இது உண்மையில் நடந்தது.

போன மாதம் ஒரு வட இந்தியர் என்னை சந்தித்து ஒரு Start Up ஆரம்பிப்பதாக சொன்னார்.
என்னிடம் பிசினஸ் கன்சல்டன்சி தேவைக்காக வந்தவர். பின்னர் ஒரு ஒரு காபி ஷாப்பில் அவர் செலவில் சந்தித்தோம்.

அவர் ஒரு பார்மசிஸ்ட் விஞ்ஞானி.
பிசினஸ் மைண்ட். இந்தியன் பாடி. டிங்கரிங் இன் அமெரிக்கா. சர்வீஸ் இன் கனடா.
இந்தியாவில் பிறந்து அமேரிக்காவில் படித்து கனடாவில் செட்டில் ஆனவர்.

அவரிடம் ஹெல்த் supplement – patented போர்முலாக்கள் சில உள்ளது.
இவை ஐரோப்பாவிலும், அமெரிக்காவில் சக்கை போடு போட்டவை.

இருப்பினும் இந்தியாவில் சென்று விற்க வேண்டும் என்று ஒரு வருடமாக பிளான் செய்து வந்தார்.
ஆனால் இந்தியாவில் முன் இருந்த FDI பாலிசி படி 40% மட்டுமே இவர் பார்மா தொழிலில் கனேடியனாக முதலீடு செய்ய முடியும். அவருக்கு ஒரு நமிக்கையான இந்திய கம்பெனி தேவைபட்டது. எந்த கம்பெனியை நம்புவது என்று ஒரே குழப்பம். அமுல் இந்தியா போன்றவைகளும், சில மிக பிரபலமான இந்திய பார்மா lab மும் முண்டி அடித்து அவரிடம் பேரம் பேசின. சன் பார்மா, அரபிந்தோ பார்மா, டாக்டர் ரெட்டி போன்றவர்கள் முன்னிலை.

இந்தியாவின் பார்மா இண்டஸ்ட்ரியின் ஒரு வருட பிசினஸ் turnover சுமார் 20 பில்லியன் டாலர்கள். பணம் கொழிக்கும் பிசினஸ்.
இதில் FDI % தான் கிடுக்கிப்பிடி. 60% இந்தியா கம்பெனிக்கு கொடுத்துவிட்டு 40% மட்டுமே இவர் முதலீடு செய்வதால் இவரால் பேரத்தில் அழுத்தி பேச முடியாது. சுமார் 5 முறை இந்தியாவுக்கு சென்றும் இவருக்கு 60% கொடுக்கும் முடிவு ஒரு தடங்கலாக இருந்தது. இதில் க்ரீன் பீல்டு பார்மா, பிரௌன் பீல்டு பார்மா செக்டார் என்று எல்லாம் உள்ளது. அந்த டீடைல் இங்கு தேவை இல்லை.

முன்னாள் இந்திய குடிமகனாக இருந்த ஒருவருக்கே இந்தியாவில் உள்ள மார்க்கெட்டிங் கட்டமைப்பு கொண்ட ஒரு இந்திய கம்பெனிக்கு தன் லாபத்தில் அதிக பங்கு கொடுக்க விருப்பமில்லை. என்னதான் பிசினஸ் என்றாலும் ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஒரு வெளிநாட்டு கம்பெனி உள்ளெ புகுந்து முதலீடு செய்தாலும் அந்த லாபம் முழுவதும் மீண்டும் அதே வெளிநாட்டுக்கு மறைமுகமாக வந்து சேரும். இன்வெஸ்ட்மென்ட் பொறுத்துதான் Board of Directors இருப்பார்கள். எவ்வளவு இந்தியர்கள், எவ்வளவு கனேடியர்கள் என்று விகிதம், பங்கு என்று ஏகப்பட்ட கிடுக்கு பிடிகள். இதை எல்லாம் சமாளிக்க போன மாதம் இந்தியா போய் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தார்.

டீல் சைன் ஆகும் நிலையில் மத்திய அரசின் இந்த 100% FDI கொள்கை வெளிவந்தது. அட்றா சக்கை !!!
எகானமி கிளாஸ் flight ல் இந்தியா போனவர், டீல் சைன் செய்யாமல் பிசினெஸ் கிளாசில் புக் செய்து கனடாவுக்கு இந்த வாரம் திரும்பி வருகிறார்.

