என் பையன்னுக்கு திடீர் ஞனோதயம் போன வாரத்தில் ஒரு நாள் வந்தது.
என்னிடம் வந்து நான் ஒரு, financial investor ஆகப் போகிறேன் என்றான்.

என்னடா … ஒரு காசில்லாத பிச்சக்கார அப்பாவுக்கு இப்படி ஒரு பையனா என்று ஆச்சிரியப்பட்டேன்.
அவனிடம் விசாரித்ததில், இப்படி ஒரு investor திங்கிங் வர காரணம் கூட படித்த குஜராத்தி நண்பன்தான் என்று தெரிந்துக்கொண்டேன்.

அந்த குஜராத்தி பையன் எந்த ஒரு பொருளையும் கிளாஸில் பசங்ககிட்ட பேசி விற்றுவிடுவானாம்.
மிஸ் கொண்டையில் இருந்து கீழ விழும் கொண்டை ஊசி முதல், அவர் வாத்தியார் மிச்சம் வைத்த Coke பாட்டில் வரை.
எப்படி மிச்சம் சேமிப்பது, எப்படி Craiglist டில் குறைந்த விலைக்கு வாங்கி ebay யில் அதிக விலைக்கு விற்பதுவரை இவனுக்கு குஜராத்திதான் வாத்தியார்.

சரி, நம்ம பையனும் குஜராத்தி போல கண்ணும் கருத்துமா பணத்தை சம்பாதித்து சேமிக்க போறான் என்று சந்தோஷ பட்டேன்.
எப்படியும் இவன் மார்க் ஜுகன்பர்க் ஆகிவிடுவான் என்ற சந்தோஷம்.

சரி, உன்கிட்ட பிசினஸ் டெவலப் செய்ய…என்ன என்ன ஐடியா இருக்கு என்றேன்.
என்கிட்ட சின்னது, பெருசுமா ஒரு அஞ்சு ஐடியா இருக்கு. எல்லாமே லாபகரமான தொழில்தான் என்றான்.

“சின்னதுல சின்ன லாபம், பெருசுல பெரிய லாபம்” என்றான்.
ஆசை யாரை விட்டது…முதலில் பெரிய ஐட்டத்தை சொல்லு என்றேன்.
ஓ அதுவா…அதுக்கு பெரிய முதலீடு தேவைப்படும்.

“நீங்க ஒரு மில்லியன் டாலர் கொடுங்க… கொடுத்தா அதை பாங்கில் போட்டு வர வட்டியில் ஒரு பெரிய மீன் தொட்டியை வாங்கி, அதில் மீன் குஞ்சுகளை வளர்த்து ஸ்கூல் பசங்ககிட்டே ஒரு மீன் குஞ்சு 50 சென்ட்டுக்கு விப்பேன்” என்றான். பெரிய லாபம் ..எப்படியும் ஒரு இருநூறு டாலர் வருஷத்துக்கு கியாரண்டீ.

எனக்கு பொக்குன்னு போயிடிச்சு…
“ஏன்டா என்னிடம் சேமிப்பில் அஞ்சோ பத்தோதான் இருக்கு.
ஒரு மில்லியன் இருந்தா நீ ஏன்டா மீன் குஞ்சை வளர்த்து வித்து பொழைக்கனும் ? ” என்றேன்.

“சரி அதைவிடு… அந்த அஞ்சு ஐடியாவில் சின்ன ஐடியா என்ன? ” என்றேன்.
உங்ககிட்ட இருக்கிற அந்த அஞ்சு.. பத்து டாலர் கொடுங்க. போதும் …

வீட்டில் உள்ள சின்ன தொட்டியில் ஆல்ரெடி ஒரு ஆம்பிளை மீனும் அஞ்சு பொம்பளை மீனும் இருக்கு.
இன்னும் நாலு ஆம்பிளை மீனை வாங்கிவுட்டா பத்து குட்டி மாசத்துக்கு போடும்.

எப்படியும் ஒருவருஷத்துல போட்ட பத்து டாலரை எடுத்துடலாம் என்றான்.
கீழ படுத்துட்டு இருந்த கிட்டுமணியை பார்த்தேன்.

முட்டை கண்ணை வச்சுக்கிட்டு முழிச்சான்.

நீதி: ஒரு தமிழன் என்னைக்கும் குஜராத்தி ஆக முடியாது.