ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அருமையான ஹிந்தி படம். ஷூஜீத் சிர்கர்தான் டைரக்டர்.
இந்த படத்தில் வரும் வசனங்களை வைத்து மணிரத்தனம் ஆயிரம் படங்களை எடுக்கலாம்.

வசனங்களுக்கு மட்டுமே மீண்டும் பார்க்க தூண்டும் படம். அலட்டல் இல்லாத திரைக்கதை.
எதார்த்தம்தான் இந்த படத்தின் முதுகு எலும்பு.

தீபிகா படுகோன் ஒரு ஆர்கிடெக்ட்.
அவர் தந்தையாக அமிதாப். இவர் ஒரு retired பெங்காளியாக படத்தில் பின்னி பெடல் எடுத்து உள்ளார்.
படத்தின் கரு, நம் வாழ்வியலும் அதன் பரிமாணங்களும்.
இதை மலச்சிக்கல் வைத்து பூடகமாக சொன்னதுதான் படத்தின் ஹைலைட்.

தீபிகா ஒரு strange, weird, irritating, annoying கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இவர் தந்தை அமிதாப்புக்கு மலசிக்கல்தான் பிரதானம்.
படம் போர் அடிக்காமல், இதையே சுற்றி சுற்றி வருகிறது.
தினம், தினம் அதை பற்றியே பேசி, சிந்தித்து தீபிகாவை ஒரு மனிதனுக்கு எது முக்கியம் என்பதை உணர்த்த முயல்கிறார்.

படத்தின் இன்னொரு ஹைலைட் Irrfan Khan. தன் முட்டை சிவந்த கண்களுடன் இவர் கொடுக்கும் நடிப்பு அஹா ரகம்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாதிரத்தையும் இயக்குனர் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார்.

படம் டெல்லியில் இருந்து கொல்கொத்தா நோக்கி விவாதங்களுடன் காரில் பயணம் செய்வது அருமை.
கதை எப்படி ஒரு புதினமோ, முடிவும் புதினம்.

எனக்கு பிடித்தவை:

வசனங்கள், டயலாக் டெலிவரி methods
தீபிகா படுகோன் மற்றும், இர்பான்கானின் நடிப்பு
கொல்கொத்தாவின் பனி படர்ந்த காலை

www.sridar.com Rating: 7.0/10.00