எல்லாரும் ஒவ்வொரு ரகம்.
ஒவ்வொரு திங்கிங்.
தனித் தனி thought process.
எனக்கு என்ன தோனுதோ அதைத்தான் நான் எழுத முடியும். எல்லாருக்கும் பிடிக்கிறதை எழுதனும்ன்னா ” குட் மார்னிங் பிரண்ட்ஸ், குட் ஈவீனிங் பிரண்ட்ஸ்” னு எழுதுனாவே போதும்.
மற்றபடி எழுதும் எல்லோர் கருத்தையும் நான் உள்வாங்கிக்குவேன். அதை ஏத்துகிறனா இல்லையா என்பது தனி மேட்டர்.
கருத்து என்பதே வித விதமா இருந்தாதான் அது பேர் கருத்து.
ஒண்ணா இருந்தா ஒருமித்த கருத்து.
இதுவரைக்கும் உலகத்தில் அப்படினு ஒண்ணு இருக்கவே இல்லை. பூமி உருண்டைனு நம்பாதவன் நாலு பேர் இருக்கத்தான் செய்வான்.
புரியுது !
புரியற மாதிரி இருக்குது.
என்ன சொல்ல வரீங்க
ஏதோ சொல்ல வரீங்க.ம்ம்ம்ம்ம்ம் ……….
.
.
.
.
புரிஞ்சுடுச்சு…ஆமோதிக்கறேன் !
இதுவும் ஒரு கர்த்த்துதான்.
Sridar Elumalai தலைவர் தகுதி சரியே !
இல்ல…பம்மல் மோடுல இருந்தேன்…..வேண்டாத மருமகள் கால் பட்டால் குத்தம் …கை பட்டால் குத்தம்னு…ஆச்சுன்னா …அப்படின்னு…
இனி நான் நானா இருந்து என் கருத்தை எழுதறேன்..back to form….
இப்ப எதுக்கு மாமியார ஓரண்டை இழுக்கிறீங்க?
கருத்து சுவாமி கருத்து…என் கருத்து…சொந்தக் கருத்து…..”ஓரண்டை” என்றால் என்ன?
Brindha Suresh
Facebook ல எழுதினா, சிலர் லைக் போட்டுட்டு திட்டுவாங்க, சிலர் லைக் போடாம கொஞ்சுவாங்க, சிலர் நான் படிச்சேன் … அது கரெக்ட் இல்லை இதுதான் ரைட்னு சோபாவில் அமர்ந்து சொல்லுவாங்க, சிலர் கல் எடுத்து அடிப்பாங்க, சிலர் பாலாபிஷிஷேகம் செய்வாங்க…
இதுக்கு எல்லாம் யோசிச்சா கீ போர்ட்டை விட கை ரொம்ப ஆடும்…
Everyone’s opinion will of course be different. Why can’t people respect that and agree to disagree?
நாலு பேர் இருக்கத்தான் செய்வான். /// I do observe to different thought processes by different people on the same topics either admitting one’s or ignoring one’s thought is different matter, however much entertained by diplomatic people thought process, way i took it or it helps me to move, research and learn it thoroughly for utter clarity. விதன்டாவதம் வரவேற்க்கதக்கது அந்த 4 பேருக்கு எதிர்மறை கருத்துக்கும் ஊக்கம் எங்குட் இருந்து வரும் தெரியல, ஆனால் அவர்களும் என் நன்றி!! இவிங்களால தான் வாழ்க்கை / கருத்தரங்கமே நல்லா என்டர்டைன்மேன்ட் ஆகுது, சில நேரம்.
பூமி ஏன் உருண்டைனு விவாதிக்கலாம். ஏன் அதை 4 பேர் ஒத்துக்க மாட்டேன்னு விவாதிக்காம இருந்தா போதும்.
ஆஹா! குருவே ஆழ்ந்த கருத்துள்ள கலாய்!!
Sridar Elumalai விவாதிச்சா என்னவாம் . பொழுது போகலையா இருக்கும் ?
Batman emo pics!?!?!
Maddy Vijay அவ்வளவு தெரிஞ்ச அறிவாளி இல்லை. why not? அப்படின்னு போடறதா நினைப்பு எனக்கு…
Why not? // Definitely! ௐ ஶ்ரீ ஶ்ரீ டர் குருவே துணை.
இந்த கர்ர்ர்ர்து யாருக்கோ மறைமுகமா சமாதான கருத்து சொல்ற மாதிரி இருக்கே…
பிரம்மச்சாரி குறும்பா?
குறும்பல்ல, கருத்து ????
கர்ர்ர்ர்த்து…
ஆங்.. ஆமாம்… கர்ர்ர்ர்து.. ????
Thiruvarutchelvan Durairajan கருத்துள்ள கருத்தைத் தந்த கருத்துத் திலமே! திருவருட் செல்வனே! நீவிர் வாழி!
மன்னிக்கவும்…ஏதோ சரித்திர நாடகத்துக்கு வசனம் எழுதறதா நினைச்சிட்டேன்.
படத்தை மாத்துங்க தம்பி..பாண்டாவைப் பார்த்தா போண்டா ஞாபகம்தான் வருது !
