ஆரம்பிச்சுட்டாங்க….ய்ய்யா…ஆரம்பிச்சுட்டாங்க…டமில் டமில் டமில்.

தமிழ் நாட்டில் “தமிழ்… தமிழ்” னு இப்படி ஓவரா கூவி ஹிந்தி படிக்காமல் தடுத்ததால்தான் போன generation ல் எத்தனையோ சேட்டு பொண்ணுங்க தமிழ் பசங்களுக்கு  கிடைக்காம போச்சு. இந்த பாவம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு தான் போய் சேரும். 

ஹிந்தியை மட்டுமே படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று மத்திய அரசு ல், தமிழ் பெயர் பலககைகளை கரி பூசி அழித்தது எந்த அளவு தப்போ அதே அளவு தப்பு தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்தியை டார்கெட் செய்து தமிழ் மக்களை படிக்க விடாமல் தடுத்ததும் மகா பெரிய தப்பு. 

ஹிந்தியும் தமிழ் போல் ஒரு மொழி. மொழி ஒரு communication ஒலி ஊடகம். இது தொண்மையானது, இது தகர டப்பா என்று என்னை பொறுத்தவரை கிடையாது. குருவிகாரனுக்கு கூட அவன் மொழிதான் உயர்ந்த மொழி. 

நாம் தமிழ் நாட்டில் வலுக் கட்டாய ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்து இருக்க வேண்டும். ஹிந்தியை எதிர்பதாக சொல்லி அரசியலுக்காக ஒட்டு மொத்தமாக படிக்க வாய்ப்பு இல்லாமல் எதிர்த்ததும் முடக்கியதும் தவறு. 

இதில் நாம் சாதித்தது ஒண்னே ஒண்ணுதான். சிம்ரன், சம்ந்தா, குஷ்பு போன்ற ஹிந்தி பேசும் நடிகைகள் தமிழை கொலை செய்யும் போது தமிழ்களாகிய நாம் வட நாட்டு பாணி பூரியும், பேல் பூரியும் சாப்பிட்டுக்கொண்டே கைதட்டி ரசிக்க கத்துக்கொண்டதுதான் மிச்சம். 

மொழிகள் காலத்துக்கு அப்பார்பட்டவை. தமிழை எப்படி காலத்தால் அழிக்க முடியாதோ அதே போல் ஹிந்தி திணிப்பினால் ஹிந்தியையும் ஒரு மத்திய அரசால் இதுக்கு மேல் வளர்க்க முடியாது. 

மாற்றம் இல்லா மொழி அழியும். அழியும் என்றால் அழியும். இன்னொரு மொழியால் ஒரு மொழி அழியாது. 

என்னைக்காவது நாம் சாப்பிடும் வட நாட்டு சப்பாத்தி இட்லியை அழித்ததுண்டா? அது ஒரு பக்கம் பிளேட்டில் இருந்தா வயித்துக்கு நல்லதுதானே?

I love you .. என்பதை Main tumase pyaar karata hoon என்று சேட்டு பொண்ணு சொல்லும் போது ஹி ஹி no mention..என்று சொல்லி வாழ்க்கையை இழந்த தமிழ் பசங்க ஏராளம். 

I mean …every opportunity is missed.

தமிழ்நாடு முழுவதும் தெரிந்த ஒரே ஹிந்தி வாக்கியம் இதுதான். “ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா”. அதுவும் பாக்யராஜ் ஸார்தான் எனக்கு சொல்லி கொடுத்தார். School லில் கலீல் வாத்தியார் சொன்னது எதுவுமே ஏறலை.

அப்பரடீன்சுகளா. …Sharuk Khan னும் ஐஸ்வர்யா ராயும் வாயை திறந்து ஏதோ பேசுறாங்கனு screen ல் தெரியுது. அது என்னனு தெரியாம இருக்கிற கஷ்டம் அவனவனுக்குதான் தெரியும்.
Manga பசங்க படுத்திய பாட்டில் இப்ப ஹிந்தி படத்துக்கு English subtitle போட்டு பார்த்தா கூட புரியமாட்டேங்குது. 

எங்களதான் உருப்படமா செய்தீங்க. கேரளா கர்நாடகாவில் எல்லாம் மலையாளமும் கண்ணடமும் செத்தா போச்சு?

போவியா !!!!