ஒரு மனிதனின் முதல் photograph அவன் நிழல்தான்.
நம் நிழல்தான் கடவுள் நமக்கு தந்த permanent Photograph.
பிறக்கும் போது சூரியன் என்னும் போட்டோகிராபரை கடவுள் நமக்காக அமர்த்தி நாம் செத்து மடியும் வரை நிழல் என்னும் படத்தை எடுத்துக்கொண்டே இருக்கச் செய்தார்.
நிழலின் நிறம் கருப்பு. உலகத்தில் உள்ள எல்லா நிறங்களையும் கலந்தால் வரும் நிறமே கருப்பு.
ஏகிப்து முதல் ரோமாபுரி வரை இந்த நிறத்தை தான் முதலில் பயன்படுத்தினார்கள்.
எல்லாம் உள்ளடிக்கிய இந்த நிறம் ஒரு முழுமையான நிறம்.
கிருஷ்ணா என்றால் கருப்பு. எல்லாம் உள்ளடக்கியவன் என்று பொருள்.
நாம் வாழ்ந்து முன்டிந்தபின், நம் வாழ்கையில் எல்லாம் நிறைவாக முடிந்துவிட்டது என்பதை குறிப்பதற்காகவே கருப்பு நிறத்தை துக்கத்திற்கு அணிகிறோம்.
ஏன் இந்த நிழல் என்னும் கருப்பு நிறத்தை கொண்டு படங்களை உருவாக்க கூடாது ? என்று யோசித்தார் ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
அப்போது அவருக்கு வெறும் 14 வயது.
தனது பண்ணை வீட்டில் நிழல்களை, ஜெலட்டின் தகடுகளில் பதித்து ஆய்ந்தார் .
1884 ஆம் ஆண்டில் இதை patent செய்தார். உலகின் முதல் பட சுருள் அதுவே.
இப்போது அவருக்கு தேவை இதை உபயோக்கிக்கும் ஒரு கருவி. 1888 ஆம் ஆண்டில் அதையும் கண்டுபிடித்தார்.
அதுதான் kodak கேமரா. அடுத்த நூறாண்டுகள் இந்த kodak தான் நிழல்களின் நாயகன்.
1892 ஆம் ஆண்டில் Eastman Kodak எனும் நிறுவனத்தை நியூயார்கில் இருக்கும் Rochester எனும் இடத்தில் ஆரம்பித்தார்.
ஒரு சின்ன தகடால் செய்த உருளையில், ஜெலட்டின் மீது வெளிச்சம் பட்டால் ரியாக்ட் செய்யும் வெள்ளி கரைசலை தடவி ..அதை வெளிச்சம் புகாதாவாறு அடைத்துவிடுவது.
பின்பு அதை ஒரு காமெராவில் சொருகி தேவையான ஒளியை மட்டும் பிம்பங்களாய் அதன் மீது பதிய செய்தார்.
ஒளி படும் இடம் எதிரே உள்ள பொருளை பொருத்து வெள்ளிக் கரைசலை கரைக்கும். அதாவது கருப்பு நிறத்தை ஒளியின் தாக்கத்திற்கு ஏற்ப பிரித்து விடும்.
கருப்பை பிரித்தால்தான் எல்லா நிறமும் வந்துவிடுமே? black அண்ட் white படம், உடனே கலர் படம் ஆகியது.
நிழற் படம் இப்படித்தான் உருவானது. ஏன் இன்று mars curiosity செவ்வாய் கிரகத்தில் எடுக்கும் புகைப்படங்கள் உண்மையில் நிழல்களை கொண்டு black அண்ட் white ஆகத்தான் எடுக்கிறார்கள்.
பின்பு அதை பல நிறங்களாக இங்கே ஆய்வகத்தில்தான் பிரித்து எடுக்கிறார்கள்.
படம் பிடித்தவுடன் அதை பிக்ஸ் செய்ய வேண்டும். பதிய வைத்த பிலிம் ரோலை ஒரு இருட்டு அறையில் ஒரு போட்டோ சென்சிடிவ் பேப்பரிலோ அல்லது இன்னொரு பிலிம் ரோலிலோ பதிய வைக்க வேண்டும்.
பின்பு அதை ஹைப்போ என்னும் சோடியம் தையோ சல்பேட் கொண்டு பிக்ஸ் செய்தால் நிழல் படம் ரெடி.
இது ஒரே லாங் ஜம்ப். உலகமே வாயில் விரலை வைத்து பார்த்தது. இதனிடையில் பிளாஸ்டிக் 1900 களில் கண்டுபிடிக்கபட்டது.
George Eastman உடனே அதை பயன்படுத்தி பிலிம் ரோல்கள் செய்ய தொடங்கினார்.
இது ஒரு புறம் நடக்க, மறு முனையில் இதை வைத்து சினிமா சுருள் உருவாக ஆரம்பித்தது.
