இன்றைய சென்ட்ரல் ,மற்றும் வடக்கு மெக்ஸிகோ முழுவதும் ஒரு காலத்தில் இந்த அஸ்டெக் மக்கள் வசம் இருந்தது.
அஸ்டெக் மக்கள்தான் இன்றைய சென்ட்ரல் மெக்ஸிக்கன் பூர்வ குடி மக்கள். இவர்களுடன், பின்னால் வந்த ஸ்பானியர்கள் கலந்துவிட்டார்கள்.
இன்று இருக்கும் மெக்சிக்கன் மக்கள் பெரும்பாலும் இந்த ஸ்பானிய மற்றும் அஸ்டெக் மக்களின் கலப்பினம்தான்.

இந்த மக்கள் வாழ்ந்த ஆண்டு சுமார் – 12 ஆம் நூறாண்டில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும்.
இதுதான் தென் அமெரிக்காவிலேயே அந்த காலத்தில் கொடிகட்டி பரந்த பேரரசு எனலாம்.

இவர்கள் வசம் மூன்று ஊர்கள் இருந்தன. டேக்ஸ்கோகோ, டேனோசிலன், ட்லாகோபன்.
இந்த நாகரீகம் முழுவதும் இந்த மூன்று நகரங்களை ஒட்டியே வளர்ந்தது எனலாம்.
மீதி உள்ள இடங்களில் காட்டு வாசி போல வாழ்ந்து வந்தார்கள்.

காட்டு பசங்கதான் என்றாலும் இவர்களிடம் ஒரு சமுதாய கட்டமைப்பு இருந்தது என்னவோ உண்மைதான்.
இவர்களின் மதமும் கடவுள் நம்பிக்கையும் படித்தால் குழம்பி விடுவீர்கள்.
இவர்கள், ஒரு சிக்கலான புரிதலுடன் இந்த உலகம் தோன்றியதை நம்பினார்கள்.

மொத்தம் 5 கடவுள்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்.
இந்த கடவுள்கள் எல்லாம் சேர்ந்து இந்த உலகை படைக்க 5 முறை முயன்றார்களாம்.

நான்கு முறையும் இந்த ஐந்து கடவுள்கள் உலகை படைக்க தோற்று விட்டார்கள்.
காரணம், தமிழ் நாடு காங்கிரஸ் போல கோஷ்டி சண்டை. கடவுள்களுக்கு இடையே அடிதடி சகஜமாக நடந்தது.

ஒரு கடவுள் உலகை உருவாக்கினால் அதை காற்று கொண்டு இன்னொரு கடவுள் அழித்து விடுவார்.
பின் இன்னொரு கடவுள் உலகை உருவாக்கினால் அதை மழை வெள்ளம் கொண்டு இன்னொரு கடவுள் அழித்து விடுவார்.
இப்படியே 3 முறை ஆனது.

இப்படியே போனால் உலகை படைக்க முடியாது என்று கடவுள்கள் எல்லாம் சேர்ந்து யோசித்தார்கள்.
சூரிய பதவிதான் தலைமை பதவி. ஒவ்வொரு கடவுளும் இந்த பதவியை rotation முறைப்படி எடுத்து கொள்ளலாம்.

எல்லா கடவுள்களுக்கும் சூரிய பதவி இதன் மூலமாக கிடைக்கும்…எப்படி என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
சரி, என்று ஒத்துக்கொண்டு …முதலில் சூரிய பதவியை டம்மி பீசு… மற்றும் மிக அமைதியான கடவுளான “நானுட்” என்பவருக்கு கொடுத்தார்கள்.

“நானுட்” சூரியன் பதவியில் அமர்களமாக அமர்ந்து உலகை உருவாக்கினார். எல்லா கடவுள்களும் அதற்கு துணை புரிந்தன.
Rotation காலம் முடிந்தது. பொதுக் குழுவை கூட்டி யார் அடுத்த சூரிய கடவுள் என்று முடிவு செய்யலாம் என்று மீதி நாலு கடவுள்களும் கூடி பேசினார்கள்.

இருந்த நாலு பேரில் அடுத்த சாந்தமான ஒரு ஆளை சண்டை இல்லாமல் தேர்ந்து எடுத்து பொதுக் குழுவில் அவரை முன் மொழிந்து ஏக மனதாக தலைவரை தேர்ந்து எடுக்க முடிவு செய்தார்கள்.
இதை “நானுட்” வுக்கு சொல்லி அனுப்பினார்கள்.

ஒக்க்கீ டொன்க்கீ என்றார் நானுட்.
பொதுக் குழுவும் கூடியது.

“நானுட்” தள்ளாடி தள்ளாடி மைக் பிடித்து பேசியது.
அடுத்த rotation க்கு என்னை விட சிறந்த ஆள் இந்த சூரிய கழகத்தில் இல்லை.

ஜனநாயக முறைப்படி சிறந்த கடவுள்ளான நான்தான் இனி பெர்மனெண்ட் சூரிய கடவுள் என்று ஒரு போடு போட்டது.
இதை கேட்ட நான்கு கடவுள்களும் ஆடிப் போயின.
கடவுள்களுக்கு இடையே இருந்த சண்டைதான் தமிழ்நாடு காங்கிரஸ் போல இருந்தாலும், தலைமை இடம் திராவிட கட்சி போல் ஓரே இடதிலில் இருந்ததே சண்டைக்கு மிகப் பெரிய காரணம்.

இதை உடைக்க ஓரே வழிதான் இருந்தது …

அந்த கொடூர வழி …

வரலாறு தொடரும்.