படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் அப்படியே ஹைதராபாத் பக்கம் திரும்பி ஒரு சல்யூட் அடிக்கவேண்டும் போல் இருந்தது.
முதல் முறை நான் இப்படி பூரிப்பு அடைந்தது…
செகந்தராபாத் பாரடைஸ் ஹோட்டல் – ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்து நின்று அந்த முதலாலியின் போட்டோவை பார்த்து ஒரு சல்யூட் அடித்தேன்.
அடுத்தது இப்போதுதான்.

படம் ஒரு மிரட்டல்.
மிரட்டலாக படம் எடுப்பது வேறு. படம் எடுத்து மிரட்டுவது வேறு.
பாகுபலியில், ராஜ மௌலி உண்மையிலேயே மிரட்டுகிறார்.
இதில் அரண்டு போனவர்கள் இனி கிராபிக்ஸ் என்று இந்தியர்களை சும்மா பொம்மைகளை வைத்து ஏமாற்ற முடியாது என்று புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நம்புங்கள், இந்திய CG அனிமேஷன் இண்டஸ்ட்ரியில் இந்த படம் ஒரு மைல் கல்.
இந்த படத்தின் டெக்னிகல் விஷயங்களை பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்.
அதற்கு முன் ஒரு முன்னோட்டம்.

1980 களில் நான் கர்நாடக மாநிலத்தில் உள்ள சசரவணபெலகோலா என்ற கோவிலுக்கு என் மாமாவுடன் சென்றேன்.
அங்கு உள்ள சாமி ஜட்டி போடாமல் இருப்பார். இந்த கோமதீஸ்வரர் ஆலயம் கி.பி.978-993 ல் கட்டப்பட்டது. இந்த சாமியின் பெயர்தான் பாகுபலி. வீரனாக இருந்து துறவியாக மாறியவர்.
இவர் சமணர்களால் போற்றப்படும் துறவி ஆவார். இந்த சிலை 57 அடி உயரம் கொண்டது. உலகின் மிக பெரிய free standing சிலைகளில் இதுவும் ஒன்று.

சிறு வயதில் அந்த சிலையை பார்த்து பிரமித்து போனேன். அதே பிரம்மிப்பு இந்த படத்தை பார்த்தபின்பு வந்தது.
படம் ஆரம்பித்த டைட்டில் கார்டிலும் சரி, credits கார்டிலும் சரி 99.99% இந்தியர்கள் என்பதுதான் முதல் பிரம்மிப்பு.
சும்மா கிராபிக்ஸ் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போகாமல் முழுவதும் இந்தியாவில் சிந்தித்து தாயாரிக்கபட்ட ஒரு அக்மார்க் இந்திய அசத்தல் படம்.

படத்தில் மொத்தம் 4500 VFX shots. படம் வெளிவரும் முன்னரே BBC டாப் 100 இந்திய சினிமாவில் இதை சேர்த்துக்கொண்டது, இதன் trailer தரத்தை வைத்துதான்.
படம் மொத்தமும் ALEXA XT கேமரா வைத்து எடுக்கப்பட்டது ஒரு தனி சிறப்பு. ஒரு வருட pre ப்லான்னிங், ஒரு வருட போஸ்ட் production ஒவ்வொரு frame மிலும் தெரியும்.

ஒரு உண்மை பல பேருக்கு தெரியாது. உலக கேம் டிசைன் தலைமையகம் லாஸ் ஏஞ்சலிசில் பல தில்லாலங்கடி டிசைன் குருக்கள் அடிக்கடி எடுக்க துடிக்கும் சப்ஜெக்ட் நம்ம மஹாபாரதம் மற்றும் ராமாயணம்தான்.
இன்று வரை யாருமே அதை யாருமே தொட்டதில்லை. அதை தொடவும் பயப்படுவார்கள். காரணம் இந்திய எபிக் என்றாலே பிரமாண்டம் மற்றும் வெயிட்டேஜ் கதா பாத்திரங்கள்.
எப்படி உருவகம் செய்ய வேண்டும் என்பதில் ஒரு சிறிய தவறு செய்தாலும் மொத்த கேமும் காலி, போட்ட பணமும் காலி.

பாகுபலியின் வெற்றி இதுதான்..
ஒரு இந்திய இதிகாசம் போன்ற ஒரு கதையை தத்ரூபமாக ஒரு இந்தியனால் மட்டுமே சிந்திக்க முடியும் என்று ஆங்கிலேயருக்கு புரியவைத்த படம் இதுவாகத்தான் இருக்கும்.

