“டேய் …சொல்லுடா ”
இதுதான் ஹன்சிகா அடிக்கடி சிம்புவிடம் போனில் பேசும் ஒரே வசனம்.
இப்படி..ஒரு லூசு காதலியையும் நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது
இப்படி..ஒரு வாலு ஹீரோவையும் நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது.
இப்படி..ஒரு அப்பிராணி அப்பா கேரக்டரை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது.
இப்படி..ஒரு பாசமான அம்மா, தங்கச்சி கேரக்டரை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது.
இப்படி..ஒரு கேனைக்குயான் நண்பர்கள் கூட்டத்தை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது.
இப்படி..ஒரு சப்பை வில்லன் கேரக்டரை நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது.
இப்படி..ஒரு மொக்கை கிளைமாக்ஸ் காட்சியையும் நீங்கள் நிஜத்தில் பார்க்க முடியாது.
ஏன் சொல்லப் போனால் இப்படி ஒரு படத்தை ஒரு பத்து நிமிஷம் மேல உட்காந்து பார்க்க முடியாது…
ஹீரோயின் முயல் குட்டியோட மெட்ராஸ் டவுன் பஸ்ஸில் ஏறும் போதே வாலை சுருட்டிட்டு தூங்க போயி இருக்கனும்.
“டேய் …சொல்லுடா “.உனக்கு இது தேவையா !!!
இப்படி… நச்சுன்னு ஒரு விமர்சனத்தையும் நீங்க எங்கேயும் படிக்க முடியாது…
அருமை நண்பரே…
இந்த கருமத்தையெல்லாம் விமர்சனம் எழுதி துவம்சம் பண்றதுக்காகவே பாத்தீங்களோ? ஆனா இந்த சொம்பு இந்த படத்துக்கு கொடுத்த சவுண்டு ரொம்ப ஜாஸ்தி.
Shankar மாமா… வீட்டில் வால் உள்ள ஒரே ஜீவன் நான்தான்… என்னாலயே முடியலனா பாத்துக்கோங்க..
Shankar Subram
நல்ல வேளை மருமகனே.. கோவத்துல ஸ்கிரீன பிராண்டி வைக்காம இருந்தீங்களே Kittumani Sridar பாவம் உங்க டாடி ????
இல்லை மாமா…நான் படம் அரம்பிச்ச பத்து நிமிஷத்தில் அப்படியே ஷாக்காகி தூங்கிட்டேன்
Shankar Subram மாமா
கிட்டு, என்னது??? தூங்குறதுக்கு பத்து நிமிஷம் ஆச்சா?? சிம்பு, உன்கிட்ட இன்னும் எதிர்பாக்குறோம்…. படம் பேரு போட்ட உடனே நம்ம கிட்டு தூங்கனும்… அப்படி ஒரு படத்த சீக்கிரம் (நா(வா)லு வருஷத்ல) பண்ணுப்பா….
பிரிண்ட் சரியில்லை. படம் ஆரம்பிக்கும் போது ஏகப்பட்ட சத்தம்… Out of focus வேற.. மங்கலா தெரிய பத்து நிமிஷம் ஆச்சு. அதான்…
கிட்டுவோட “ஹேர் கட்” ரகசியம்….
இந்த படம் பாத்து தலைய பிச்சிகிட்டான் கிட்டு…. அந்த “அழகோடு” வெளிய போனா, “girl friends ” பாத்து சிரிப்பாங்க… பையனுக்கு எதுக்கு அந்த சங்கடம்ன்னு, “ஹேர் கட்” பண்ணிட்டாங்க….
பாத்து சூதானமா இருந்துக்க கிட்டு, யார் படம்ன்னு தெரிஞ்சிகிட்டு பாருப்பா…. அப்புறம் நீயும் “வாலு” சுருட்டிட்டு உக்காரணும்…..
To read more !?!
Technical error … I will correct this when the texts are triggered from the web… Ragunaath Rathnam
இந்த படத்த பத்தி இதுக்கு மேல படிக்கனுமான்னு ஒரு ஆச்சர்யம்…
“வாலைச் சுருட்டிட்டு வேற வேலையப் பாருங்கன்னு” ஒரு வரியில முடிச்சிருக்கலாம்.
ஸ்ரீதர், இனி உங்களுடைய சினிமா விமர்சனம் கண்ட பிறகு தான் நான் முன்பதிவு செய்ய போகிறேன். Excellent narration. I really enjoyed Bahubali second time after your review. Keep it going !!