போனில் பேசினேன். அவருக்கு செம சந்தோஷம்.
இனி இந்தியாவில் யார் தயவும் தேவை இல்லை என்கிறார். நானே என் கம்பெனிக்கு ராஜா நானே மந்திரி என்கிறார்.

100% கனேடியன் கம்பெனியாக இந்தியாவில் வியாபாரம் நடத்தி, மெதுவாக RBI க்கு டேக்கா கொடுத்து மறைமுகமாக பணத்தை இங்கு எடுத்து வர முடியும்.
உதாரணமாக அங்கு வரும் லாபத்தை மீண்டும் ரிசெர்ச் செய்ய இங்கு கொண்டு வரலாம்.

என் முன்னாள் கிளைன்ட்களான LUK இந்தியா இனி முழு LUK Germany ஆகும். ITEMA இந்தியா இனி ITEMA இத்தாலி ஆகும். லக்ஷ்மி REITER, Givaudan India இனி குவாடன் ஸ்விஸ் ஆகும்.

இந்திய consumer மார்க்கெட் ஒரு தங்க சுரங்கம்.
அதை ஒருவர் வெட்டி செல்ல 100% அனுமதி கொடுத்ததின் விளைவை அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் இந்தியாவில் பார்க்கலாம்.

சக்தி மசாலா சையது பீடி போல புகையும்.
ஆனந்த் பனியன் ஜட்டிகள் எல்லாம் 1980 பொன்வண்டு சோப்புகள் போல கரையும்.

எனக்கு தெரிந்த ஒரு தனி நபர் கம்பெனிக்கு இந்த சுகாபனுவம் என்றால் 20 பில்லியன் மார்க்கெட்டில் இனி முழுவதும் வெளிநாட்டு ராஜ்ஜியம்தான்.
யோசித்து பாருங்கள் கண்ணுக்கு தெரிந்த வியாபாரத்தில் இந்த அளவு வீரியம் இருப்பின் இராணுவம், சிவில் வர்த்தகத்தில் எத்தனை கோட்டைகளை விட்டு கொடுத்து உள்ளோம் என்று.

இந்த make in இந்தியா, சுவச் இந்தியா, மாம்பழ இந்தியா எல்லாமே மார்க்கெட்டிங் keywords.
வெளிநாட்டு பயணம் மூலம், இந்தியாவில் தொழில் வளர்க்கிறேன், முதலீடு கொண்டு வருகிறேன் என்கிறார்கள்.

அப்படி என்றால், முதலில் இந்தியாவில் எல்லா மக்களுக்கும் கக்கூஸ் கட்டி தர முதலீட்டை வெளிநாட்டில்ஏன் கொண்டு வருவதில்லை?

உண்மையாக நேசிப்பவன் ஊருக்கே தெரியும் படி தினமும் மல்லி பூவும், அல்வாவும் மனைவிக்கு வாங்கி கொடுத்து கொஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
அப்படி ஒருவர் தினம் செய்தால் அவருக்கு பக்கத்து ஊரில் வைப்பாட்டி இருக்குனு அர்த்தம்.

தேசப் பற்று, தேசப் பற்று என்று தினமும் அறைக் கூவல் கூவிவிட்டு, பின்னர் தேசப் பற்றை தேங்காய் பார்பிக்கு விற்க கூடாது.
பல் விளக்குவது, பூவா சாப்பிடுவது, கக்கா போவது, குழந்தை பெறுவது போன்றவற்றில் நமக்கு குறைகளோ, பிரச்சனைகளோ இருந்தால் சிலர் உதவியையோ, டாக்ட்டரையோ நாடலாம்.
தப்பில்லை. எப்போதும் அதை 100% இன்னொருவர் நமக்காக செய்ய அனுமதிக்க கூடாது.

தேச பற்று நம் உடலை போன்றது.
கஷ்டமோ நஷ்டமோ அதை நாமே பேணி காத்தால்தான் நீடுடி வாழலாம்.