விளக்கு எண்ணையை கண்ணில் விட்டு பார்த்ததில், மூன்றே இடத்தில் மட்டும் தான் என்னால் பொம்மைகளை கண்டுபிடிக்க முடிந்தது.

1. குழந்தையை பிடித்து ரம்யா கிருஷ்ணன் தூக்கும் ஒரு காட்சி. டாப் ஆங்கிளில் உண்மை குழந்தை என்றாலும், தண்ணீரில் ஓடும் காட்சியில் பொம்மை தெரியும்.
2. தம்மன்னா சாயும் ஒரு மரத்தில் texture file ரெண்டர் ஆகாமல் மொட்டையாக வழு வழு என்று குறைபாடுடன் இருந்தது
3. யானையின் ஒரு காலில் lighting / texture file மிஸ்ஸிங்

மற்றபடி எல்லாமே ஹாலிவுட் தரம். அவ்வளவு perfection ஒவ்வொரு காட்சியிலும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்…

படம் முதலில் தரையில் ஆரம்பிக்கும் – wet பீலிங் இருக்கும். பின்பு ஒரு அருவியை காட்டுவார்கள் …இங்கே moist and humid பீலிங் இருக்கும்.
பின்பு அருவியை தாண்டி ஒரு ஆறுகள் ஓடும் ஒரு fertile புல்வெளிக்கு படம் நகரும்.

பின்பு கேமரா அதையும் தாண்டி மேலே செல்லும் போது நீரில்லா செமி arid சதுப்பு நிலங்களை காட்டும்.
அதன் பின் பனி மலைகள் வரும் … பின்பு அதையும் தாண்டி குளிர் மங்கோலிய பாலைவனம் போல இடங்கள் வரும்.
கடைசியில் ஆர்டிக் போன்ற இடம் வரை landscape வரும்.

கடைசி சண்டை, மங்கோலிய தலைநகரம் Ulan Bator அருகே நடப்பது போல எடுத்து உள்ளார்கள்.
ஒரு landscape டீடைலே இவ்வளவு இருக்கும் போது படத்தின் கதை மற்றும் கதா பாத்திரங்களை சொல்லவா வேண்டும்?

பிரபாஸ், ராணா, தம்மன்னா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, நாசர் என்று எல்லோரும் இன்னொரு வாழ்கையை இந்த படத்தில் வாழ்ந்து உள்ளார்கள்.
இந்த படத்தில் குறைகளை கண்டுபிடிக்க மகா கஷ்ட படவேண்டும்.

என்னடா இப்படி ஒரு உலக தர படமா என்று வாயை திறக்கும் போது,
“வாடி மனோகரி” என்று மும்பை மாடல்களை வைத்து ஒரு தெலுங்கு குத்து பாட்டு வைத்து …
ராஸ்கோல் …இது ஒரு தெலுங்கு மேகிங் என்று காண்பித்ததுதான் ஓரே குறை.

பாகுபாலி – தி beginning என்பது படத்துக்கு இல்லை
இந்திய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படங்களுக்கு.

எனக்கு பிடித்தது: எழுதிக்கொண்டே போகலாம்.
எனக்கு பிடிக்காதது: படத்தில் பிடிக்காததை கண்டுபிடிக்க கஷ்டப்பட்டது.

இந்த படம் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான்.

1. கமலஹாசன் முதலில் மருதநாயகம் கதையை இவரிடம் கொடுத்து அதில் அவர் நடிக்க வேண்டும்.
2. கருணாநிதியிடம் காசை வாங்கி ராஜமௌலியிடம் மகாபாரத இதிகாசத்தை படமாக எடுக்க சொல்லவேண்டும்.
3. இப்போது பொன்னியின் செல்வன் கதையை தமிழ் நாட்டில் யாரோ தூசி தட்டி எடுத்து படித்துக்கொண்டு இருப்பார்கள்.

ராமாயணத்தை டிவியில் சீரியல் எடுத்து ராமனந்த் சாகர் ஒரு சரித்திரம் படைத்தார்.
ராஜ மௌலி பாகுபலி படம் எடுத்து இதிகாச கதைகளுக்கு உயிர் கொடுத்து உள்ளார்.

www.sridar.com Rating: 8.5/10