ரொம்ப எதிர்பார்த்து படம் பார்க்க போனால் செவ்வாய் கிரகம் நம்ம அபுதாபி, துபாய் குறுக்கு சந்தில் உள்ள விவேகானதர் தெரு பாலைவனம் போல்தான் உள்ளது. Disappointed.

மார்ஸ் நல்லா இருந்தா, கனடாவில் இருந்து immigration அப்பளை செய்யலாம் என்று நினைத்த என் பையன் கனவில் சிவப்பு மண் விழுந்துவிட்டது.

படத்தின் கதை இதுதான்.

கும்பலாக மார்ஸ் சென்ற ஒரு நாசா குரூப், அங்கு அடிக்கும் திடீர் புயலால் அவர்களில் ஒருவரை ஏதோ No. 335 பஸ் மிஸ் செய்வது போல் மிஸ் செய்துவிட்டு எப்படியும் அவர் இறந்துவிடுவார் என்ற யூகதில் தங்கள் எடுத்து வந்த செவ்வாய் கிரக சைக்கிள் ஏறி வீடு திரும்பி விடுகிறார்கள்.

அந்த குரூப் பார்த்தால் ஏதோ ஒரு அமெரிக்க காலேஜ் படிக்கும் பசங்க மாதிரி ஒரு சீரியஸ்னஸ் தெரியாத பசங்களா இருக்காகாங்க.

ஒருத்தன்..அவன் பாட்டுக்கு எடுறா வண்டியை என்கிறான். இன்னொருத்தி சாவியை போட்டு கிளப்பிட்டு திரும்பி வராங்க.

விட்டுவிட்ட வந்த astronaut அங்க தத்தி, தத்தி உயிர் தப்பி இவங்க கட்டின பாலிதீன் குடிசையில் தன் வாழ்கையை ஓட்டுகிறார்.

சரி, படம் இனிமேதான் செம ரகளையா போக போகுதுன்னு பார்த்தா படத்தை உலக உருண்டையில் ஆரம்பித்து உருளை கிழங்கில் முடித்து விடுகிறார்கள்.

தப்பித்த astronaut ஒரு தாவரவியல் படித்த மேதை என்பதால், அவரால் அங்கு உருளை கிழங்கை விளைவித்து பொரியல் செய்து உயிர் வாழ முடிகிறது.

இதற்கு நடுவில் கீழே நாசாவில், இவர் இறந்து விட்டார் என்று நினைத்து அவருக்கு சமாதியில் ஒரு நாசா கும்பல் பால் ஊத்தி சோக கீதம் பாட, அப்ப பார்த்து அவர் அனுப்பும் சிக்னல் பூமிக்கு வருகிறது.

ஓ, அவர் சாகவில்லை என்று தெரிந்தவுடன் அவரை எப்படி பூமிக்கு கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கதை.

நாசா தலைவராக ஒருவர் வருகிறார். அவர் Cactus club ல் கோட்டு போட்டு நமக்கு சீட் ஒதுக்குவாரே ..அது போல் இருக்கிறார். சும்மா காபி குடிச்சிட்டே பிளான் போடுகிறார்.

அவருக்கு உதவும் mission டைரெக்டர், ஒரு half ஹிந்துவாம். எனக்கு என்னமோ அது கதைக்கான உள் குத்து என்று தோணுகிறது.

அவர் அந்த ரெஸ்டாரண்டில் ஆர்டர் எடுப்பவர் போல ஓவராக பேசுகிறார். சில இடங்களில் கண் கூட கலங்கும்.

முக்கியமாக ஒரு குண்டு scientist வருவார். அவரை எதோ சாங்காய் மார்க்கெட்டில் பிடித்து இருப்பார்கள் போல ..

சூப் சூடு செய்து கொண்டு இருந்தவரை இழுத்துவந்து ராக்கெட் விட சொல்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இவங்களை நம்பி எப்படி ஒரு குரூப் செய்வாய் கிரகம் போனது என்று சந்தகேம் கூட வரலாம்.

இதற்கு நடுவில் …எப்ப பார்த்தாலும் செய்வாய் கிரகத்தில் ஓரே கிரகம்… எப்பவும் ஒரே காத்து..புயல்ன்னு போரடிக்குது.

செய்வாய் கிரகத்தில் ஒரே உருப்படி அந்த உருளை கிழங்குதான்..

இப்படி ஒரு சீரியஸ் படத்தில் அங்கங்கே விஞ்ஞானிகள் காமெடி வசனம் பேசி கொன்னு எடுப்பார்கள்.

என்னடா படத்தில் ஒன்னுமே இல்லையா என்று நினைக்க வேண்டாம்.

ஏகப்பட்ட போர்முலா, calculations தியரி என்று ஏதாவது ஒரு போர்டில் எழுதிக்கொண்டே இருப்பார்கள். இல்லை பேசுவார்கள்.

நமக்கே சில சமயம், எப்படியாவது ஹீரோ செத்துட்டா கூட பரவாயில்லைன்னு தோணும். கொஞ்சம் இழுவை.

முதன் முதலா, செவ்வாய் கிரகத்தை காமிக்கும் போது இன்னும் கூட ரசனையாக அந்த கிரகம் பற்றி காண்பித்து இருக்கலாம்.

விட்டுடு வந்த scientist குரூப் கிட்ட அவர் இன்னும் உயிரோட தான் இருக்காங்க என்று ரெண்டு மாசம் கழித்துதான் சொல்வாங்க.

அப்ப அவங்க எல்லாம் ஏதோ, பாட்டி சுட்ட வடை இன்னும் செய்வாய் கிரகத்தில் சூடாதான் இருக்கு.

சாப்பிடாம மறந்து வந்துடீங்க ..போய் எடுத்துட்டு வாங்க என்று சொல்லுவது போல இருக்கும் அவங்க facial ரேஅச்டின் காட்டுவாங்க.

செவ்வாய் கிரகத்தை பூலோக வாசிகளுக்கு காட்டி அசர வைக்க இந்த படம் தவறி விட்டது.

சும்மா போய், எம் புருஷனும் வேலைக்கு போனார்ன்னு ஒரு முறை ரசித்து பார்க்கலாம்.

மற்றபடி இது ஒரு சுமார் சயின்ஸ் பிக்ஷன் படம்தான்.

Martian – சூடு ஆறிப்போன உருளைகிழங்கு போண்டா .

www.sridar.com : 5 / 10.00