இது ஆப்ரிக்காவில் எடுத்த படம்.

தூரத்தில் இருந்து பார்த்தபோது ஒரு குட்டி யானை இறந்துவிட்டது என்று எண்ணினோம்…
அதனால்தான் கூட்டமாக, இறந்த யானையை சுற்றி மற்ற யானைகள் நின்று கொண்டு இருகின்றன என்று நினைத்து ஓட்டுனரை அருகே சென்று பார்க்கலாம் என்று சொன்னேன்.
Is it is dead ? என்றேன்… அதற்கு அவர் இல்லை இல்லை …என்று சிரித்தார்.

குட்டி தம்பி தூங்கிக்கொண்டு இருக்கிறாராம்…
யானைக்கூட்டம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது குட்டி யானையால் நடக்க முடியாமல் டயர்ட் ஆகி விடுமாம்.
இருக்கும் இடத்தில உடனே படுத்து தூங்க ஆரம்பித்து விடுமாம், குட்டி யானைகள்.
அப்படி தூங்கும் போது அதற்கு நிழல் கொடுக்க தாய் யானை மட்டும் அதன் அருகே சூரிய ஒளி அதன் மீது படுமாறு நின்று நிழல் கொடுக்குமாம்.
சில சமயம் பாதி நாள் கூட இப்படி குட்டி எழும் வரை நின்று கொண்டு இருக்குமாம் தாய் யானை.

சுமார் 30 நிமிடம் அங்கு நின்று பார்த்தேன். சூரியன் நகர நகர, தாய் யானையும் நகர்ந்து நிழலாய் தொடர்ந்தது.
இதில் மிக கிளாசிக் மொமென்ட் என்னவென்றால், தாய் யானை தன் வாலால் குட்டியை தூங்கும் போது வருடிக்கொண்டு இருந்தது.

சுகமோ சுகம்…குட்டி புரண்டு புரண்டு ரசித்து தூங்கியது.

ஒரு பிள்ளையை ஒரு தாய் போல் யாராலும் வளர்க்க முடியாது.
ஒரு பிள்ளைக்கு, தாயின் பாசத்தை யாரால்லும் கொடுக்க முடியாது.

கடவுளின் டிசைன் இது.