ஜஸ்டின் வெற்றிபெற்றது, கனேடிய மக்கள் லிபரலிசம் மீது வைத்துஉள்ள நம்பிக்கையை மீண்டும் காட்டி உள்ளது.
சரி லிபிரல் என்றால் என்ன? இதன் கொள்கைகள் என்ன?
ஸ்காட்லாந்தில் பிறந்த ஆடம் ஸ்மித்தான் லிபரலிச கொள்கையின் தந்தை.
ஸ்காட்லாந்தில் பிறந்த இந்த அறிவாளிதான் இந்த கொள்கையின் அடிப்படை பொருளாதார மற்றும் தத்துவங்களை வழி வகுத்தவர்.
இன்று கனடாவில் 69 ஆண்டு ஆட்சிக்கு பின் மீண்டும் அரசாலும் பொறுப்பு இந்த லிபரல் கொள்கைக்கு கிடைத்து உள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் அறிவொளி இயக்கம் என்று ஒன்று இருந்தது.
இதை Age of Enlightenment என்பார்கள்.
இதன் அடிப்படையே பகுத்தறிவுதான்.
இந்த கொள்கையின் படி ஒரு தனிமனிதனின் பறிக்கமுடியாத உரிமைகள் என்றும் நிலை நாட்டப்படும். சமூக ஒப்பந்தத்தின் (Social Contract) மூலம் மட்டுமே அரசு அமையும்.
எல்லா மக்களின உணர்வுகளை மதித்து, எல்லோர் உரிமையையும் காக்கும் கொள்கைதான் லிபரலிசம்.
இதை தமிழில் தாராண்மையியம் என்பார்கள்.
சரி, லிபரலிச கொள்கையில் முக்கியமான கொள்கைகள் என்ன ?
1. தனி மனித சுதந்திரம் – பேச, எழுத, வாழ எல்லாருக்கும் சம உரிமையை கொடுக்கும்
2. Freedom of speech, freedom of the press, freedom of religion, free markets, civil rights, democratic societies, secular governments, and international cooperation – இவையே இதன் தாரக கொள்கை.
3. எல்லா மத சமத்துவம், அன்புடன் கூடிய சகோதரத்தும்தான் எப்போதும் பெரிது.
4. கடவுளுக்கு ஈடான உரிமை ஆளுபவர்களுக்கு கிடையாது
5. ஆளும் அரசு எந்த மதத்தையும் சாராமல் சட்டம் இயற்றும்.
6. Protectionism – இருக்காது. குறிபிட்ட வகுப்பு மக்களை, சட்டத்தை தாண்டி சென்று காப்பாற்ற முயலாது. கூடாது.
7. திருச்சபைகளை மற்றும் பிற்போக்குத் அடிமை தனத்தை ஒழித்து மூடநம்பிக்கை கொண்ட சக்திகளையும் அகற்றுவதற்கான ஒரு பகுத்தறி பாதைதான் லிபரலிசம்.
கடைசியாக ஒன்று…
பணம் இருப்பவனிடம் இருந்து அதிக வரி வசூலித்து மிடில் கிளாஸ் மக்களிடம் குறைந்த வரி வசூலிப்பதுதான் இந்த கொள்கையின் அடிப்படை பொருளாதார தத்துவம்.
ஜஸ்டினுக்கு வாழ்த்துக்கள் .
கட்டற்ற லிபிரல் கொள்கையின் விடி வெள்ளியின் வெளிச்சம் வடக்கே மீண்டும் உதித்தது !!!
பாஸ்போர்ட் வருவதற்கு வெயிடிங்.
இப்போதைக்கு இது ஒரு intro தான்.
இனி கனேடிய, வரலாறு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் பற்றியும் எழுத போகிறேன்.
Very good information Sridar
//இன்று கனடாவில் 69 ஆண்டு ஆட்சிக்கு பின் // இது சரியா ? 2006 வரை பால் மார்ட்டின் (லிபரல்) தானே பிரதமர் ? இப்போது இருக்கும் ஃபெடரல் டாக்ஸ் 22%ல் இருந்து 20.5% ஆகிறது (45 ஆயிரம் முதல் 89,999 வரை வரும்படி). கஞ்சா சட்டப்படி வைத்திருக்கலாம், மத சுதந்திரங்கள் அதிகரிப்பு , போன்ற சில அம்சங்களும் உண்டு. பார்ப்போம் எப்படி போகிறதென்று..
I think liberal ruled canada for almost 69 years. Correct me if I am wrong ..
ஆம்.. இந்த இரு கட்சிகள் தானே மாறி மாறி ஆட்சி செய்துள்ளன ?
Conservative கட்சி பல பெயர்களில் இருந்து ஆட்சி செய்து இருப்பினும், இந்த இரண்டு கொள்கைகள் மட்டுமே ஆட்சி புரிந்தது என்பதே சரி.
மீண்டும் செக் செய்து பார்த்தேன். 69 வருடம் என்பது சரியே.
Freedom of religion- னை லிபரல் கொள்கையில் குறிப்பிட்டு உள்ளேன்.
கஞ்சா அடித்து சாவது, குடிப்பது போல அவன் அவன் விருப்பம் என்பது என் கருத்து.
B.C liberal , federal liberal சுருக்கமான ஒற்றுமை, வேற்றுமை??
ஒற்றுமை:
இரண்டுமே அழகு
வேற்றுமை:
ஆண் மற்றும் பெண்
Is the arrangement intentional?
அழகான ஆண் போலுள்ள பெண். அழகான பெண் போலுள்ள ஆண்????
தெரியல ஸார் .. நீங்க கேட்டவுடன் இதுதான் பட்டுனு தோனுச்சு.. நீங்க ஏதாவது நினைத்தீர்களா??
விரைவில் தொடருங்கள் ஶ்ரீதர், உங்களுடைய பார்வையில் கனேடிய சமூகம் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.
Good explanation. If priciples are put in practice, then it is ok.