ஃபியூரர், ஃபியூரர், ஃபியூரர் …
இந்த ஒரு சொல் ஒரு கொடுங்கோலனைக் குறிக்கும்.
அதாவது ..இது அடால்ப் ஹிட்லரை குறிக்கும்.

இந்த நூற்றாண்டின் மிக கொடூரமானவரும், மனித இனத்தையே தன் சர்வாதிகார ஆட்சியால் துவம்சம் செய்த ஒருவர்தான் ஃபியூரர்.
இதுவரை இரண்டாம் உலகப் போரை பற்றி பல புத்தகங்களும், திரைப் படங்களும் வந்து உள்ளன.
அதைப் போல் என்னில் அடங்கா டாக்குமென்டரிகளும் வந்து உள்ளன.

இந்த போரை நேரில் பார்த்தவர்கள், இந்த போரில் சண்டை இட்டவர்கள் …
மெதுவாக இந்த உலகத்தை விட்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்….

இன்னும் பல நூறு வருடங்கள் பின்பு இந்த நிகழ்வு ஒரு பழம்கதை ஆகிவிடும்.
ஆனால் இந்த போர் ஏற்படுத்திய உலக மாற்றம், மனித இனம் அழியும் வரை தொடரும் என்றால் அது மிகையாகாது.

சொன்னால் நம்ப மாடீர்கள். வெறும் ஆறே வருடம்தான்.
இந்த உலகத்தையே இந்த போர் புரட்டி போட்டு விட்டது.
சுமார் 85 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள்.

சொல்லப் போனால், ஆறு வருடம் ஒரு நாள்.
September ஒன்று, 1939 ஆண்டு ஆரம்பித்த போர் – September இரண்டு 1945 ஆண்டு முடிந்தது.
ஒரு வருடத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.

மொத்தம் இரண்டு பார்ட்டிகள். இரண்டுமே சந்தர்பவாத கூட்டணிகள்.

ஒரு பக்கம், ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, ஜப்பானின் ராஜா ஹீரோ ஹிதோ. இவர்கள் Axis கூட்டணி.
இன்னொரு பக்கம், ரஷ்ய குடியரசின் ஸ்டாலின், அமெரிக்க தலைவர் பிராங்க்ளின் ரூஸ் வெல்ட், தி மோஸ்ட் famous இங்கிலாந்து குண்டு மாமா வின்ஸ்டன் சர்சில், சீனாவின் சங் கை செக். இவர்கள் Allies கூட்டணி.

மனித குல வரலாற்றிலே அதிக நாட்கள், அதிக வருடங்கள் உக்கிரமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் சண்டை இட்ட ஓரே உலகப் போர் என்றால் அது இரண்டாம் உலகப் போர்.
இதில் பல நாடுகளின் தலை எழுத்து மாற்றி எழுதப்பட்டது. இந்த போர், பல பேரின் வாழ்க்கையை புரட்டி போட்டது.

தனி மனிதனின் பொருளாதாரம், உலக வாணிபம், அறிவியல், விஞ்ஞானம் என்றும் எதுவுமே இந்த போரில் தப்பவில்லை.
இன வெறி, மத வெறி, கொலை வெறி, பணம், புகட்டு என்று ஒன்றை ஒன்று மாறி கற்பழித்த காலம் அது.

இதை ஆங்கிலத்தில் ஹோலோகாஸ்ட் என்பார்கள்.
தமிழில் இதற்கு பெரும் இன அழிப்பு என்று பெயர்.

இன்றும் இது மறைமுகமாக பல நாடுகளில் சிறிய அளவில் நடந்தாலும், ஜெர்மனியில் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களை திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்தன் இது. யூதர்கள், சோவியத் போர் கைதிகள், பாரம்பரிய போலந்தினர்,ரோமானியர்கள், ஊனமுற்றோர், ஃப்ரீமேசன்ஸ், ஓரினச்சேர்க்கையாளர்கள், யெகோவாவின் சாட்சிகள், ஸ்பானிஷ் குடியரசுக் கட்சியினர் என்று குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகள் இது.

சுமார் 8 முகாம்களில், வித விதமாக கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் இன்றும் ஐரோப்பாவில் வலம் வருகின்றன.
இந்த மொத்த படுகொலைகளுக்கும் காரணகர்த்தா யார் என்றால் அது அந்த” ஃபியூரர், ஃபியூரர், ஃபியூரர்” …இவர் ஒருவரே முன் நின்று நடத்தியவர்.
நடக்க செய்தவர். “அந்த ஏழு நாட்கள்” என்ற இந்த வரலாற்று தொடர் ஹிடலரின் கடைசி 7 நாட்கள் மற்றும் அதை ஒட்டிய ஒரு பின்னோட்டம் கொண்ட 3 தொடராக வரப் போகிறது.

முடிந்தால் படிக்கவும், பிடித்தால் பகிரவும்.
கேள்விகள் இருப்பின் கேட்கவும்.

இனிதான் தொடக்கம்
ஸ்ரீதர் ஏழுமலை