கடவுள் இல்லை என்பவன் தான் இந்த உலகத்திலேயே அதிகம் கடவுளை பற்றி யோசித்தவன்.
இப்படி, கடவுள் இல்லை என்று நம்புவதே ஒரு நம்பிக்கைத்தான்.
அந்த நம்பிக்கைதான் கடவுள் என்று தெரியாமல் இருப்பதற்கு பேர்தான், கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு.

பகுத்தறிவாதியும், பக்திமானும் நல்ல நண்பர்கள். எருமை மாடும் பசுவும் போல, குட் friends.
ஆனால் இந்த உண்மை தெரியாமல் தினம் தினம் ஒருவருக்கொருவர் அடித்து சாவாது இன்று நேற்று அல்ல.
சங்க காலம் முதலே இது நம் வரலாறில் உண்டு.

படித்த பகுத்தறிவாதிக்கு டாக்டர்தான் கடவுள்.
டாக்டர்தான் கடவுள் என்று நினைக்கும் பகுத்தறிவாதிக்கு, கடவுள் அதே வார்டில் டாக்டருக்காக நைட் ஷிபிட் பார்ப்பது தெரியாது.
“இனி இவர் பிழைப்பது என் கையில் இல்லை” என்று தன் வேலையை கடவுளிடம் கொடுத்துவிட்டு அடுத்த வார்டுக்கு டாக்டர் நடையை கட்டும் போது, பகுத்தறிவாதி அவன் கடவுளான டாக்டரையே திட்டுவான்.
காரணம் அவனுக்கு திட்ட மட்டும்தான் தெரியும். பக்திமானுக்கு கும்பிடமட்டும் தான் தெரியும்.
இரண்டுக்கும் இடைப்பட்டவன் கதி அதோகதிதான்.

பிறப்பிலும் சரி, இறப்பிலும் சரி கடவுள், எப்போதும் பல uncertainty களை ஒளித்து வைத்துதான் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுவார்.
ஒளித்து வைத்ததை, அவர் படைத்த மூளையை கொண்டே தினம், தினம் அவனை வைத்தே தேட சொல்வார்.

உடல் அணுவில் X, Y குரோமோசோம்கள் உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டேன் என்று குதிப்பான் பகுத்தறிவுவாதி.
ஆனால் அதை ஒளித்து வைத்ததே கடவுள்தான் என்று அவனுக்கு தெரியாது.
அறிவியலில் தேடி கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு அதிசியமும் கடவுள் ஒளித்து வைத்ததுதான் என்று நம்புவது பேர்தான் பக்தி.

அதனால் தான் science எக்ஸாமில் நல்ல மார்க் எடுக்க விநாயகருக்கு தேங்காய் உடைகின்றோம்.
கடவுளை கும்பிடாமல் பாசானவன், தன் அறிவால் தான் வெற்றி அடைந்தேன் என்பான்.
கடவுளை கும்பிட்டும் fail ஆனவன் அடுத்த முறை ஒரு தேங்காய்க்கு பதில் நூறு தேங்காய் உடைப்பான்.
மனமுறுகி, அதிகம் வேண்டினால் எதுவும் கடவுள் கிருபையால் நடக்கும் என்று நம்புவதே ஒரு தேங்காயை நூறு தேங்காயாக மாற வைத்தது.

பகுத்தறிவாதி நன்றாக படிப்பது அவன் கடமை என்பான்.
ஈசியான கேள்வி தாள் கொடுக்க வேண்டியது கடவுளின் கடமை என்பான் பக்திமான்.

கடவுள் இருக்கிறார், அவரை நம்புவதில் தப்பில்லை என்பேன் நான்.
நாம் என்ன ஐன்ஸ்டீனை விட பெரிய அறிவாளி புலியா என்ன??

Albert Einstein னை விட அறிவு அதிகம் சிலரை மட்டுமே கடவுள் இவ்வுலகில் படைத்தார் .
Albert Einstein கேட்ட கேள்வி இதுதான். “இந்த உலகை கடவுள் எப்படி படைத்தார் ? “என்று எனக்கு தெரியவேண்டும் என்றார்.

ஏன் இது உங்களுக்கு தெரியவேண்டும் என்றார்கள் சுற்றி நின்றவர்கள்.
“இல்லை, அது தெரிந்தால் இதை விட வேறு முறையில் எப்படியாவது இந்த உலகை படைத்து இருக்க முடியுமா என்று நான் ஆராய விருப்பப்படுகிறேன்” என்றார்.

ஐன்ஸ்டீன் கடவுள் இருக்கிறார் என்று நம்பினார். இதை நம்ப வைத்தது என் மதம் என்றார்.
Behind all the discernible concatenations, there remains something subtle, intangible and inexplicable. Veneration for this force is my religion. To that extent, I am in point of fact, religious.