ஹீீ ஹீ போண்டாவும் நானே பாண்டாவும் நானே…!
Coming soon my adventures with Muttai Bonda
போண்டா…..
????
படத்தை மாத்துங்க தம்பி..பாண்டாவைப் பார்த்தா போண்டா ஞாபகம் தான் வருது // #செம்ம_கலாய் would you allow to copy / can i use it in humorous scripts, please?
Maddy Vijay தம்பி நீங்க யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க இப்போ? கணேஷ் கிட்டயா என் கிட்டயா?
Brindha @ : That comment meant for fun and perfect timing. I thought it could bring smile to anyone as i liked it jovial Would you don’t mind if i alter/ use it for short film scripts to use that trolling sentence, it was naturally humorous scene.
தாராளமாக!
இரு நகைச்சுவை உணர்வாளருக்கும் எமது நன்றி!!
Ganesh Ramalingam எப்ப வருது போண்டாப் பதிவு..ஊசிடப் போகுது நாளானா ?
Surprise
haha!! I’m waiting Mr.Ganesh லபக்னு முட்ட போண்டாவ விழுங்கிட்டு தான் எழுதுங்கள்!
குருநாதா @: Mind voice capturing device or gadgets இந்த பிலூடுத் மாதிரி உதிரி பாகம் இருக்கா!??!?? இபே இல்ல அமேசான்ல வருமா?!
என்னமொ ஆயிடுச்சு!!!!
கொடுமை என்னனா இதை எழுதி ஒரு 10 நாள் ஆவுது. Schedule ல அதுவே போட்டது.
காலை வணக்கமுன்னு –
இந்தியாவுல இருந்துக்கிட்டு முகநூலில் எழுதினால்,
அது எல்லோருக்கும் பிடிக்குமுனு நினைத்தால்,
அப்போது அது எனக்கு மாலை நேரமாதலால்,
அதில் எனக்கு உடன்பாடு இல்லைங்கிறது
எனது கருத்துங்கோ – பொருத்தருள்க – கர்ர்ர்த்துங்கோ…. குருஜி!
நிச்சயமா அய்யா ! வணக்கம் என்ற சொல்தான் தமிழில் உள்ளது…காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் எல்லாம் “வாலறுந்த நரி” கதைதான். க ர் ர் ர் ர் த்து …மட்டுமல்ல …கடுப்பும் கூடத்தான்
நம்ம அக்கா கனிமொழியும், அப்புறம் காரைக்குடி சிதம்பரம் மகன் கார்த்தியும் சேர்ந்து கருத்து.காம் என்ற தளம் சில வருடங்கள் முன்பு ஆரம்பித்தார்கள். நான் கொஞ்ச நாள் படிச்சேன். திரும்ப, திரும்ப அதே டாபிக்ஸ், அப்புறம் ஏராளமான தனி மனித தாக்குதல்கள், கெட்ட வார்த்தைகள்.
உங்க பதிவை பார்த்த பின், ஞாபகம் வந்து அந்த தளத்தை எடுத்துப்பார்த்தால் .. அது இல்ல.
என்னை பொறுத்தவரை, ஒரு குரூப்ல் உள்ளவர்கள் பயன் உள்ள பதிவுகளை வாரம் ஒரு முறையாவது எழுத வேண்டும். மற்றவர்களுக்கு தான் கற்றதை விளக்கும் வகையில் ஒரு தோழமை உணர்வுடன் இருக்கவேண்டும்.
ஒரு புது மொழி “முக நூலில், தினமும் ஒரு புதிய விஷயத்தை நீ கற்றுகொள்ளவிட்டால், தவறான ஆட்களை தொடருகிறாய்”.
தனக்கு என்று வரும்போது மட்டும், பாய்ந்து வந்து பின்னூட்டம் எழுதுவது, கணவன் ஐடிக்குள் புகுந்து மனைவி கருத்து எழுதுவது, மனைவி ஐடிக்குள் புகுந்து கணவன் கருத்து எழுதுவது, சுய பக்கங்களை அனு தினமும் விளம்பரம் செய்வது, திண்ணை ஸ்டைல் ஜாடை பேசுவது, உள்குத்து, உள்மனது வெறி போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
சரி, நானும் கருத்து சொல்லிட்டேன்.
கருத்து.காம் நானும் படிச்சேன்…
What app ல் குட் நைட்னு படிச்சிட்டு ஆபிஸில் பகலில் தூங்கவா முடியும்?
நீங்கள் எப்படி வான்கூவர் தமிழ் உலகம் என்ற பக்கத்தை இணையத்தில் கண்டு பிடித்தீர்கள்?
மக்களுக்கு ஒன்று போய்ச் சேர வேண்டும் என்றால் அதைப் பகிர்ந்தால் என்ன தவறு? யாரும் எதுவும் பகிரக் கூடாது என்ற தடை இல்லையே. ஸ்ரீதர் சொல்வது போல சுய நெறி முறை வேண்டும் ..அவ்வளவே.
