Author: இதை எழுதியவர் சோசியலிச நாட்டில் பிறந்து, கம்யுனிச சிதாந்தந்துடன் காப்பிடலிச நாட்டில் குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் ஒரு குருஜி.

_______________________________________________________________

காப்பிடலிசம் என்றால் என்ன என்று ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்டான்.
இந்த கேள்விக்கு உண்டான பதிலை சொல்லும் போது கம்யுனிசம், சோஷியலிசம் எப்படி காப்பிடலிசத்தில் இருந்து வேறுபடுகிறது என்று கேட்டான்.
பதில் என் மகனுக்கு புரியும் படி சொல்ல எனக்கு இரண்டு கறவை மாடுகள் தேவை பட்டது. காரணம், அவனுக்கு மாடுகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
கறவை மாடுகள் வளர்க்கும் வழிமுறைகள் பற்றி தூர்தர்சனில் வரும் “வயலும் வாழ்வும்” நிகழ்ச்சி போல இந்த கேள்விக்கு பதில் சொன்னேன்.

 

1. காப்பிடலிசம்: (Capitalism) என்றால் என்ன? : அதாவது “முதலாளித்துவம்”.

 

இப்போது உங்களிடம் எந்த மாடுகளும் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு கறவை மாடுகள் வாங்கி வளர்க்க ஆசை வருகிறது.
மாடு வாங்க காசு வேண்டும். காப்பிடலிச உலகில் காசு தனியார் வங்கியில்தான் இருக்கும்.
பேங்க் சென்று காசு கேட்டால் அவர்கள் ஒரு பசு மாடை அடமானம் வைத்தால்தான் இன்னொரு கறவை பசு வாங்க கடன் கொடுக்க முடியும் என்பார்கள்.
காபிடலிசம் கொள்கையில் காசு, இன்னொரு காசுடன் மட்டும் பேசி இன்னொரு காசை உருவாக்கும்.

ஒரு மாடு உள்ளவன் அடமானம் வைத்து, இரண்டு ஆடுகளை வேடுமானால் வாங்கலாம்.
ஒரு மாட்டில் கறக்கும் பாலை விட இரண்டு ஆடுகளை வெட்டி இறைச்சியை விற்று அதிகம் லாபம் பார்ப்பதே காபிடலிசம் (Capitalism) எனும் “முதலாளித்துவம்”.

செயல்முறை: தனியார் தான் அரசாங்கத்தை நடத்துவார்கள். பணக்காரர்கள், பணம் குறைவாக உள்ளவனிடம் பணத்தை பிடுங்கி தங்களுக்குள் சண்டை இல்லாமல் பங்கு போட்டு கொள்வார்கள்.
அரசாங்கம் இவர்களுக்கு சண்டைபோட நல்ல இடமும், ஊக்கமும் கொடுக்கும். இவர்கள் அடிப்பட்டால் வரியில் சலுகையும் கொடுத்து காப்பாற்றும்.

நீதி: மாடு இல்லதவான் கடைசி வரை கறவை மாடு வாங்காமலே இறந்துவிடுவான். அவன் செத்த பிறகு, Government அவன் கடைசி savings காசில் பால் ஊத்தும்.

விளைவு: ஒஸ்தியான 3.5 % பால் உற்பத்தி. மாடு வைத்து இருக்கும் பணக்காரன் ஏழைக்கு பாலை லாபத்தில் மட்டும் விற்பான்.

 

___________________________________________________________________

2. கம்யுனிசம் (Communism)  என்றால் என்ன? :அதாவது “பொதுவுடைமை”

 

மொத்தம் உங்களிடம் இரண்டு கறவை மாடுகள் உள்ளது. இவை இரண்டையும் அரசாங்கம் எடுத்து கொள்ளும்.
பொதுவான ஒரு மாட்டு கொட்டகையில் உங்கள் மாட்டை எல்லோருடைய மாடுகளுடன் அடைத்து விடும்.
உங்களை அந்த எல்லா மாடுகளையும் பார்த்து கொள்ளவும் சொல்லிவிடும்.
இதில் வரும் மொத்த பாலில் அரசாங்கம் உங்களுக்கு ஒரு கிளாஸ் பாலை மட்டும் தரும்.

