால் நல்லா இருக்காது சார்.
ஒரு டாக்டர் வந்து சாட்சி சொன்னா கேஸ் ஹெவியா இருக்கும்… அதான். நாளைக்கு பிரச்சனை எதுவும் வந்தாலும் ஈஸியா முடிச்சிடலாம். கேஸ் கட்டில் எல்லாம் எழுதியாச்சு. உங்க signature மட்டும் பாக்கி. போட்டுட்டு போயிடுங்க. Hearing வரும் போது வந்தா போதும். வந்து போற செலவு, சாப்பாடு எல்லாம் நாங்க பாத்துக்குறோம்.
ஏட்டு, சார் கிட்ட ஒரு சைன் வாங்கிக்கிட்டு அனுப்பி வைய்யா என்றார்.
ஆறு மாதம் இழுத்து இழுத்து எட்டு முறை கோர்ட் சென்று உயிரை காப்பாற்ற போன ஒரு டாக்டர் ஒரு கொலையாளியாய் அந்த case ல் இருந்து கதற கதற வெளியே வந்தார்.
அன்று முதல் அவர் உச்சா வந்தால் கூட காரை நடு வழியில் நிருத்துவதில்லை.
தானே போய் ரோட்டில் எந்த உதவியையும் செய்வதில்லை.
டாக்டர் தொழிலிலும் தன் வரம்பை மீறி accident case களை தொடுவதில்லை.
ஒரு மனிதன் மிருகமாக மாற ஒரு சமுதாய கட்டமைப்புதான் காரணம்.
சென்னையில் அந்த பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் மனம் எல்லாம் கல் இல்லை. மனிதாபிமானம் இல்லா மக்களும் இல்லை.
தண்ணீரில் மூழ்கியவனை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியவர்கள் தான் சென்னை மக்கள்.
ஒரு காலத்தில் எல்லோரும் டாக்டரை போல காப்பாற்றி கொண்டுதான் இருந்தார்கள்.
அவர்களை சிலை ஆகியது இந்த அரசியல்வாதிகள்தான்.
அரசியல்வாதிகள் சட்டத்தை கையில் எடுத்து இன்று எது கொலை, எது தற்கொலை எது விபத்து என்பதை அவர்களே முடிவு செய்ய பழக்கி விட்டார்கள். இதை வேடிக்கை பார்த்து, பார்த்து மக்களும் பழகிவிட்டார்கள். இவர்கள் கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சமுதாயம். நின்றவர்கள் நம்மை போன்ற சிலைகள்.
ஒரு ரயில் நிலயமே இரண்டு மணி நேரம் எதுவும் செய்யாமல் இருக்கிறது என்றால் தப்பு அன்று மட்டும் நடக்கவில்லை.
இது பல ஆண்டுகளாக நடந்துகொண்டு கொண்டுதான் இருக்கிறது.
ரயில்வே ஸ்டேஷனில் எத்தனை எத்தனை டாக்டர்கள்.
எல்லோரையும் டாக்டருக்கு படிக்க வைத்த பெருமை நம் அரசியவாதிகளுக்கே போய் சேரும்.
Devastating
சார் யார இருந்த என்ன உயிர் இருக்கு இன்னும் துடிச்சிட்டு இருக்கு சார் மொதல்ல தூக்கி அடிப்படை உதவி பண்ணுங்க… இல்லனா நாங்க தூக்கிட்டு போய்…
சார், இது ரயில் ஆக்சிடன்டு இல்ல.. நிலைமை புரியாத பேசாதங்க.. இது அட்டம்ட் மர்டர் கேஸா, Chain snatching கழுத்து அறுத்த போல இருக்கு.. இல்ல லவ் மெட்டரா தெரியல… நாங்க எங்க சைடுல காவல் துறைக்கு இன்பாம் பண்ணிடோம்.. பப்லிக் யாரும் பாடி கிட்ட போகாம இருங்கள். இது அவுளோதான் போல. என்ன பண்ணனும் காவல் துறைக்கு தெரியம்.
Marma thordar pola ezhudiirkkenga ; so sad and scary.
இப்படி உதவ வந்தவரையும் கிட்ட போக விடலையாம்.
Good write-up but sad truth. People don’t want to get involved because of these repercussions. Police force really needs to step to gain people’s trust. They are here to protect us, the common man not themselves. Even if people apprehend the culprits, the courts will delay in delivering justice if at all.
Unfortunately that is the sad state of affairs in India… no wonder “humanitarian thinking” is dying…
நன்றாக, கோர்வையாக எழுதி உள்ளீர்கள்.
இதைப்போன்ற கொலைகள் 30 நொடியில் முடிந்து விடும். அதிகமான மக்கள் நிற்கும் நுங்கம்பாக்கம் போன்ற நிலையங்களில், அவ்வளவு வேகமா போயும் தடுக்க முடியாது. என்னுடைய அனுமானத்தில், இறந்து போன ஸ்வாதியின் நண்பர்களில் ஒருவருக்கு யார் கொலையாளி என்று நன்றாக தெரிந்து இருக்கும். யாராவது ஒருவர் கொலையாளியின் போட்டோவை எடுத்து இருப்பார்கள். இந்த காவல் துறைக்கு பயந்து, சும்மா இருக்கிறார்கள்.
