படம் அருமை. கண்டிப்பா இது ‘ஆஹா அஹா’ வகை.

மிஸ் செய்யாமல் பார்க்கவும்.

படத்தின் வெற்றி, படத்தை லாஜிக்கோடு நகர்த்தி ..காதல், காமெடி, சரவெடினு சரியா அதில் மிக்ஸ் செய்து கடைசியில் நீதியின் தர்மத்தில் முடித்தது.

விஜய் சேதுபதி, சில தோல்விகளுக்கு பின் டைரக்டர் கூடவே இருந்து “இதுக்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா” போல ஒவ்வொரு காட்சியின் ஸ்கிரிப்ட்டையும் செதுக்கி எடுத்த படம் என்று நினைக்கிறேன்.

பவர்புள் ஸ்கிரிப்ட்னு சொல்லமுடியாது. இதை சரியா ஸ்க்ரீனில் டெலிவரி செய்து அசத்தி விட்டார்கள்.

படத்தின் முதுகு எலும்பு இரண்டு பேர். ஒன்று விஜய் சேதுபதி, இரண்டாவது நயன்தாரா.

விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான வெட்டி. அவரின் செவுட்டு காதலியாக வரும் நயன்தாரா, உண்மையிலேயே கலக்கி எடுத்து உள்ளார்.

அவரின் நண்பனாக வரும் ரேடியோ மிர்ச்சி பாலாஜியின் டைலாக் டெலிவெரி சிம்ப்ளி ஆசம்.

இவர் இனி தமிழ் படங்களில் ஒரு மிக பெரிய ரவுண்டு வர அதிகம் வாய்ப்பு.

படத்தின் ஒன் லைன் இதுதான். காதலியின் தந்தையை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் காதலிக்கு ஹீரோ உதவுகிறார்.

படத்தின் வில்லன் பார்த்திபன். அவர் அரை டிரௌசருடன் செய்யும் ரகளையும் சரி, அவரின் வில்லன் மன்சூர் அலிகானின் செய்யும் சேட்டையும் சரி வித்தியாசமானது.

ஆனந்த்ராஜ் போன்ற பழைய வில்லன்களை காமடி செய்ய வைத்து அசத்தியது… ஒரு நல்ல நடிகனால் எந்த ட்ரெண்டுக்கும் நடிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்து காட்டு.

பொதுவா நாமதான் facebook கில் ஓட்டுவோம்.

இந்த படத்தில் அஞ்சான், முகமுடி என்று ஆரம்பித்து இன்னும் வெளிவராத வேதாளம் டீசர் வரை ஓட்டியது தமிழ் திரை உலகில் ஒரு மைல் கல்.

படத்தில் ராதிகா, நான் கடவுள் ராஜேந்திரன் என்று எல்லோருமே வூடு கட்டி கண் கச்சிதமா நடித்து இருப்பது படத்தின் பெரும் பலம்.

ஒரு காட்சியில் அவர் தந்தை இறந்ததை தெரிந்து ரோட்டில் நயன்தாரா அழுது கொண்டு வருவார்.

அப்போது அவர் criss cross நடையுடன், முதுகை கூனாக்கி வெறித்து அழுவார்.

இந்த ஒரு காட்சி போதும் …டைரக்டர் Vignesh சிவனின் டீடைல் வொர்க்.

அனிருத் இசை கன கச்சிதம்.

ஒரு ரிவஞ் ஸ்டோரியை இவ்வளவு காமெடியாய் யோசித்து ஸ்கிரிப்ட் எழுதி அதில் நடிக்க ஒரு தனித் திறமை வேண்டும்.

கொஞ்சம் மிஸ் என்றாலும் இது போல்ட் ஆகும் பந்து இது.

இதில் விஜய் சேதுபதி சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும் பௌண்டரி அடித்து உள்ளார்.

மொத்தத்தில் இது ஒரு சூப்பர் வெல்கம் back movie.

எனக்கு பிடித்தது: விஜய் சேதுபதியின் டைலாக் டெலிவரி, நயன்தாராவின் செவிட்டு நடிப்பு
பிடிக்காதது: சொல்ல எதுவும் தோன்றவில்லை.

www.sridar.com Rating: 6.5 / 10.00