மதம் என்பதின் அடிப்படையே இது போன்ற நம்பிக்கைத்தான். அதனால்தான் அதை ரிலிஜியன் beliefs என்கிறோம்.
எனக்கும் அப்படி ரிலிஜியன் beliefs இருக்கிறது. அந்த ரிலிஜியன் beliefs எனக்கு கொடுத்தது இந்து மதம்.

நான் இந்து, எனவே கடவுளை நம்பாதவர்கள் இந்த தொடரை படிக்க வேண்டாம்.
கடவுள் இருக்கிறார் என்று நம்பி எழுதுவது தான் இந்த தொடர்.

இந்து மதத்தை சரியாக புரிந்து கொண்டவன் இன்னொருவனும் இதைதான் நம்பவேண்டும் என்று கட்டாயப் படுத்தவே கூடாது.
காரணம், இந்து மதத்தில் இது தான் சட்டம், இதை கடைபிடிப்பவனே தூய இந்து என்று எங்கும் எதிலும் எப்போதும் சொல்லப்படவில்லை.

இந்த நம்பிக்கை flexibility யை, இந்து மதம் அனுமதித்தது.
காரணம், இந்து மதம் யாருக்கும் கட்டுப்படாது. இதை யாரும் கட்டுபடுத்தவும் முடியாது.

இதன் பலமும் இதுவே …பலவீனமும் இதுவே.
அந்த பலவீனத்தை பயன்படுத்தி இவன் இதை செய்தால் தான் தூய இந்து. இதை இவன் செய்வதால் உவ்வா இந்து என்பதை சொல்பவன் ஒரு இந்து அடிப்படை வாதி.

ஏதாவது ஒரு சாமியார் எதையாவது படித்துவிட்டு தனுக்கு ஏற்ற ஒரு ஹிந்து மத தத்துவமாக சொன்னால், அவர் பின்னால் ஒரு கூட்டம் செல்வது இன்று நேற்று அல்ல…
அது வேத காலத்தில் இருந்தே இருந்தது. அதைப்பற்றி பின் வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.

மாடு புனிதம் என்று கருதுவது ஒருவனின் நம்பிக்கை.

அதுவே அந்த மாட்டை இன்னொருவன் கொல்வதை தடை செய்ய வேண்டும் என்பவன் ஒரு முழுமையான – Fundamental மத மெண்டல்.

சிக்கன் மட்டன் இறைச்சியை சாப்பிடுபவன் தூய இந்து இல்லை என்று சொல்பவன் அவனில் பாதி – அதாவது அரை மெண்டல்.

இவர்களை ஆங்கிலத்தில் ரிலிஜியஸ் நட்ஸ் (Religious Nuts) என்பார்கள். மறை கழண்ட மதவாதிகள்.

இப்படி எல்லா மதத்திலும் உண்டு.

இந்து மதம் ஒரு உண்மையான powerful மாயை என்பதால் இவர்கள் எல்லாம் அதில் ஒளிந்து கொண்டு இப்படி பேசும் ஆட்கள்.

இவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். எப்படி??

“இந்துதுதுதுதுதுதுதுதுது…. மதம்” என்று இழுத்து சொன்னால் இஸ்லாமமில் இது, கிருஸ்துவதத்தில் அது என்று ஓடி வந்து ‘ஜங்…ஜிக்” – ” ஜக் – ஜிங் என்று” குதிப்பார்கள்.

இவர்கள் ஏன் ரிளிகிஜியஸ் நட்ஸ் ஆனார்கள் …இவர்களை இப்படி பேச வைத்தது யார்?
மாடு புனிதாமா ? இல்லை மாடை புனிதமாக்க இவர்களாகவே ஏதாவது காரணம் சொல்கிறார்களா ?
இதில் எவ்வளவு உண்மை? எவ்வளவு தவறான புரிதல்?

உணமையாகவே மாடு மனிதனுக்காகவா பால் கொடுக்கவா பிரம்மனால் படைக்கப்பட்டது?
ஏன் கன்று குட்டி குடிடத்தவுடன், மாடு அதை தள்ளிவிட்டு மனிதனுக்கு பால் கொடுக்கின்றது?

அறிவியல் பேசுபவனாக இருந்தால் நான் ஆப்ரிக்காவில் இருந்து இதை தொடங்க வேண்டும்.
இது இந்து மதம் என்பதால் பிரம்மனில் இருந்து ஆரம்பிக்கலாம்.

கோழிதான் பிரம்மம். முட்டைதான் மாயம்.
இந்து மதத்தில் கேட்கப்பட்ட முதல் கேள்வி இது தான்..

மாயமெனும் முட்டையில் இருந்து பிரம்மம் என்ற கோழி வந்ததா இல்லை பிரம்மம் என்ற கோழியில் இருந்து முட்டை என்ற மாயம் வந்தாதா ?
இவர்கள் இப்படி சண்டை போடும் போது ” டங், டங்” என்று மாடு ஒன்று வந்து முட்டியது.

அது ஒரு இந்து மாடு.

தொடரும்
ஸ்ரீதர் ஏழுமலை