இந்த நாகரீகம், தோன்றிய இடம் தென் அமெரிக்கா.
இதை தென் அமெரிக்க மீசோ நாகரீகம் என்றும் அழைக்கலாம்.
சுமார் 14 காவது நூற்றாண்டு முதல் 16 ஆவது நூற்றாண்டு வரை தழைத்து ஓங்கிய நாகரீகம் இது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய மெக்ஸிகோ நாட்டின் நடுப் பகுதியில் ஒரு காலத்தில் ஒரு மிகப் பெரிய ஏரி இருந்தது.
அதன் பெயர் டெக்ஸ்காகோ ஏரி.
இதுதான் ஒரு மிகப் பெரிய இயற்கை ஏரி.
இதன் நடுவில் ஒரு பெரிய தீவு இருந்தது.
இந்த தீவுதான் இந்த நாகரீகம் தோன்றிய இடம்.

அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த இந்த பழங்குடி மக்களான இவர்கள், தங்களை “அஸ்டெக்குகள்” என்று அழைத்துக் கொண்டார்கள்.
உண்மையில் இவங்கதான் உலகமா காட்டு பசங்க…

Microsoft Games – Ensemble Studios வுடன் சேர்ந்து 1990 களில் ஒரு கேம் உருவாக்கினார்கள்.
இதை ஆடியவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
அதில் அஸ்டெக் (Aztec Empire) என்று கூட வரும்.

அதை நீங்கள் செலக்ட் செய்து ஆடினால் background மியூசிக்கில் “கிரியோ முரியோ” என்று ஒரு மியூசிக் வரும்.
இதை இசை அமைத்தவர் என்சபில் ஸ்டுடியோவின் இசை அமைப்பாளர் Stephen Rippy.
இந்த மியூசிக் போலவே இவர்கள் மொழியும் செம ரகளையா தனித்துவமா இருக்கும்.
இவர்கள் பேசும் மொழி நாகவற் மொழி. ஆங்கிலத்தில் Nahuatl என்பார்கள்.

இவர்கள் வாழ்ந்த இந்த பள்ளத்தாக்கு இன்றும் உள்ளது.
இதை valley of மெக்ஸிகோ என்பார்கள். மலையும்..மலை சார்ந்த இந்த பகுதி சுற்றி இருப்பது எரிமலைகள்.
இந்த நஹுல் மொழியில் கூக்குரல் இட்டால் இந்த பள்ளத்தாக்கே அதிரும்.
இன்றும் கூட சில மெக்ஸிகன் கிராமங்களில் இந்த மொழி பேசுபவர்கள் உண்டு.

இந்த நாகரீகம் ஒரு காட்டு பசங்க நாகரீகம்.
குழு குழுவாக வாழும் இவர்களுக்கு ஒரு ராஜா இருப்பார்.
அவர்தான் காட்டு ராஜா.

“ஆ வூ” னா இவருக்கு கோவம் வரும்.
சும்மா கோவம் எல்லாம் இல்லை…எல்லாமே காட்டு கோவம்.
கோவம் வந்தா எல்லோரையும் போட்டு தள்ளுவார்.
நம்மூர் மாதிரி கத்தி கபடா எல்லாம் இல்லை.
அது ஒரு கொடூர கொலை.

எப்போதும் சிந்து சமவெளி, மெசப்ட்டோமிய நாகரிகம் பற்றியே நம் பாட புத்தகதில் படித்த நமக்கு அஸ்டெக் நாகரிகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
இது ஒரு சிக்கலான நாகரிகம். இவர்கள் இப்படி கூட வாழ்ந்து இருப்பார்களா என்று கூட தோன்றும்.

உண்மையில் தென் அமெரிக்காவின் பல ஆச்சிரியங்களில் இந்த அஸ்டெக் நாகரிகமும் ஒன்று.
இன்று மெக்சிகோவின் தலைநகரமாகிய இருக்கும் மெக்ஸிகோ சிட்டியே இந்த அஸ்டெக் நாகரீகம் தோன்றிய டெக்ஸ்காகோ ஏரி மீது தான் கட்டப்பட்டு உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

இவர்கள் எப்படி கூடி வாழ்ந்தார்கள், எப்படி அழிந்தார்கள் என்று வரும் வாரங்களில் பார்ப்போம்.

தொடரும்
ஸ்ரீதர் ஏழுமலை.