இந்த வார இறுதியில் நடந்த ஒரு இரவு விருந்தில் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

தபலாவுக்கும், மிருதங்கத்துக்கும் என்ன வித்தியாசம் என்று?

 

அதில் ஒருவர் நீங்க கேட்பது நம்ம ஊரு “டும் டக்கா”பற்றியா என்றார்.

 

உண்மையில் “டும் டக்கா” என்பது ஒரு இசை கருவி.

அது நம்ம ஊர் தவிலை குறிக்கும்.

 

தவிலில் ஒரு பக்கம் குச்சி வைத்து அடிக்கும் போது ” டும் டும் ” என்று ஓசை வரும்.

இன்னொரு பக்கம் கை விரலில் Band Aid மாட்டிக்கொண்டுஅடிப்பார்கள் . அப்போது ” டக்கா.. டக்கா ‘ என்று ஓசை வரும்.

இரண்டும் ஒரு சேர கேட்டால் : “டும் டக்க, டும் டக்கா ” என்று கேட்க்கும்.

அதனால் தவில் வாத்திய இசையை “டும் டக்கா வாத்தியம்” என்று Nickname வைத்து அழைக்க ஆரம்பித்தார்கள்.

 

இதன் nativity தஞ்சாவூர். தொன்மை நிறைந்த வாத்தியம்.

மூன்று டாப் தமிழ் திரைப்படங்கள் டும் டக்காவை வைத்து மேஜர் பின்னணி இசை அமைக்கப்பட்டன.

அவை, தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் மற்றும் பருத்தி வீரன்.

 

டும் டக்கா எனும் தவில் செய்ய தேவையான பொருட்கள்:

1. ஒரு Dead ஆடு: Left Side

2. ஒரு Dead எருமை கன்று; For Right Side

3. மூங்கில் பத்தை தேவையான அளவு: For Top Connections

4. பலா பழ மரம் : For Drum

5. புடுங்கிய சில ஆணிகள்:

6. அடிக்க ஒரு சுத்தி

7. ஒரு பழைய வேஷ்டி – கட்டி கழுத்தில் தொங்க விட

 

Uses:

இந்த டும் டக்கா, கல்யாணம் போன்ற சில நல்ல காரியங்களுக்கு பெரிதும் வாசிக்கபட்டாலும் அதில் ஒரு ஆண் மகனின் சுதந்திரம் மற்றும் சந்தோஷம் செத்து மடிவதால் என்னை பொருத்தவரைஇது ஒரு சோக வாத்தியம்.

ஒவ்வொரு கல்யாண தவில் சத்தத்திலும் ஒரு Bachelor ரின் இதய துடிப்பு அடங்குவது சகஜம்.

 

கேள்விக்கு பதில்:

நீட்டா …படுக்க வெச்சு வாசிச்சா மிருதங்கம்.

உடைச்சு, நிமித்தி வச்சு வாசிச்சா அது தபலா.
கச்சேரியில் மிருதங்கம் வாசிச்சா – முழிச்சு உட்காந்து இருப்பவன் படுத்து தூங்குவான் .
தபலா குத்து பாட்டுக்கு வாசிச்சா – படுத்து தூங்குபவன் எழுந்து உட்காருவான்.

 

– டும் டக்கா ஒரு அகழ்வாய்ராய்ச்சி எனும் குறிப்பில் இருந்து சுவாமிஜி.