கடவுளின் சரக்கு
டாஸ்மார்க் மற்றும் குடியை பற்றியும் இப்போது அதிக பேர் புலம்புகிறார்கள் .
டாஸ்மார்கை மூடியே ஆகவேண்டும் … இது மிகப் பெரிய சமூக அவலம் என்றும் எழுதித் தள்ளுகிறார்கள்.
மாணவ, மாணவியர்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்று தினம் ஒரு வீடியோ வருகிறது.
ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
எதையாவது ஒன்றை பானையில் ஊறவைத்து, பின்பு அதை ஓவராக அடித்து வாந்தி எடுத்து நாறடிப்பது இன்று நேற்று அல்ல …
அது சோம பானம், சுரா பானத்தில் ஆரம்பித்து…இன்று டாஸ்க்மார்க்கில் நிற்கிறது.
என்ன?… ஒரு காலத்தில் அசுரர்களும், தேவர்களும் குடித்தார்கள்.
பின்பு அரசர்களும், அரசிகளும் குடித்தார்கள்.
பின்பு மக்கள் குடித்து குடிமக்கள் ஆனார்கள்.
அன்று அடிக்காத எந்தப் பானமும் இன்று இல்லை.
பார்லியும், அரிசியும் என்று விளைந்ததோ அன்றே மனிதன் அதைக் குடித்து விட்டான்.
பனம்பழம் பழுத்து விழுந்ததோ இல்லையோ, தெளுவு ஊறிக் குடித்து தெளிவில்லாமல் போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.
NWFP என்று ஒரு இடம் பாகிஸ்தானில் உள்ளது. இங்கே வளரும் செடிதான் சோமா.
ரிக் மற்றும் யஜூர் வேதம் படி இதை சுடுநீரில் கொதிக்க வைத்து அடித்தால் ரெட்bull effect கிடைக்கும்.
So, ரெட் bull பாகிஸ்தானில் கண்டுபிடித்த தேவர்கள் பானம்.
சுரா பானம் processing கொஞ்சம் கஷ்டம். கொஞ்சம் sprouted அரிசி, பார்லி கொண்டு தயாரிக்க வேண்டும்.
இதனுடன் மசாராவை மிக்ஸ் செய்து கொஞ்சம் மாட்டுப்பால், வேக வைத்த அரிசி போன்றவற்றை கலந்து ஈஸ்ட் கொண்டு தயாரிக்க வேண்டும்.
இது வோட்கா வகை. இது அசுரர்கள் பானம். ஏன் …தேவாலயத்தில் கூட ஒரு துண்டு ரொட்டியும், திராட்சை பழ சாறும் தருவார்கள்.
எல்லாச் சாறும் ஒன்று அல்ல. குடிப்பழக்கமும் நமக்கு புதிது அல்ல.
என்ன ஒரு காலத்தில் மறைந்து நின்று குடிப்பார்கள். இன்று வெளிப்படையாகக் குடிக்கிறார்கள்.
ஜூஸ் கலந்து சோசியல் drink அடிப்பது முதல் டாஸ்மார்க்கில் அடித்துவிட்டு சொசைடியில் விழுந்து கிடப்பதுவரை பல ரகம்.
காலம் மாற, காலாச்சாரமும் மாறும்.
எனக்கு பத்து வயது இருக்கும் போது கூலிக்கு வேலை செய்யும் ஒரு பெண்மணி குடித்து விட்டு தெருவில் விழுந்து இருந்ததைப் பார்த்தேன்.
So, பெண்கள் குடிப்பது புதிது அல்ல. அன்று கூலி வேலைக்குச் சென்றவர்கள் மறைந்து குடித்தார்கள். இன்று மேட்டுக்குடி பெண்கள் வெளிப்படையாகக் குடிக்கிறார்கள்.
குடிப்பது தவறா என்ற கேள்விக்கு என் பதில் குடிக்காமல் இருபது நல்லது என்பதே.
என் சிறந்த நண்பர்கள் பார்ட் டைம் குடிகாரர்கள்.
குடி, ஒருவரின் பழக்கம் சார்ந்தது. பண்பைச் சார்ந்தது அல்ல.
குடிப்பதைப் பற்றி தவறாகவோ …இல்லை குடிப்பவர்களை தவறானவர்கள் என்று சித்தரிப்பது தவறு.
அவர் அவர்கள்… அவர் அவர்கள் விருப்பம் போல் வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை.
குடி பழக்கத்தால் வரும் தீமையை புரிந்து கொள்ளும் தெளிவு
குடிக்காமல் இருந்தால்தான் வரும் என்பது பல குடிகாரர்களுக்குத் தெரிவதில்லை.
காரணம் …குடிக்க வேண்டாமென்று நெனைச்சா வீட்டுக்கு எதிர்ல கடை இருந்தாலும் குடிக்க மாட்டான்.
குடிக்கனும்னு ஆசை உள்ளவன் எப்படியும் எதையோ ஒன்று குடித்தே தீருவான்.
