வட கொரியாவின், “தல தளபதி “…”வடமேற்கு பருவ காற்று”…”கிம் ஜாங் உன்” குண்டு மாமா, தான் ஹைட்ரஜன் குண்டு தயாரித்துவிட்டதாக உலகிற்கு அறிவித்து ‘கிலி கிலி’ கிளப்பி உள்ளார். குண்டு வெடித்து செய்த சோதனையை உலக வல்லுனர்கள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள். இது உண்மையான ஹைட்ரஜன் குண்டுதானா என்றும் சந்தேகக்கிறார்கள்.

எது எப்படியோ இது ஹைட்ரஜன் குண்டு வகை. அதுதான் பயம்.

சரி, அணு குண்டுக்கும், ஹைட்ரஜன் குண்டுக்கும் என்ன வித்தியாசம்? அணு அறிவியலில் ஆற்றலை இரண்டு வகையில் உருவாக்காலம்.
ஒன்று Fission reaction – அதாவது பிரித்து ஆற்றலை உருவாக்குவது . இன்னொன்று Fusion reaction – அணுக்களை சேர்த்து ஆற்றலை உருவாக்குவது.

அணு குண்டும், அணு உலையும் Fission reaction அடிப்படையில் இயங்கும். யுரேனியத்தை பிளந்து பேரியம், கிரிப்டான் மற்றும் நியூட்ரான் என்று பிரிந்து ஆற்றல் வெளிப்படும்.
இதுவே ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க அணுக்களை ஒன்றாக சேர்க்க வேண்டும். இது ஒரு அணு குண்டை போல 4000 மடங்கு சக்தி வாய்ந்தது. 1950 களிலேயே இதை ருசியா சோதித்து காட்டியது.

Building the H Bomb: A Personal History எனும் புத்தகத்தை கென்னெத் போர்ட் அமெரிக்காவில் 1950 களில் அமெரிக்க அரசின் கெடு பிடிகள் இடையே வெளியிட்டு இந்த ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கும் வழி முறைகளை லீக் செய்து ஒரு பிரளயமே உருவாக்கினார் என்பது அணு சம்பந்தமாக படித்த அனைவருக்கும் தெரியும். நியூட்ரான், புரோட்ரான், எலெக்ட்ரான் என்று மிக குழம்ப வேண்டாம்.

Fission, Fusion புரியவில்லை என்றால் இப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

முத்தம் கொடுக்கும் போது.. உதடும் உதடும் ஒட்டி அது Fusion reaction னை உருவாகும். இது ஹைட்ரஜன் குண்டு போல. Process- ல் அதிக சத்தம் இல்லை என்றாலும் பவர் அதிகம்.

முத்தம் கொடுத்து விட்டு உதடுகள் பிரியும் போது அது Fission reaction. இது அணு குண்டு போல சத்தம் அதிகம் என்றாலும் பவர் இல்லை.

ஹைட்ரஜன் குண்டாய் சத்தம் இன்றி  இணையும் உதடுகள், அணு குண்டாய் சத்தத்துடன் வெடித்து பிரிகின்றன.

இதனால்தான் இதை காதல் கெமிஸ்ட்ரி என்கிறார்கள்.

சின்ன வயசில் இப்படி சொல்லி கொடுத்து இருந்தா இந்நேரம் நான் அணு விஞ்ஞானியா மாறி இருப்பேன்.