இது இசை பிரியர்களுக்கு மட்டுமான படம் இல்லை.
முக்கியமாக குழந்தைகள், மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு படம்.
கதையின் ஒன் லைன் தத்துவம் இதுதான் ” நம் வாழ்க்கை நம் கையில்”.
நாம் செய்ய நினைத்ததை முழு முயற்சியுடன் செய்தால் யாராலும் அதை தடுக்க முடியாது என்பதே அது.
பாட திட்டமோ, படிக்க சொல்லும் வாத்தியோ எல்லாம் கிடையாது. இவையெல்லாம் ஒரு கிரியா ஊக்கி மட்டுமே என்பதை படம் சொல்லுகிறது.
ஒரு மியூசிக் ஸ்கூல் தான்கதை களம். ஒரு மாணவன் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இசை பயில வருகிறார்.
தாய் இல்லாத பையன் அப்பா அரவணைப்பில் வளர்ந்தவர் . இசை குடும்பமும் கிடையாது.
இசை ஆர்வம் மட்டுமே முதலீடு. இசை பயில சேரும் இடம் ஒரு மிக பெரிய இசை பள்ளிக்கூடம்.
சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் ஒரு ” Perfectionist ” .. கறார் என்றால் அப்படி ஒரு கறார்.
இவரிடம் இசை பயிலும் போது நடக்கும் நிகழ்வுகளே கதை.
Get the Maximum Out from a Student என்ற IB பள்ளி பாட முறையை கடைப்பிடிப்பவர்.
நம்ம பசங்க IB ( International Baccalaureate) முறைப்படி படிச்சா அறிவாளியா மாறிவிடுவார்களா?
இல்லை நம்ம பசங்க அறிவாளியா இருப்பதால்தான் IB ( International Baccalaureate) ல் படிக்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு படத்தில் மறைமுக பதில்கள் உள்ளன.
IB போன்ற கறார் பாடத்திட்டங்கள் படிப்பதாலே ஒரு மாணவனை அறிவாளியாக அது மாற்றிவிடாது.
அதன் உளவியலை நீங்களே படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதனால் மாணவனுக்கு வரும் மன உளைச்சல், போட்டி, பொறாமை, வெறுப்பு என்று அனைத்தையும் ஒரு இசை என்ற கதை களத்தில் சொல்லி இருக்கிறார்.
விரும்பாத பாடத்தை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கும், விரும்பி படிக்க நினைக்கும் மாணவர்களுக்கும் ஏகப்பட்ட மெசேஜ் படத்தில் உண்டு.
சிறந்த பள்ளியில் படிக்க வைப்பதால் வரும் peer பிரஷர், ஏக்கம், சாதிக்க வேண்டும் என்ற வெறி, கோல் அண்ட் Concentration , விடா முயற்சி போன்ற அனைத்தையும் ஒரு மெல்லிய காதலுடன் சொன்னது தான் ஹைலைட்.
ஆர்வமும், விடா முயற்சியும்தான் முதல் படி.
பெற்றோர்கள், வாத்தியார்கள், பள்ளிக்கூடம், பாடம் நடத்தும் முறை, படிக்கும் படம் இவை எல்லாமே இதுக்கு கீழ்தான்.
ஒரு மாணவனுக்கு தேவை அவனில் உள்ள திறமையை அவனுக்கு புரியவைப்பது.
இதில்தான் கோளாறுகள் உலகெங்கும் நடக்கிறது.
ஒரு மாணவனுக்கு அவனுள் உள்ள ஆர்வத்தை தூண்டினாலே போதும், ஒரு நாள் அது கண்டிப்பாக வெடிக்கும்.
படத்தின் கடைசி காட்சியில் அது வெடித்து சப்தம் எழுப்பும். கேட்டு ரசியுங்கள்.
உளவியல் கோட்பாடுகள் – நேர் கோடுகள்:
மாணவன் – ஆசிரியர் – பாடம் – பாட திட்டம் – பாடம் சொல்லிகொடுக்கும் முறை – ஆர்வம் – மன அழுத்தம் – விடா முயற்சி – காதல் – மோதல் – சாதல் என்று அனைத்தையும் கொடுத்த அற்புத இசை பயணம்.
You are a talent man in all subjects. Vazghga Valamudan
A good story for Tamil directors