நமக்கு ஒருத்தன் துரோகம் செய்தால், அவனை பொது இடத்தில் பார்த்து சிரித்து ஒதுங்கி போவதே நாம் அவனை வென்றதுக்கு சமம்.

இதுதான் படத்தின் ஒன் லைன். இது ஒரு அட்டகாசமான action thriller படம்.

கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம்.

பெரிய கதாநாயகர்கள் எல்லாம் படத்தில் கிடையாது.

கதை, வசனம், இசை, பாடல்கள் மற்றும் காட்சி அமைப்பு என்று அறிமுக இயக்குனர் அனுசரண் கலக்கி எடுத்து உள்ளார்.

கதாநாயகன் ஒரு வெட்டி. அவரை சுற்றி நடக்கும் யதார்த்த நிகழ்வுகளில் நட்பு, காதல், கள்ளக்காதல், முத்தம், சத்தம், துரோகம், லஞ்சம், கொலை, அடியாள், போலீஸ், பொண்டாட்டி, குழந்தை என்று ரவுண்டு கட்டி அடித்து இருக்கிறார்கள்.

படத்தின் இசை கே என்கிற கிருஷ்ண குமார்…ஹிந்தி பிசா படத்துக்கு இசை அமைத்தவர். இரண்டு பாடல்களில் கானா பாலா பாடிய பாட்டை பல இடங்களில் bgm ஆக போட்டு கதையோடு இழைத்து இருக்கிறார் இயக்குனர்.

கதை என்ன வென்று முழுவதும் சொல்ல மாட்டேன். போலீஸ் informer ராக வரும் சார்லிக்கு இவ்வளவு நடிப்பு வரும் என்று இந்த படம் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

கதிர்தான் கதாநாயகன். மலையாள ரேஷ்மி மேனன்தான் இவர் மனைவி. இருவருமே கண்ணாலேயே படத்தில் பேசுகிறார்கள்.

அந்த போலீஸ்காரர்கள் இருவருமே நிஜம் என்று தோன்ற வைக்கும் கதா பாத்திரங்கள். படத்தில் ஏகப்பட்ட நச் காட்சிகள். செதுக்கி எடுத்து உள்ளார் இயக்குனர்.

என்ன சொல்வது …இந்த வருடத்தின் இன்னொரு யதார்த்த கலக்கல்.

எல்லோருக்கும் புடிக்குமா என்று தெரியாது.

எனக்கு மிகவும் பிடித்தது:

சீட்டு கட்டு shuffle செய்யும் போது பின்னணி இசையை match செய்த காட்சி.
நாயகி ரேஷ்மி மேனன், கதிரின் நடிப்பு.
மனசாட்சியுடன் கதாநாயகன் இரவின் வெளிச்சத்தில் பேசுவது

பிடிக்காதது: துரோகம் தொடர்வது.

www.sridar.com Rating: 7.0 /10.0