வான்கூவரில் மழை பெய்யும் ஒரு இரவில், பெட் ஷீட் போர்த்திக் கொண்டு டென்ட் கொட்டாயில் பார்த்த படம் இது. ( www.tentkotta.com)

ஒரு காலத்தில் அவார்டு படங்களை நல்ல படங்கள் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் சில நல்ல படங்களுக்கும் அவார்டு கிடைக்கும் என்பதற்கு காக்கா முட்டைக்கு அடுத்து இந்த குற்றம் கடிதல் ஒரு எடுத்து காட்டு.

படத்தின் டைரக்டர் பிரம்மன் , படத்தில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரத்தின் மூலமும் நமக்கு ஒரு கதையை சொல்ல வைத்ததுதான் படத்தின் சக்சஸ்.
படத்தின் கரு சிம்பிள் இல்லை. இதை சைகாலஜி mind ஒன் வே synthesis என்பார்கள். நம் நினைவுகளை கொண்டு இன்னொருவரின் நினைவுகளை கொன்று சின்னா பின்னம் படுத்துவோம்.

ஸ்கூல் பசங்களை வாத்தியார் அடிக்க கூடாது என்பது படத்தின் கரு அல்ல. இது படத்தின் மைய்ய புள்ளியும் அல்ல.

அப்படியாரும் தவறாக புரிந்து கொள்ள கூடாது என்பதால்தான் படத்தின் டைரக்டர் ஒரு சொட்டு ரத்தத்தை கடைசி பெஞ்சில் காண்பிப்பார். இது ஒரு கிளாச்சிக் டச். படம் பார்பவர்களுக்கு உண்மையை சொல்லிவிட்டு படத்தின் கதா பாத்திரங்களை உண்மை தெரியாமல் அழவைப்பது.

இது ஒன்னும் புது கான்செப்ட் இல்லை. பழசுதான்.

சர்வர் சுந்தரம் படம் ஒபெனிங் சீனில் ஒரு காட்சி வரும். ஒரு ரூபாய் ரோட்டில் விழுந்து இருக்கும். அதை நாகேஷ் எடுப்பார். அது அவர் சட்டை பையில் இருந்து கீழே விழுந்தது என்று யோசிக்க மாட்டார். அதை அவர் யாரோ போட்டு விட்டு சென்றுவிட்டதாய் நம்பி எடுத்து தன் பாக்கெட்டில் போடுவார். மீண்டும் சற்று தூரம் சென்ற பின்பு அந்த காசே கீழே விழும்.

மீண்டும் அதை இன்னொரு நாணயம் என்று நம்பி எடுப்பார். இப்படியே அவர் மூளை யோசிக்காமல் சுழலும். பின்பு ஹோட்டலுக்கு சென்று காசு தன்னிடம் இருப்பதாக உணவு அருந்திவிட்டு சட்டை பையில் கை விட்டு பார்ப்பார். அப்போதுதான் உண்மை தெரியும். இதைத்தான் mind ஒன் வே synthesis என்பார்கள்.

சர்வர் சுந்தரம் படம் இதை காமெடியாக சொல்லும். குற்றம் கடிதல்இதையே ஒரு குற்றம் நிகழ்ந்ததாய் படத்தில் வரும் கதா பாத்திரங்களை நம்ப வைத்து சொல்கின்றது.

படத்தில் நடித்த அனைவரும் பட்டையை கிளப்பி உள்ளார்கள். ஒரு காட்சியில் மாடிப்படி ஏறி சென்று டீச்சரின் அம்மாவை சந்திக்க போவார்.

அப்போது ஒரு பின்னணி இசை வரும். ரணகளம்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

‘புலி’ வந்து உங்களை புடுங்கி கொல்லும் முன், பார்த்துவிடுங்கள்.

படத்தில் பிடித்தது: படத்தின் கரு
பிடிக்காதது: படத்தின் நீளம், எடிட்டிங் சரியில்லை. தேவை இல்லாத காட்சிகள் பல.

www.sridar.com Rating: 7.0