தான் வாழ்ந்து சாதித்தைவிட, தான் இறந்த பின்பும் தன் சிந்தனைகளை உயிருள்ள விதைகள் மூலம் சாதனைகளாக உலகில் பரப்புபவனே உண்மையான கலைஞன்.
யதார்த்த கலைஞனும், செல்லுல்லாய்ட் சிந்தனை சிற்பியுமான பாலு மகேந்திரா நம்மிடையே ஒரு ‘ஆடுகளத்தில்’ விதைத்துவிட்டு சென்ற விதை ஒன்று வெற்றியுடன் வெற்றிமாறானை, தான்தான் பாலுவுன் அந்த சிந்தனை விதை என்று ‘விசாரணை’ இன்றி உலக அரங்கில் சொல்ல வைத்த படம்தான் விசாரணை.
இரானிய படமான அஸ்கர் பாராடியின் “The separation” மற்றும் 1969 ல் இரானில் வெளிவந்த தாருஸ் மேஹ்ருஜியின் The cow போன்ற உலக தர யதார்த்த சினிமாவகை படம் தான் விசாரணை.
படத்தில் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு ஆட்டோ காட்சி வரும். போலிஸ் மூன்று பேரை பிடித்துக் கொண்டு போலிஸ் Station நோக்கி செல்வார்கள். அந்த ஆட்டோவில் பின் சீட்டில் மூன்று பேரும் ஒரு போலீசும் அமர்ந்து இருப்பார்கள். அந்த சந்துக்கு இடையே கேமராவை சொருகி first person ஆங்கிளில் போலீஸ் ஸ்டேஷனனை ஒரு வித நிஜ ஆட்டோ ஆடலில் காண்பித்து இருப்பார் இயக்குனர்.
ஏன், எதற்கு என்று தெரியாமல் ஒரு இடத்துக்கு பயத்தோடு போகிறார்கள் என்பதை ரத்தம் கலந்த காமெரா லென்ஸ் பொருத்தி இது போன்ற ஒரு ஆங்கிளில் ஒரு கத்தி சொருகி உருவாக்கிய சந்தில் காமெரா லென்ஸ் வைத்து காட்சியை சொல்ல தெரிந்தால் அதுக்கு பேர்தான் உலக தர சினிமா. இப்படி படத்தில் நிறைய காட்சிகள் எல்லாம் இல்லை. படம் முழுக்கவே இப்படித்தான். பாலு மகேந்திரா சாகும் முன் காமெரா ஆங்கிளை வெற்றி மாறனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் போலும். இன் சிம்பள் வோர்ட்ஸ் …விசாரணை – ஒரு உலக தர சினிமா இன் மேகிங். நம்பி பார்க்கலாம்.
படத்தின் மூலம் யார்?
கோவையில் இன்றும் ஆட்டோ ஒட்டி வரும் 53 வயது சந்திரகுமார் தன் சிறு வயதில் ஆந்திராவில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை ஒட்டிய எழுதிய நாவல்தான் லாக்- அப். இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் விசாரணை. இந்த நாவல் தி பெஸ்ட் ஹுமன் rights அவார்டை கிருஷ்ண ஐயரிடம் வாங்கியது. பின்பு வெனீஸ் திரைப்பட விழாவில் பதக்கமும் வென்றது.
அதிகாரம் இல்லாத பிச்சை எடுக்கும் தொழிலில் கூட ஒரு ரத்தம் தோய்ந்த ஒரு இருண்ட உலகம் இருக்கும். அப்படி இருக்கும் போது அரசியலும், அதிகாரமும் கொண்ட போலிஸ் துறையில் மட்டும் இருட்டு உலகம் இருக்காதா என்ன?
கண்டிப்பாக இருக்கும்…இந்த இருட்டு உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கதைதான் இது.
கூலிக்கு வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் நாலு தமிழ் பசங்களை போலீஸ் கூட்டி சென்று லாக் அப்பில் அடைத்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஜோடிக்க அவர்களை அடித்து கொடுமை படுத்துகிறது.
அட்ட கத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் இருவரும் இந்த படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள். இவர்களை தூக்கி சாப்பிடும் நடிப்பில் சமுத்திரகனி ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டுகிறார். இந்த கதையில் ஒரு வரிக் காதலும் உண்டு.
படத்தின் கதையை எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை.
படத்தின் முக்கிய முதுகு எலும்பே காட்சி அமைப்பும், வசனங்களும்தான்.
படத்தை ஒரு டாகுமெண்டரிக்கும், கிரைம் த்ரில்லருக்கும் இடையே சொருகியது இயக்குனரின் திறமை.
வேகம், குரூரம், துரோகம், குற்றம், நேர்மை, நியாயம், நியாயம், அநியாயம், அதிகாரம், அரசியல், பணம், பாசம், பந்தம் என்று எல்லாவற்றையும் 118 நிமிடத்தில் விறு விருப்புடன் சீட் முனையில் அமர வைத்து காட்டிய ஒரு சில தமிழ் படங்களில் இதுவும் ஒரு படம்.