நான் அளவாக அடிப்பவன், பீர் மட்டும் அடிப்பவன்,
பாருக்கு மட்டும் போவபன், போர் அடித்தால் மட்டும் அடிப்பவன்,
தனியாக இருக்கும் போது அடிப்பவன், நண்பர்களோடு அடிப்பவன் என்று பலவகைகள் இருந்தாலும் இவர்களை மொத்தம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
அதாவது , மேஜர் Classification
1. சந்தோஷமாக இருக்கும் போது குடிப்பவர்கள்.
2. குடிக்கும் போது சந்தோஷ படுபவர்கள்.
குடியைப் பற்றிய என் கருத்து இதுதான்.
குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம்.
ஆண், பெண் என்று இருவருக்கும் குடிக்கவோ குடிக்காமல் இருக்கவோ சம உரிமை உள்ளது.
18 வயதுக்கு மேல், சுய சிந்தனையுடன் தண்ணி அடிப்பதும் அடிக்காமல் இருப்பதும் அவர் அவர் உரிமை.
தண்ணியடிக்காதவர்கள் ஒன்னும் உத்தமர்கள் இல்லை.
தண்ணி அடிப்பவர்கள் ஒன்னும் மோசமானவர்கள் இல்லை.
இது ஒரு பழக்கம் மட்டுமே. நகம் கடிப்பது போல.
நகம்,அதிகம் கடித்தால் சில சமயம் ரத்தம் வரும்.
தண்ணி அதிகம் அடித்தால் ரத்த வாந்தி எடுக்க வேண்டிவரும்.
நீங்க குடிபழக்கத்தால் ஆயுட் காலம் முன்பே இறந்தால் மனைவியோ, குழந்தைகளோ வருத்தமோ அல்லது கஷ்டமோ படமாட்டார்கள் என்று நினைப்பதும், நினைக்காமல் இருப்பதும் அவர் அவர் தனிப்பட்ட உரிமை.
வாழ, சாக …எப்படி ஒரு சுய சிந்தனை உள்ளவன் முடிவு எடுக்க முடியுமோ, அதே போல் குடிக்கவும் குடிக்காமல் இருக்கவும் ஒருவனால் முடிவு செய்ய முடியும்.
மேலோகத்துக்கு நடந்து போறதுக்கும், flight ல் போறதுக்கும் வித்தியாசம் இருக்கு.
நடந்து போகும் போது சாவது பெரும்பாலும் விதி. Flight டில் பறந்து போய் சாவது பெரும்பாலும் சதி.
முழுக் குடிகார்கள், மற்றும் குடியே தொடதவர்கள் இந்த சப்ஜெக்ட் பக்கமே வர மாட்டார்கள்.
அவர்களை யாரும் மாற்ற முடியாது என்று அவர்களுக்கே தெரியும்.
ஜன்னலைத் திறந்து தூய ஆக்சிஜனை சுவாசிப்பதுதான் கடவுள் மனிதனுக்குக் கொடுத்த மிகப் பெரிய மயக்கம்.
அப்போதுதான், மூளை வேலை செய்வதை நிறுத்தி உங்களுக்கு மயக்கத்தைத் தரும். உங்கள் கண்கள் தானாகவே மயக்கத்தில் மூடிக்கொள்ளும்.
அத்தைதான் தூக்கம் என்பார்கள்.
கடவுள், இயற்கையாக மனிதனுக்குக் கொடுத்த சாராயம்தான் தூக்கம்.
தினமும் பத்து மணி நேரம் தூங்கி பாருங்கள். டாஸ்மார்க் எல்லாம் தவிடு பொடிஆகிவிடும்.
கடவுளின் சரக்குக்கு முன் மனிதனின் சரக்கு என்றும் ஜெயித்ததில்லை.
Very true about choices!
Critical analysis.
It’s personal choice but my problem is how prevalent and socially acceptable it currently is in our middle-class tamil society.
Vj Pillay
I don’t care about the so called society.. It’s my view. If you don’t want to be a part of it move away. If you want to change it … Just change it.
Middle class is the mostly confused society. As long as you don’t promote among kids and teens… I am fine with it.
It’s a personal choice.
I will respect it.
Very true analysis of this subject. .. குடிப்பது தவறா. ……,குடிக்காமல் இருப்பது நல்லது என்பதே என்ற உங்கள் பதிவு அருமை. ..
ஶ்ரீதர் … இதை வைத்து ஆட்சி பிடிக்கும் கூட்டத்திற்கு ஒரு கதை கூறு!
Well said bro! The above written Tamil lines are awesome, I made someone to read for me. Since, I didn’t know to read
K
Summa pinnitinga sar . Soma panam , India sar. Pakistan eppadi vandadu. Watch Story of India. You must watch.
Ram Sundaram
The reference to Pakistan is related to the Soma crop that grows in that region.
Indhupradastham still holds the copyright.
Traditional