காலை மணி ஐந்து.
தாமஸ், என்னை எழுப்பினார். இவர்தான் என் Safari வண்டியின் ஓட்டுனர்.
மனைவியும் மகனும் அயர்ச்சியில் தூங்கிக்கொண்டு இருக்க, நான் மட்டும் இருட்டை பிளந்துகொண்டு அவருடன் கிளம்பினேன்.
வயர்லஸ் கருவிகளில் மனிதர்கள் மிருகங்களை போல் பேசுவார்கள். தாமஸிடம் சொன்னேன் ” எனக்கு இன்று காலை மிருகங்களை பார்க்க விருப்பமில்லை”
ஒரு டிபிகல் ஆபிரிக்க புன்னிலம் ( African Savannah) மரத்தோடு புகைப்படம் எடுக்கவேண்டும்.
நிற்காமல் செல் என்று கட்டளையிட்டு லென்சோடு சாய்ந்துவிட்டேன்.
சுமார் அரைமணிநேரம் வண்டி ஆடி ஆடி சென்று நின்றது.
இருட்டு. மேற்கு திசை என்று சொன்னார்.
இன்னும் சற்று நேரத்தில் சூரியன் என் முதுகை தட்டி காலை வணக்கம் சொல்லுவான் என்று அவர் சொல்லுவது அரை தூக்கத்தில் கேட்டது.
பொழுதும் விடிந்தது. கண் முன்னே ஒரு ஒத்தை மரம் சவானா புன்னிலத்தில் கவிதை பாடி நின்றது.
பச்சையா மஞ்சளா என்று புரியாத ஒரு கலவையில் நீல வானம் தன் வண்ணத்தை ஓவியமாய் தீட்டி இருந்தது.
பார்க்கவே அற்புதம்….
டக் டக் என்று Landscape புகைப்படங்கள் எடுத்த பின்பு ….தாமஸிடம் கேட்டேன்…
இந்த இடத்தை இவ்வளவு பெரிய காட்டில் எப்படி கண்டுபிடித்து வந்தாய் என்றேன்?
ஓ …நீங்கள் மரத்தை மட்டுமா பார்த்துக்கொண்டு இருந்தீர்கள்….??
அந்த சகதியில் மொத்தம் 8 நீர் யானைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரிகிறதா..?? என்றார்.
ஹ்ம்ம் ஹ்ம்ம் …சத்தியம்மாக இல்லை என்றேன்…
கொஞ்சம் பொறுங்கள் ..சூரியன் முழுதாய் வந்தபின்பு பாருங்கள் என்றார்.
ஆம் …சற்று நேரத்தில் இரண்டு குட்டி நீர் யானைகள், தாயும் தந்தையுடன் வெளியே வந்தன.
புன்னிலம் என்பது புல்வெளிச் சூழல் மண்டலத்தைக் குறிக்கும். உலகில் 20% இந்த நிலம்தான்.
ஆனால் ஆப்ரிக்க புன்னிலம் என்பது ஒரு விசித்திர உலகம்.
மாயை. கண்ணால் காண்பது பொய்.
விலங்குகள் மறந்து வாழும். ஆனால் பார்க்க முழு இடமும் பரந்த வெளி போல் தோன்றும்.
Hide and Seek என்ற விளையாட்டு தோன்றிய இடம் இதுதான்.
இந்த ஒரு புகைப்படம் போதும்…ஆப்ரிக்க மண்ணின் கதையை சொல்ல…
High Resolution: http://www.sridar.photography/p19955246/h3026d675#h3026d675
பயணங்கள் தொடரும்
அருமை. .. பயண கட்டுரை உங்கள் கைவந்த கலை
Fantastic description!
Fantastic photos; I showed to all my family members
Beautiful Solitary Tree in a Serene Background!
Lonely.
Too good
payanangal thodarattum.