கொலையாளியை கண்டுபிடிங்க அப்படினா, அவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி ஆண் நண்பர், அது இதுனு பேட்டி கொடுத்து கொண்டு இருக்கார். ஏன், 25 வயது பெண்ணுக்கு ஆண் நண்பர் இருக்கக்கூடாது என்று சட்டமா?
Non Returning Indians (NRI’s) ஊருக்கு போறப்ப கவனமா இருங்கப்பா. எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு என்றைக்கும் தெரியாது. மாட்டினால், கறக்காமல் விட மாட்டார்கள். இந்தியா போறதும் தெரியக்கூடாது, வர்றதும் தெரியக்கூடாது. Road accident, இந்தியால இருக்கற அண்ணன் பையனுக்கு பெண் பார்க்கும் வேலை (வரதட்சணை கேஸ் உறுதி), அதிக பணம் transfer செய்வது (Bank உள்ளேயே சொல்ல ஆள் இருக்கு), நீதியை நிலைநாட்ட முயற்சிப்பது போன்ற விஷயங்களில் கவனம் தேவை.
விளைவுகளைப்பத்தி ஆராய்ச்சி செய்து அமைதியுடன் மக்கள் அகன்று விடும் சூழல் இன்று அதிகம் . சொந்த வாழ்க்கைக்கான ஓட்டம், பிரச்சனை வருமோ என்கின்ற பயம் ,பல விதமான அதிகார தலையீடுகள் மக்களை அச்சத்தின் விளிம்பிற்கு ஓட செய்துள்ளது . இது ஒரு நாளில் ஏற்பட்டது அல்ல , ஒரே நாளில் மாறப்போவதும் இல்லை . இனி வரும் காலங்களில் முக நூல் , வாட்ஸ் அப் போன்ற தொழில் நுட்ப வடிவில்தான் மக்களின் வீரம் , கோபம் , காதல் ,நட்பு , சமுதாய சிந்தனை , தகவல் பரிமாற்றங்கள் , கருத்து சண்டைகள் இடம் பெரும் . புதிய பரிணாம வளர்ச்சிக்கு நம் உடலும் , மனமும் , செல்களும் , ரத்தமும் , சதைகளும் , நரம்புகளும் தயாராகி வருகின்றன. அறிவியல் , தொழில் நுட்ப வளர்ச்சி , சமுதாய மாற்றம் மனித இனத்தின் தவிர்க்க முடியாத சுகமான சுமைகள்.
13 வரிகளில் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பிரமாதமாக எழுதிவிட்டிர்கள்.
இதுல, இந்த முகநூல் காதல் இருக்கே…அப்பப்பப்பா!!!
Mr Larry Man, நன்றி நண்பரே , நாம் பெற்ற வாழ்க்கை முறை இன்று நடை முறையில் மாறிவிட்டது . பெற்றோர்கள் , குடும்ப உறவுகள் ,ஆசிரியர்கள் , நண்பர்கள் , புத்தகங்கள் ,சமுதாய சிந்தனை , பல துறை அனுபவங்கள் நம்மை செதுக்கிய சிற்பிகள் . இன்று கொஞ்சம் இடை வெளி உள்ளது , பெற்றோர்கள் முழு நேர சிற்பியாக இருந்தால் மட்டுமே ,இளைய தலைமுறை, தனிமனித ஒழுக்கம் , நல்ல சூழல் ,பரந்த நோக்கம் , சமுதாய சிந்தனையுடன் சிறகடித்து பறக்கலாம், வாழ்க்கையை ரசிக்கலாம்.
100% Sir.
Am copying Thala. Idhuku than yellarum bayapadranaga. India urupadave urupadadhu
இத எழுதியதுக்கு நம்மை தூக்கி உள்ள போடாம இருந்தாவே போதும். அதனால இதை கதையா படிங்க… ஐய்யாமாரே!!!
கொலை சம்பந்தமாக எத்தனையோ செய்திகளை அவ்வப்போது நாம் படித்தால் கூட ஒரு சில கொலைகள் நம்மை அதிகமாக சிந்திக்க வைத்து விடுகின்றன. நிர்பயா கற்பழிப்பு கொலையின் போது டெல்லியில் நானிருந்த போது நடுத்தர வர்கத்தின் பெரும் சீற்றம் வெளிபட்டதை நேரடியாகக் காண நேர்ந்தது.அதற்கு பின்புஇனி கொஞ்சம் சரியாவதற்கு வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கை கூட இருந்தது. ஒரு அடி முன்னேறு,இரண்டடி பின்னேறு என்கிற கதையாக மீண்டும் நாம் அடிப்படை பிரச்சினையை இன்னும் சரி செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளோம்.
சமுதாயக் கட்டமைப்பில் யாரை எங்கே வைக்க வேண்டும், எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது ஒட்டு மொத்த சமுதாயம். தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை அரசியலிலிருப்பவர்களுக்கும்,அரிதாரம் பூசியவர்களுக்கும் தரும் குளறுபடியான சமுதாயத்தில் இத்தகைய அதிர்ச்சி கதைகளை தொடர்ந்து படிக்க போவது தவிர்க்க முடியாது.
ஊரைச் சொல்லிக் குற்றமில்லை.
ஏனென்றால் இதில்,
யாருக்கும் வெட்கமில்லை.
Lingi Chetty
ரைட்.