நம் மதத்தில் ஓரே ஒரு கிரியேடிவ் டைரக்டர் இவர்தான். அவர் பெயர்தான் பிரம்மன்.
பிரம்மன் production மேனேஜர் மட்டும் இல்லை.

Creative Design, Technical design, Design Architecture, FDD ( Functional Design Documentation), VISIO ( தலை எழுத்து வரைபடம்) என்று பல வேலைகளை பார்த்துக் கொள்வார்.

முதலில் இவர் தன்னில் இருந்தே நாலு பசங்களை தோற்றுவித்தார்.
எல்லாருமே Bachelors. எல்லாரும் Post Production Manager – அல்டிமேட் ஸ்டார் – சிவனை வேண்டி சன்னியாசியா போயிட்டாங்க.
சரி எப்படியோ போங்கடான்னு அவரும் விட்டுட்டார்.

இவர் வீட்டில் ஒரு pet அனிமல் வளர்த்தார். அதுக்கு பேர் அன்னப்பறவை.
எங்க புதுசா உயிரினங்களின் கிரியேடிவ் டிசைன் மீட்டிங் நடந்தாலும் தலிவர் இந்த அன்ன பறவையில்தான் போயிட்டு வருவார்.

அவரு பொண்டாட்டி பெயர் சரஸ்வதி.
பிரம்மன் உலகை படைக்க ஒரு பெண் வேண்டும் என்பதால் அவரே தன்னில் இருந்து உருவாக்கியவள்தான் சரஸ்வாதி.
ஆனா பிரம்மன், அவுங்களை ‘சரஸ் சரஸ்’னு தான் செல்லமா கூப்பிடுவார்.
அவர் பொண்டட்டியாச்சே ..எப்படி கூப்பிட்டா நமக்கு என்ன?

இந்தம்மாதான், பிரமன் படைக்கும் உயிர்களுக்கு creative மற்றும் innovative touch கொடுக்கும் superior knowledge பவர்.
இவங்க இல்லைனா, நாம hard disk, ஸ்பீக்கர் இல்லாத கம்ப்யூட்டர் மாதிரி ஆயிடுவோம். இவங்கதான் கலைமகள். டெக்னாலஜி ஹெட் of பிரம்ம லோகம்.

அம்மாவுக்கு நாலு கை. எப்ப free டைம் இருந்தாலும் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏரிக்கு பிரம்மன் தனது அன்னப்பறவை வாகனத்தில் இவரை டபுள்ஸ் ஏற்றி அழைத்து செல்வார்.
அவுங்க ஒரு வெள்ளை தாமரை மேல உட்காந்து, ரெண்டு சாங் வீணையில் சவுண்டா வாசிப்பாங்க.
அந்த ராகம் பேரு சரஸ்வதி ராகம். இந்த ராகம், இவங்க நேமில்தான் பேடன்ட் செய்ய பட்டு இருக்கு.

ரகுமான் போட்ட ” ,மலர்களே, மலர்களே” தமிழ் பாட்டின் ராகத்தோட ஓனர் இந்தம்மாதான்.
சரஸ்வதி இப்படிதான் இருப்பாங்கனு நம்ம மலையாள மகாராஜா ரவி வர்மா வரையற வரைக்கும் இவங்க எப்படி இருப்பாங்கனு யாரும் உருவகபடுத்த முடியல.

இவங்க லேசு இல்லை. இந்தியாவில் டாப் to பாட்டாம் இவங்களுக்கு கோயில்கள் இருக்கு.
சொல்லப் போனா காஷ்மீரில் தக்த்-இ-சுலைமான் என்ற இடத்தில சரஸ்வதியம்மாவுக்கு செமையான கோயில் ஒன்னு இருக்கு.
தென் தமிழ்நாட்டில் குலசேகரபுரம் என்ற இடத்தில ஸ்பெஷல் கோவிலும், திபெத், நேபாளம், இந்தோனேசியா ஆகிய இடத்திலும் அம்மா மிக பிரசித்தம்.
ஏன் ஜப்பானிலும் இந்தம்மாவை வழிபடுகிறவர்கள் இன்றும் உண்டு.
டோக்கியோவில் பென்சய்-டென் என்றால் சரஸ்வதியை குறிக்கும்.

இவங்க ரெண்டு பேரும் வாழும் ஊர் பெயர்தான் பிரம்ம லோகம்.
பிரம்மன் பொண்டாட்டிகிட்ட கேட்டா அதை சத்யலோகம் என்பார். ரெண்டுக்குமே ஒரே போஸ்டல் கோட்தான்.