படத்தில் எனக்கு பிடித்தது: சமுத்திர கனியின் நடிப்பு, படத்தின் கேமெரா கவிதைகள்
பிடிக்காதது: படத்தை சினிமா தியேட்டரில் பார்க்காமல் போனது
நாம் படிக்கும் போது 1200 மார்க்குக்கு 1000 மேல் வாங்கினாலே அது பெரிய மேட்டர். இப்ப எல்லாம் 1150 எல்லாம் சாதராணம்.
ஆனந்த விகடன் விமர்சனக் குழு 1977-ல் வெளியான ’16 வயதினிலே’ படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது. அதன் பின் ”முள்ளும் மலரும்” மட்டுமே 61 மதிப்பெண்கள் பெற்றது. தற்போது 38 வருடங்களுக்குப் பிறகு ‘விசாரணை’ படம் 61 மதிப்பெண்கள் குவித்திருக்கிறது.
ஏன் 62.5 மார்க்கு மேல ஒரு மார்கே இல்லையா, இல்லை இன்னும் அவங்க நினைக்கும் ஒரு படம் எடுக்கவே இல்லையா?
காலத்துக்கு ஏறப் குத்தாட்ட ஆட்ட நடிகையின் அரைகுறை படத்தை அட்டை படமாக போட தெரிந்த விகடனுக்கு காலத்துக்கு ஏற்ப அவங்க போடும் மார்க் சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும் என்பது என் கருத்து. எல்லா படத்தையும் 16 வயதினிலேவுடன் கம்பேர் செய்வதை விட்டு விட்டு காலத்துக்கு ஏற்ப IMDB போல் 10 க்குள் அடக்கி 9,8,7 என்று கொடுக்கலாம்.
நான் விகடன் அளவு அப்பா டக்கர் சினிமா கஞ்சன் எல்லாம் இல்லை. வச்சு கோங்க 10.
www.sridar.com Rating: 10/10
அதிகாரம் இல்லாத பிச்சை எடுக்கும் தொழிலில் கூட ஒரு ரத்தம் தோய்ந்த ஒரு இருண்ட உலகம் இருக்கும். அப்படி இருக்கும் போது அரசியலும், அதிகாரமும் கொண்ட போலிஸ் துறையில் மட்டும் இருட்டு உலகம் இருக்காதா என்ன? —— Nethiaadi Guruji
நன்றி அக்கா
Oru thambi ya Thiruvarutchelvan Durairajan Kavanikava mudiyala Guruji. Pavam naan
ஏன் உங்களுக்கு இரண்டு தம்பி இருக்காங்கனு நினைச்சிகோங்க.
தம்பிக்கு பொண்ணு பார்க்கும் போது மட்டும் எனக்கும் நீங்க பார்க்க வேண்டாம். மத்தபடி சாப்பாடு கீப்பாடு செஞ்சா ஒரு கூப்பாடு போதும்.
ஆஜர்
Always Welcome Guruji
Just now saw the movie. Reviews made me to see, i am not an intelligent to rate or say about the movie making. But after seeing it, i feel empty. Dialogues in this movie were very powerful.
Nitharsanamaana vimarsananm
மிகவும் வலுமையான, பார்க்கத் தூண்டும் விமர்சனம்!
பார்த்துவிட்டு சொல்லுங்கள். எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.
வன்முறை கொஞ்சம் ஓவர் என்று நினைக்கும் இடத்தில் காட்சி டக் என்று மாறிவிடும்.
Very terrible movie I could not continue to watch it….who can watch this movie should have strong heart…
Salute to you Sir. Fantastic review of the movie.
வன்முறைப் படங்களையும், நம்பிக்கைத் துரோகக் காட்சிகள் உள்ள படங்களையும் காணும் மனத்துணிவு எனக்கில்லை. So, I am saying no to விசாரணை.????
தினேஷ் பனைமட்டையால் முதுகில் அடி வாங்கும் scene..
ஸ்ஸ்ஸ்… என் முதுகெலும்பு சில்லிட்டது.
நல்ல விமர்சனம்.
நன்றி
super விமர்சனம் sir…
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று தெரிகிறது. விமரிசனத்திற்கு நன்றி.
ஆர்ட் & ஒளிபதிவு அற்புதம் , கடைசி 20 நிமிடம் மனித உணர்ச்சிகளின் உச்சகட்டம் .வன்முறையை கூட அருவருப்பு இல்லாமல் காட்சி மாற்றம் அற்புதம்.நடிப்பு அற்புதம் (அப்சல் நடிப்பு யதார்த்தம்) .10/10 தகும்.வெற்றிமாறன் மற்றும் தனுஷுக்கு பாராட்டுகள்.
Great review dear…….
Srikanth Padmanaban
Natural லைட்டிங்கில் ஷூட் செய்வதில் புதிய தந்திரங்கள் எதுவும் இந்த படத்தில் எனக்கு படவில்லை. அப்சல்லை விட்டது தவறு, சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.
Srikanth