பிரம்மத்தின் ஒரு பகுதிதான் மாயை.

சங்கர மடமாக இருந்தாலும் சரி, சைவம் பேசும் சித்தாந்த மடமாக இருந்தாலும் சரி மாயா எனும் சம்ஸ்கிருத சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் நம் இந்து மதத்தில் உண்டு.
இன்றுவரை இந்துமதம் தழைத்து ஓங்க காரணமே இதன் மாயை எனும் சக்திதான் காரணம்.

ஆன்மா தோன்றியதற்கு மாயையே காரணம் என்று சொன்ன ‘மாயாவதி சங்கரர்’ ஆகட்டும், விசிஷ்டாத் வைதத்தின் முன்னோடியாக விளங்கிய ராமானுஜம் ஆகட்டும் இல்லை துவைதம் பேசிய மத்வர் ஆகட்டும் ….இந்த இந்து சமய மும்மூர்த்திகளே தங்கள் கருத்தக்களை அந்த காலத்திலேயே வாதாடி வென்றுதான் மக்களிடம் தங்கள் கருத்தக்களை எடுத்து சொல்லி சமண, வைணவ மடங்களை நிறுவி வளர்த்தார்கள்.

அதானால் மதம் பற்றி பொதுவில் எழுதுவதோ, இல்லை விவாதிப்பதோ தப்பில்லை என்பது என் எண்ணம்.
என் பேச்சு, எழுத்து, நான் உண்ணும் உணவு என்று அனைத்திற்கும் சுதந்திரத்தை நான் நேற்று கை தூக்கி சத்தியம் செய்த கெளன் போட்ட இங்கிலாந்து ராணி எனக்கு இங்கு கொடுத்து உள்ளார்.

அதனால்தான் எழுதுகிறேன். விருப்பம் இருந்தால் மட்டும் மேல படிக்கவும்.

விளக்கங்களில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். சந்தேகம் இருந்தால் கேட்கவும். பதில் தெரிந்தால் பதில் சொல்கிறேன்.
தவறு இருப்பின் அதை திருத்தி எழுதி பொதுவில் சொல்லி விடுவேன்.

அதை விட்டுட்டு, நீங்கள் வீட்டில் சோபாவில் படுத்து கொண்டு அடிக்கும் கமெண்ட் பத்தி என்றும் கவலைப்பட மாட்டேன்.

இதை எழுத காரணம், இன்று பொது வெளியில் தங்களை சுத்த பத்த இந்து என்று காட்டிக் கொள்பவர்களுக்கு இந்து மதம் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே என் எண்ணம்.

சாமிக்கு அருகில் சென்று அடிக்கடி மணி ஆட்டுவதால் மட்டுமே ஒருவன் சூப்பர் டூப்பர் இந்து கிடையாது.

இல்லை நான் வெஜ் சாப்பிடாமல் மட்டும் இருந்தால் அதுக்கு பேர் சுத்த பத்தம் கிடையாது.

சுத்தம் என்பது நாம் தினம் பல் தேய்பதில் இருந்து நம்ம வீட்டு garage வரை நீண்டு இருப்பது.

ஏதோ சுத்தம் பத்தம் எல்லாம் இந்த சிக்கன் மட்டனோட முடிஞ்சு போவறதில்லை.

இதை எல்லாம் பொதுவில் எழுதாமல், பேசாமல் போவதால்தான் இன்றும் இந்து அடிப்படைவாதிகள் மாட்டு இறைச்சியை புனிதம் என்ற பெயரில் தடை செய்வதும், மேலை நாடுகள் உட்பட …நாலு பேர் கூடி ஆடும் பொது இடங்களில் பிளிஸ்…தப்பா நினைசிக்காதீங்க … “சிக்கன் மட்டன் உவ்வா” … தயிர் சாதம் மட்டும் போதும் என்பதும் இன்றும் தொடர்கிறது.

ஏன்னு கேள்வி கேட்டால் நேரிடையா பதில் சொல்வதில்லை. கேட்டா புனிதம், இந்து மதம், அஜிலி குஜிலி…நாங்க பத்தினினு மேலோட்டமா பேசுவது.

சரி எது புனிதம், எது இந்துமதம்னு சந்தேகம் கேட்டால் உடனே போய் திராவிடம், வெங்காயம்னு பேசுறது , இல்லைன்னா பெரியாரிசம், பெருங்காயம்னு பேசுறது, இல்லை சரியா குரானை படிக்காத அந்த தீவிரவாதி முட்டாபய எவனையாவது கொன்னது, இல்லை பைபிளை சரியா படிக்காத மடப்பய எவனையாவது மில்க் பிஸ்கட் கொடுத்து கன்வெர்ட் செய்தது என்று ஒரு பிட் போட்டுட்டு போறது பத்தி எனக்கு கவலை இல்லை.