கும்பமேசி இப்போது குருவை நிறுத்தினான்… குருவே …..

“எல்லாம் சரி ….பிரம்மன்தான் உலக ஜீவா ராசிகளை எல்லாம் படைத்தவர் என்று இந்து மதம் சொல்கின்றதே ??
இவர் எப்படி உலக ஜீவராசிகள் அனைத்தையும் தினம் தினம் படைத்துக்கொண்டு இருப்பார். இதை எல்லாம் எப்படி நான் நம்புவேன். சும்மா ரீல் விடாதீங்க குருஜி” என்றான்.

கடுப்பான குரு…. சொன்னார். இது பொய் எல்லாம் இல்லை. சொல்கிறேன்…
நம் பூமி, அண்டந்தின் ஒரு துகள் மட்டுமே.

நம் அண்டத்தின் வயது சுமார் 13 பில்லியன் ஆண்டுகள்.
இந்து மதப்படி பிரும்மன் 4.32 billion ஆண்டுகள் வயது உடையவர்.

இந்து தொன்மவியலில் படி நாம் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். இதைதான் கலியுகம் என்பார்கள்.
இந்த கலியுகம் மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும். இது முடிந்தவுடன் மீண்டும் முதல் யுகமான கிருதயுகம் ஆரம்பிக்கும்.

இதை சொன்னவர் ஆரிய பட்டர். அவர் கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமைதான் மனித குலத்தின் கலியுகம் ஆரம்பித்த நாள் என்கிறார்.
எப்படியும் ஒரு நாள் இந்த உலகம் அழிந்து மீண்டும் ஒரு புதிய உலகம் தோன்றும்.

அப்போதும் அதை பிரம்மன்தான் தோற்றுவிப்பார்.

கும்பமேசி கேட்டான் ” குருவே ..எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய உயிரினங்களை அழித்து மீண்டும் இன்னொரு யுகத்தை பிரம்மன் தோற்றுவிக்க வேண்டும்?”
எப்படி பிரம்மனால் இவ்வளவு பலவிதமான உயிரினங்களை இந்த பூவலகில் தோற்றுவிக்க முடிந்தது ? ”

குருஜி சொன்னார் ” உண்மைதான் …பிரம்மனுக்கும் இந்த கஷ்டம் முதலில் இருந்தது.”
முதலில் பிரம்ம லோகத்தில் பிரம்மன் மட்டும் தான் இருந்தார். பின்னால்தான் சரஸ் வந்தார்.

பிரம்மன்தான் Production மனேஜர். இருந்தாலும், இவரே எல்லா வேலைகளையும் பார்க்க மாட்டார்.
அதனால் வேலைக்கு Interview வைத்து ஆள் செலக்ட் செய்தார்.

அப்படி சேர்ந்தவர்கள்தான் நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி போன்றவர்கள்.
ஆளாளுக்கு ஒரு வேலை கொடுத்து, டைட் ஷேடூளில் production செய்ய திட்டம் போட்டார்.

ஆனால் எப்படி இவ்வளவு பெரிய உலகில் பலவித உயிர்களை தினம் தினம் உற்பத்தி செய்வது என்று பிரம்மனுக்கு மண்டை காய்ந்தது.
உடனே பிரும்ம லோகத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் outlook கொண்டு ஒரு recurring மீட்டிங் schedule ஒன்றை போட்டார்.

Required List ல் நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை இன்வைட் செய்தார்.
Optional லிஸ்டில்: பிரம்ம முனிகள், Sustainment head விஷ்ணு, போஸ்ட் production head சிவா எல்லோரையும் போட்டார்.
Technology – Creative Head சரஸ்வதிதான் Lead.

அது தான் பிரம்ம லோகத்தின் முதல் Production Meeting.
எல்லோரும் கையை பிசைந்து கொண்டு டென்ஷனோடு மீட்டிங் ஹாலுக்குள் சென்றார்கள்.

பிரம்மன் தன் நான்கு முகங்களோடு கடு கடு என்று எல்லோரையும் வரவேற்றார்.
Welcome all to ” The First Production Meeting of Bramma Logam” என்று வரவேற்றார்.

இந்து மதத்தில் எப்படி உயிரினகள் தோன்றின ?

தொடரும்

ஸ்ரீதர் ஏழுமலை