உலக மக்கள் இந்த நிழல்களுக்கு அடிமையாக ஆரம்பித்தார்கள்.
ஓவியர்கள் மெதுவாக பிச்சை எடுக்க ஆரம்பித்தார்கள்.
George Eastman கல்யாணம் செய்து கொள்ளாமல் உழைத்ததின் விளைவால் பல டெக்னாலஜி பிள்ளைகளை பெற்று எடுத்தார்.
18950 ல் பாக்கெட்டில் வைக்கும் சிறிய கேமராவை அறிமுக படுத்தினார்.
சுமார் அறுவது ஆண்டுகளில் kodak இந்த உலகை ஆடிப்படைத்தது.
உங்கள் வாழ்க்கையின் திரும்ப வாராத உண்ணத தருணங்களை நிழல்களாய் கொடாக் காமெரா படம் பிடித்தது.
இதை “கொடாக் மொமென்ட்- Kodak Moments” என்பார்கள்.
இன்றும் ஆஸ்கர் விருது வழங்கும் தியேட்டர்க்கு kodak தியேட்டர் என்றுதான் பெயர்.
1900 களில் புகைப்படம் என்ற சொல் மாறி நிழல் படம் என்று பெயர் வந்தது.
இதுதான் சரியான வார்த்தையும் கூட.
இன்றும் நாம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளிச்சத்தை படம் பிடிப்பதில்லை.
வெளிச்சம் கொண்டு நிழல்களை தான் சென்சார் கொண்டு படம் பிடிக்கின்றோம்.
1913 ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே இந்தியாவின் முதல் motion picture….அதாவது சினிமாவை kodak பிலிம் ரோலை வைத்து எடுத்தார்.
அந்த படம் ” ராஜா அரிச்சந்திரா”.சக்க போடு போட்டது.
பின்பு என் சொந்த ஊரான வேலூரில் பிறந்த நடராஜ முதலியார்தான் தமிழின் முதல் படத்தை எடுத்தவர்.
“கீசக வதம் “எனும் படம் தான் தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படமாகும்.
பின்பு காளிதாஸ் வந்தது. பித்து பிடித்து பைத்தியமாய் சினிமாவின் பின் அலைந்தார்கள்.
1930 களில் சுமார் 200 இந்திய படங்கள் ஒரு வருடத்தில் எடுக்க ஆரம்பித்தார்கள்.
அந்த நிழல் தமிழ் மண்ணையும் தொட்டது..
தமிழ் மக்கள் நிஜத்தை மறந்து நிழல் என்னும் சினிமாவுக்கு அடிமையானார்கள்.
இப்படிதான், நிழல் நிஜமாகியது.
இது இப்படியே தொடர்ந்து சிவாஜியும், எம்ஜியாரும் காவியம் படைத்தார்கள்.
இன்று ஜெயலலிதா காலில் விழுந்து, நாங்கள் சினிமா நிழலுக்கு அடிமை என்று நிரூபிக்கும் வரை தொடர்ந்து வருகிறது.
கருணாநிதி ” உளியின் ஓசை” எனும் அற்புத காவியத்தை எடுத்து அசத்தினார்.
லிங்கா எனும் மொக்கைக்கும் சில நிழலின் அடிமைகள் கிடைத்தார்கள்.
தல தளபதி ரசிகர்கள் எல்லாம் தலையால் அடித்து கொண்டு நிஜத்தை மறந்து நிழல்லுகு சண்டை போட்டார்கள்.
இவை அனைத்திற்கும் ஓரே காரணம், மனிதனின் நிழலை படம் பிடிக்க உதவிய George Eastman தான் காரணம்.
இதையெல்லாம் பார்க்க விருப்பம் இல்லாமல்தான், 1932 ஆண்டே ஒரு துப்பாக்கி வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தன் தற்கொலை குறிப்பில் இப்படித்தான் எழுதிவைத்து விட்டு இறந்தார்.
” நான் வந்த வேலை முடிந்து விட்டது..இனி எதற்காக காத்து இருக்க வேண்டும்?”
முற்றும்
ஸ்ரீதர் ஏழுமலை
Fantastic finale! Great information provided to all with this series!
அதி அற்புதம்
Great writing! Very informative and insightful, nanba!
unfortunately Kodak is struggling and filed for Bankruptcy in 2012…..City of Rochester is still to come in terms of post Kodak era. Kodak lost to the Digital World which they invented….
Great great sir… ????????????????
Good information
அதற்குள்ளே முடிந்து விட்டதா?? என் கேள்விக்கு இப்படி ஒரு அதி அற்புதமான வரலாற்றை பதிலாக தந்தமைக்கு மிக்க நன்றி….
Great …..
Man , you are amazing. Fantastic.
A to Z . Valid info. Salute
Sooooooooooooper Swamiji