காரணம் நீங்களும் அப்படி இந்து மதம் பற்றி சரியா படிக்காத அரைகுறையான இந்துஅடிப்படை வாதிதான். இது எல்லாம் “மிஸ் மிஸ் …இவன் என்னை கிள்ளிட்டான் மிஸ்” போன்ற complaints.

ஒரு அடிப்படை வாதிக்குதான் இன்னொரு அடிப்படைவாதம் சட்டுன்னு புடிபடும். என்னைக்கி உன்னை பத்தி பேசினா நீ உன் பதிலை சொல்லாம அடுத்தவனை எடுத்துக்காட்டா எடுத்துட்டு வரியோ அன்னிக்கே நீ வாதத்தில் காலி.

ஒன்னு புரியணும், இன்று மோடி மாடை தடை செய்ததாலோ, இல்லை நாலு பேரின் வீட்டு ஜாடியை மூடி வைத்ததாலோ மட்டுமே இந்து மதம் காப்பாற்ற படவில்லை.

இது ஆயிரம் ஆயிரம் வருஷமா எல்லோரையும் அனுமதித்து வளர்ந்த மதம் இது.

ஆனால் இன்று இந்து மதம் என்றால் என்ன வென்று முழுதும் தெரியாலமலே, அதை பற்றி முழுவதும் படிக்காமலே அரைகுறையாக … பட்டையை நெத்தியில் போட்டவன், கொட்டையை கழுத்தில் போட்டவன், பெல்ட்டை இடுப்பில் கட்டினவன், கயிறை குறுக்கில் போட்டவன், பேண்ட்டு ஜிப்பு போட்டவன், பாவாடை நாடா கட்டினவன், தாடி வச்சவன், மீசையை மழிச்சவன்னு ஆளாளுக்கு இந்து மதத்தில் இதை வெட்டினால் பாவம், அதை அடித்து குழம்பு வைத்தால் பாவம், காண்டாமிருகத்தை கொன்னால்தான் பாவம், கொடுக்கா புளியை தின்னாதானே பாவம் என்று இந்து மதத்தின் அடிப்படைகளை கூட தெரியாமல் பேசுவது வியப்பு அளிக்கிறது.

இது மாட்டு இறைச்சி பற்றிய மேட்டர் இல்லை. இதன் அடித்தளம் வேற இடத்தில இருக்கு.

நான் என் கருதுக்களை பொதுவில்தான் எழுத போகிறேன். இது தப்புன்னு சொல்றவங்க, ஏன் தப்புன்னு வாதாட முடிஞ்சவங்க, பதில் முழுவதும் தெரிந்தால் தராளமா வாங்க.

அரைகுறையா படிச்சிட்டு, சரியா புரியாம இருந்தா வாதாட வரும் போது மறக்காம ரிக், யசூர், சாம அதர்வண வேத புக் காப்பி கூட ஒரு ஸ்டார் பக்ஸ் காபியும் வாங்கிட்டு வாங்க.

வர வழியில் fleet-wood லைப்ரரியில் Discovering the Vedas – Origins, Mantras, Rituals, Insights அப்பிடீன்னு ஒரு புக் இருக்கு.

அது கூட பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா எழுதிய ” கீதை – உள்ளது உள்ளபடியே – Bhagavad-gītā as It Is ” என்ற புத்தகத்தையும் வாங்கிட்டு வாங்க.

அப்பிடி வரும் போது வரும் போது இந்து வேதம் முழுவதும் படித்த பண்டிதர் யாரவாது பசும் பால் குடிச்சிட்டு கோவில்ல படுத்து தூங்கிட்டு இருந்தா எழுப்பி அவரையும் கூட கூட்டிட்டு வாங்க.

நான் விவாதம் செய்ய ரெடி..
அவர் எந்த ஊர் கோவிலா இருந்தாலும் பரவாயில்லை,
இல்லை எந்த ஊர் வேத பாடசாலையா இருந்தாலும் பரவாயில்லை

அது என்னதான் இந்த இந்து மதம்னு சேர்ந்து படிக்கலாம்.

முதலில் மாடு ….

தொடரும்
ஸ்ரீதர் எழுமலை