என்னை பொறுத்தவரை வரலாறு மிக மிக சுவாரிசியமான ஒரு சப்ஜெக்ட்.
அதை புரிந்து கொள்ளும் விதத்திலும், படிக்கும் விதத்திலும் எப்போதும் lateral thinking வேண்டும்.
Lighter Sense கொண்டு படிக்க வேண்டும்.
Serious மேட்டர்னு வரலாற்றை படித்தால் அவ்வளவுதான்.

ஒண்ணு சொல்றேன்…..
உலகம் ரெண்டு பேரைத்தான் எப்பவுமே உத்து பார்க்கும்.
Facebook லும் இதே கதைதான்.
ஒண்ணு , நல்லவர்கள்; இன்னொன்னு …கெட்டவர்கள்.

மற்றவர்களை பற்றி இந்த உலகத்துக்கு கவலை இல்லை. இருக்கப் போவதும் இல்லை.
வரலாறில் எப்பவுமே இந்த ரெண்டு பேருக்குதான் இடம்.

நடப்பது நடக்கட்டும் நமக்கு ஏன்னா என்று திண்ணையில் உட்காந்து வேடிக்கை பார்த்தவர்கள் பற்றி உலகத்தில் எங்குமே குறிப்பு இருக்காது.
வரலாறில் கத்துக்க வேண்டிய முதல் பாடமே…வாழ்க்கையில் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்….
இதனால் நல்லது நடக்குமா, இல்லை கெட்டது நடக்குமா என்று யோசனை எல்லாம் செய்ய கூடாது.
இல்லையேல் நாம் வாழ்ந்ததுக்கு அர்த்தம் இல்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஷாஜஹானுக்கு மொத்தம் மூணு பொண்டாட்டிகள், 14 வைப்பாட்டிகள்.
இது எத்தனை பேருக்கு தெரியும்?

எல்லோருக்கும் தெரிந்தது மும்தாஜ் மட்டும்தான்.
மும்தாஜ் மட்டும்தான் வரலாறிலும் இடம் பிடித்தார்.

காரணம், அவர் கணவரை நேசித்தார்.
இது எல்லா ராணிகளும், மனைவிகளும் செய்வதுதான்.
இருந்தாலும் வரலாறில் இடம் பெரும் அளவுக்கு அதிகமாக நேசித்தார்.
உலகத்திலேயே தாஜ் மஹால் கட்டும் அளவுக்கு கணவனை நேசித்த ஓரே மனைவி அவர்தான்.
அதுதான் வரலாறு.

அதைப்போல் ஷாஜஹானுக்கு மும்தாஜ் இருக்கும் போதே குறுந்தாடி இருந்தது.
மும்தாஜ் இறந்தவுடன் இன்னொரு பிகரை செட் செய்து வாழ்ந்து அவரால் வாழ்ந்து இருக்க முடியும்.
இருந்தும்..ஏதோ ஒரு உந்தலில்தான் அவர் தாஜ் மஹாலை கட்டினார்.

தாஜ் மஹாலின் வரலாறை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது…
வரலாறில் இடம் பிடிக்க எதையாவது ஒன்றை நாம் தினம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இல்லை நாம் செய்து கொண்டு இருப்பது தானாகவே வரலாறில் ஒரு நாள் இடம் பிடிக்கும்.

இதனால் நல்லது நடக்குமா, இல்லை கெட்டது நடக்குமா என்று யோசனை எல்லாம் செய்ய கூடாது.
பில் கேட்ஸ் ஜன்னலை கண்டு பிடித்தது ஆகட்டும், மார்க் Facebook கண்டுபிடித்தது ஆகட்டும்.

வரலாற்றில் இடம் பெற்ற ராஜராஜ சோழன் முதல், வண்ணத் திரையில் இடம் பிடித்த வண்டு முருகன் வரை ஓரே தியரிதான்.
சும்மா இருக்க கூடாது.
வித்தியாசமாக எதையாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வரலாற்றில் நாம் கற்க வேண்டிய முதல் பாடம்.

கல்வெட்டை செதுக்கியவன் பற்றி கவலை இல்லை.
கல்வெட்டில் இடம் பெற வாழ வேண்டும்.

மீதி பாடங்கள், இனி தொடரும்

ஸ்ரீதர் ஏழுமலை