ஒரு காலத்தில் முழு நேர ஓவியனா மாறிடலாமா என்று எண்ணியது உண்டு.

16 வருஷம் முன்னாடி ஒரு பிரபல கோயம்புத்தூர் ஹோட்டல் வாசலில் ஈசல் வைத்து ஒரு மார்க்கெட் சர்வே எடுத்தேன்.
ஒரு படம் வரைஞ்சா எவ்வளவு காசு தருவாங்க என்று சர்வே எடுத்து ஒரு வாரம் செஞ்சு பார்க்கலாம் என்று முடிவு செஞ்சேன்.
காரணம் அதுக்கு முன்னாடி ரூமில் வைத்து ஒரு வாரத்தில் தத்ரூபமா வரைஞ்ச சேட்டு பொண்ணு படத்துக்கு, சேட்டு அப்போதே 5,000 வரை கொடுத்தார்.
சரி, டக்குனு ஒரு ஸ்கெட்ச் பத்து பதினைந்து நிமிஷத்தில் போட்டு கொடுத்தா 500 ரூபாய் கிடைக்கும் என்று ஒரு estimate செஞ்சேன்.

ஹோட்டல் அதிபரை கஷ்டப்பட்டு சந்தித்து நான் வரைந்த படங்களை காண்பித்தேன்.
சார் உங்க ஹோட்டல் முன்னாடி ஒரு வாரம் நின்னு வரைய permission வேண்டும் என்று கேட்டேன்.
Ph.D ஸ்டுடென்டா இருந்துட்டு இது எல்லாம் எதுக்கு தம்பினு கேட்டவர் …நீங்க வேணா என் ……என்று வாய் திறக்கும் முன் …சார் ப்ளீஸ் என்றேன்.
அவரும் யோசித்துவிட்டு ஓகே ஓகே …என்றார். போகும் முன்னாடி வந்து பார்த்துட்டு போங்க என்றார்.

நானும் அடுத்த நாள் evening கடையை விரித்தேன். முதலில் Marketing Material ஒன்னு வேணும்.
அதனால் அங்க மூலையில் பீடா கடை வைத்து இருந்த பாய் ஒருவர் படத்தை 15 நிமிஷத்தில் வரைந்து ரெடியா மாட்டி வச்சு போற வரவங்க கிட்ட சார் உங்க படம் வரஞ்சு தரேன் …ஜஸ்ட் 15 minutes நில்லுங்க என்று கேட்டுப் பார்த்தேன். எவ்வளவு காசு என்று கேட்டார்கள். 500 என்றவுடன் பின் வாங்கினார்கள்.

500 பின்பு 400 ஆகி அடுத்த நாளில் 250 என்று ஆகியது. கடைசியில் 100 என்றவுடன் ஒருவர் வந்தார்.
ஓகே …ஆனா என்னை வரைய வேண்டாம். உள்ளே என் அம்மா சாப்பிட்டு கொண்டு இருகிறார்கள் .அவரை வரையனும் ஓகே வா என்றார்.

நிமிந்து பார்த்தா அந்தம்மா வந்துட்டு இருந்தாங்க. சரி சார் 100 ரூபாய் கொடுங்க என்றேன். இல்லை இல்லை வெறும் 50 ரூபாய் தான் கொடுப்பேன் என்றார்.
உங்கம்மா படம்தானே சார் கொஞ்சம் போட்டு கொடுங்க என்றேன் ….இல்லை இல்லை என்று கறார் பேசினார் .

கட்டுபடியாகாது சார் என்று சொல்லிவிட்டேன்.

இரண்டு நாள் முடிவில் சுமார் 1000 பேர் நான் வரைந்த பீடா பாய் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் என்று சொன்னார்கள்.
500 பேர் என் படம் வேண்டும் என்று ஆசை பட்டார்கள்.
250 பேர் பேரம் பேசினார்கள்.
கடைசியில் ஒருத்தர் மட்டும் பேரம் பேசினார்.
அவரும் வாங்கவில்லை.

இரண்டே நாளில் கடையை மூட்டை கட்டிக் கொண்டு ஹோட்டல் ஓனரிடம் thanks சொல்ல போனேன்.
அவர் என்னை பார்த்து எவ்வளவு சம்பாதிச்சே என்று கேட்டார். ஒன்னும் இல்லை சார். உங்க ஹோட்டலில் தினமும் சாம்பார் வடை வாங்கி தின்னது தான் மிச்சம் என்றேன்.

அவர் சிரிச்சுகிட்டே …தன் தலைக்கு மேல் இருந்த ஒரு போட்டோவை காண்பித்தார். அவர் செத்து போன தாத்தா போட்டோ. Rework செய்து black and white ல் இருந்தது.
செத்து போன இவரை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வரஞ்சு கொடுங்க …10,000 தரேன் என்றார். ஓகே வா என்றார்.

கும்புடுறேன் சாமியோவ் என்று அதன் போட்டோ copy வாங்கிவந்து வரைந்து கொடுத்தேன்.

நீதி இதுதான்:

உயிரோட இருக்கும் “ஆத்தா”வாங்கித்தராத 100 ரூபாயை, செத்து போன “தாத்தா” பத்தாயிரமா வாங்கிகொடுத்தார்.
நம்ம மதிப்பு தெரியாத இடத்தில் கலையை விற்க கூடாது.