ஒருவர் ஐடியில் மற்றொருவர் எழுதுகிறார்கள் என்று கண்டு பிடிக்கும் ஞான திருஷ்டியை எப்போது அடைந்தீர் ?
குத்துக்களிலும் முதல் குத்து ,சம்மந்தமில்லாக் குத்து, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் குத்து, உரல் குத்து, கைக் குத்து, கும்மாங் குத்து, குனியக் குனியக் குத்து என்று பலவகைக் குத்துக்கள் உண்டு.
நிறையப் பேர் தினமும் முகநூலில் எட்டிப் பார்ப்பதில்லை. பழைய பதிவுகள் தேடிப் பார்ப்பதில்லை. அவர்கள் பார்க்கும் நேரத்தில் இருக்கும் ஒரு சில பதிவுகளைப் படிக்கலாம். விரும்பலாம், அல்லது பின்னூட்டம் எழுதலாம். ஒண்ணுமே செய்யாம போகலாம். அவங்க அவங்க விருப்பம். நாமென்ன சொல்றதுக்கு இதுல இருக்கு ?
பயன் என்பது ஒவ்வொருவர் தேவையைப் பொறுத்தது. ஒருவருக்கு அரசியல் பிடிக்கலாம். ஒருவருக்கு சினிமா, சமையல் , பொது அறிவு , பாட்டு, கவிதை என்று பிடிக்கலாம். தனக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கணும்னு எதிர் பார்க்க முடியுமா?
முழுக்கதையையும் படிக்காமல் முன்கதையோ முடிவுப் பக்கமோ பார்த்து விமர்சனம் செய்ய முடியாதே? அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் பார்வை வேறுபடும். அதுவும் இடத்துக்கு இடம் ,நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம்…நொடிக்கு நொடி…இந்த ஊரில் எனக்குப் பிடித்தது….I have changed my mind!….என்று சொல்லக் கூடிய உரிமை….எண்ணச் சுதந்திரம் மட்டுமல்ல…அதை வெளிப்படுத்தவும் தடையில்லை என்ற சுதந்திரம்..உரிமை….எல்லாமும்தான்.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்த்து …..தான்……
Brindha Suresh உங்களை பற்றி நான் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஏன் ஒரு வெறியுடன் என்னை tag செய்து எழுத வேண்டும்? ஏன் இவ்வளவு கோபம்? எரிச்சல்? நீங்கள் எழுதியது கர்ர்ர்ர்ர்த்தது இல்லை… தனி மனித தாக்குதல் குப்பை.
என்னுடைய ஞான திருஷ்டியை புரிந்து கொள்ள ஒருவருக்கு ஞானம் வேண்டும். கோபம், எரிச்சல் இருக்கும் இடத்தில் ஞானம் இல்லாததால், அதை பார்க்க முடியாது.
மன்னிக்கவும்…உங்களுக்கு பதிலில் எழுத வேண்டியதைத் தவறுதலாக comment இல் போட்டு விட்டேன். உங்களை என் தாக்குவதாக நினைக்கிறீர்கள் ? கேள்விகள் அவ்வளவுதான்
ஏன்?*
மேலும், தன்னுடைய கமெண்ட் மேல வர வேண்டும் என்பதற்க்காக “போஸ்ட் குத்து” வேலைகளை செய்யும் ஆள் நான் இல்லை. அதற்கு பெயர் வேறு.
Brindha Suresh இதற்கு பெயர் என்ன /***ஒருவர் ஐடியில் மற்றொருவர் எழுதுகிறார்கள் என்று கண்டு பிடிக்கும் ஞான திருஷ்டியை எப்போது அடைந்தீர் ? ***/ ???????
கருத்து என்பது பொதுவாக எழுதுவது. ஒருவரை tag பண்ணி இதைப்போன்ற வரிகளை எழுதினால், அதற்கு பெயர் தாக்குதல். “என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல உங்கள் தாக்குதல் அமைந்து விட்டது.
என்னால் இதை விட அதிகம் பேச முடியும், எழுத முடியும். நான் நாகரீகமானவன் என்பதால் இதோடு விட்டு விடுகிறேன்.
நான் சொல்ல வந்தது உங்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை என்று தோன்றுகிறது. கருத்தில் மாற்றம் இல்லை. எழுதிய விதம் உங்களுக்கு அப்படி ்இருந்தால் பொருட்படுத்தாதீர்.
tag எடுத்து விட்டேன்
Brindha Suresh என்னை குறிப்பிட்டு எதற்காக எழுத வேண்டும்? ஞானம் இல்லாதவர்கள் ஞான திருஷ்டியை எப்படி கண்டு பிடிக்க முடியும்?
அடடா ! என்னால் இந்தக் கோணத்தில் சிந்திக்கத் தெரியவில்லை.மன்னிக்கவும்.
ஒரு பாரசீக பழமொழி “முதலில் கோபப்படுபவன், அவமானத்தில் குந்தி அமர்ந்து கொள்வான்”
குருநாதா… இது “கர்ர்ர்ர்து” ஆ.. இல்ல கார்ர்ர்ர்ர் தூஊ வா?
கரெக்ட்டா புடுச்சிட்ட