செயல்முறை: எல்லோர் மாடும் அரசாங்கதுக்கு சொந்தம். புல் வெட்டுவது முதல், பால் கறப்பது என அனைத்தையும் மக்கள் கையில் கொடுத்துவிடும்.
அதில் சிலர் மட்டுமே வேலை பார்ப்பார்கள். பெரும்பாலும் ஓபி அடிப்பார்கள். கடைசியில் கொஞ்சூண்டு பால்தான் கிடைக்கும். எல்லோருக்கும் ஒரு கிளாஸ் மட்டுமே அரசாங்கம் கொடுக்க முடியும்.
ஓபி அடித்தவனும் அதே ஒரு கிளாஸ் பாலை அரசாங்கத்திடம் இருந்து வாங்கி குடிப்பான்.
இவ்வளவு மாடு இருந்தும் கொஞ்சம் பால் தானா என்று, வேலை செய்யாத 99 ஓபி அடித்தவர்கள், வேலை செய்த ஒருவனிடம் சிவப்பு கொடியை கொடுத்துவிட்டு அரசாங்கத்திடம் சண்டை போடுவான்.

நீதி: அரசாங்கம் மாட்டு கொட்டகையை மூடிவிட்டு, கழுதை கொட்டைகையை இன்னொரு இடத்தில தொடங்கும்.

விளைவு: மட்ட ரக 0.5. % பால் உற்பத்தி டின் டின்னாக டாலர் ஸ்டோரில் கிடைக்கும். இது மாடு இல்லாதவன் உற்பத்தி செய்தது.

 

___________________________________________________________________

3. சோஷியலிசம் (Socialism) என்றால் என்ன? அதாவது “சமூகவுடைமை”

 

உங்களிடம் மொத்தம் இரண்டு கறவை மாடுகள் உள்ளது. இவை இரண்டும் உங்களுக்காகும் உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் அரசாங்கம் கொடுத்தது.
இதில் வரும் பாலை நீங்களும் உங்கள் அடுத்த வீட்டில் வசிப்பவரும் கறந்து எடுத்து கொள்ளலாம்.
எந்த மாடை யார் வளர்ப்பது, யாருக்கு பால் அதிகம் தேவை, யார் எவ்வளவு குடிக்கலாம், யார் எவ்வளவு விற்கலாம் என்று தினம், தினம் இருவருக்கும் சண்டை நடக்கும்.
மாடு வளர்ப்பவன் மாட்டை விற்றுவிட்டு நூறு கோழி வாங்கலாம் என்று யோசிப்பான்.
ஆடு வளர்ப்பவன் மாட்டு பாலுக்கு ஆசை படுவான்.

செயல்முறை: யார் வேண்டுமானாலும் எதையும் வாங்கலாம். வளர்க்கலாம். விற்கலாம்.
அரசாங்கம் மாடு வளர்ப்பில் வரும் லாபத்தை கோழி வளர்க்க கடனாக கொடுக்கும்.ஆடு வளர்ப்பதில் வந்த நஷ்டத்தை மாடு வளர்ப்பவனின் தலையில் கட்டும். எல்லா லாபத்தையும் அரசாங்கம் நஷ்டத்தில் மட்டுமே காட்டும்.

அரசாங்கம் கடன் கொடுக்கும். கொடுக்க பணம் இல்லாமல் போனவுடன் உலக வங்கியில் இருந்து கடன் வாங்கும்.
மக்கள் அதற்கு வட்டி கட்டுவார்கள்.

நீதி:எல்லோரும் எனக்கு தேவையானது அரசாங்கம் கொடுக்கவில்லை என்று சண்டை போடுவார்கள். வேலை மட்டும் நடக்காது.

கடைசியில் மாடு, ஆடு, கோழி மூன்றும் சாப்பாடு இல்லாமல் செத்துவிடும். எல்லோரும் சேர்ந்து அரசாங்கத்தை திட்டிக்கொண்டே புதைப்பார்கள்.

விளைவு: பாலில் தண்ணீரை கலந்து விற்பார்கள். மாடு இல்லாதவன் சுண்ணாம்பில் தண்ணீர் கலந்து விற்பான்.

உதாரணம்: உங்களுக்கே வெளிச்சம்.

________________________________

In Short:

Capitalism: தரமான பாலை, பணக்காரன் பிச்சைகாரனுக்கு விற்பான். பிச்சைகாரன், பணக்காரனிடம் இருந்து பிச்சையை கடனாக வாங்கி தரமான பாலைவாங்கி குடிப்பான்.

Communism: மட்டமான பாலை பிச்சைக்காரர்கள் டன் கணக்கில் உற்பத்தி செய்வார்கள். தரம் என்று பணக்காரனிடம் விற்க முயற்சிப்பார்கள்.

Socialism: பால் வாங்க வருபவனிடம் சாக போகும் மாடை விலை பேசுவார்கள். பாலும் விற்காது, மாடும் விற்காது.

ஆனால் 2020 இல் வல்லரசாக மாறிவிடும் என்று ஈமு கோழி வளர்க்க சென்று விடுவார்கள்.