இது ஒரு சென்சிடிவான, சீரியஸ் மெசேஜ் சொல்லும் ஒரு காமெடி படம். என் rating 8.0 /10.0. பொதுவாக rating கடைசியில் போடுவேன்.

நான் இந்த படத்துக்கு 8.0 ரேடிங் கொடுக்க படத்தின் ஓரே ஒரு மெசேஜ்தான் காரணம்…இந்த மார்க் படம் சொல்லபட்ட விதத்திற்கு அல்ல.

மொத்தத்தில், இது ஒரு தலைபட்சமாக ஒரு மதத்தை மட்டும் அதிகம் கேவலப்படுத்தி, கோழையாக பயந்து எடுக்கப்பட்ட ஒரு சூப்பர் படம்.

 

கண்டிப்பாக பார்வேண்டிய ஒரு படம். அமீர்கான் அம்மணமாக வந்து, போலி சாமியார்களின் டவுசர் அவிழ்த்தது தான் படத்தின் ஹை லைட்.

Three idots, முன்னாபாய் MBBS போன்ற படங்களை எடுத்த ராஜ்குமார் ஹிரானிதான் இதன் டைரக்டர். சரி மேட்டருக்கு வருவோம்.

 

படத்தின் ஒன் லைன் இதுதான் ” கடவுளை நம்பலாம், நான்தான் கடவுளின் ப்ரோகர் எனும் சாமியார்களை நம்பாதே ” என்பது தான் அது.

 

டைரக்டர் பல கேள்விகளை இந்த படத்தில் நம்மிடம் ஒரு வேற்று கிரக வாசியான அமீர்கான் வைத்து காமெடியாக கேட்டு உள்ளார்.

இவர் படத்தில் கேட்கும் கேள்விகள் நியாயம் தான். ஆனால் இவர் பயந்து கொண்டு எல்லா நியாமான கேள்விகளையும் எல்லா மதத்தினரையும் கேட்கவில்லை என்பதே உண்மை.

ஒரு திறைமையான கோழை டைரக்டர் எடுத்த பாதி உண்மையையை சொல்லும் முகமூடி படம்.

இன்று உலகில் அதிகம் வழிபடும் மதம்: Christianity 2.1 – billion 33.0%, Islam 1.3 billion – 20.1, Hinduism 851 million

எல்லா மதத்தின் டாப் 3 போலி மற்றும் டாகால்டி மேட்டர்களை காண்பித்து இருந்தால் படத்துக்கு 10.00 / 10.00 கொடுக்கலாம்.

இது இந்து மதத்தை மட்டும் அதிகம் தாக்கி எடுக்கப்பட்ட படம்.

என்னிடம் ஹிரானிக்கு பல கேள்விகள் உண்டு. அதை கடைசியில் கேட்கிறேன்.

 

படம் சொல்லும் 3 Message இது தான்:

1. பிறப்பால் எல்லோரும் ஒருவரே

உலகத்தில் பிறக்கும் போதே நமக்கு tag அடித்து இவன் இந்த இனம், மதம் என்று பிறப்பதில்லை.

2. கடவுளை நம்பு, கடவுளை உருவாக்கும் சாமியார்களை நம்பாதே. கடவுளை நான் காட்டுகிறேன் என்பவனும், நானே கடவுள் என்று சொல்பவனும் wrong நம்பர் டயல் செய்யும் ஆசாமிகள்.

3. There are 2 Gods. One தி real God, the other created by போலி சாமியார்கள்.

மூன்றுமே சூப்பர் மெசேஜ். ஆனா முழு மெசேஜ் இல்லை.

 

படம் சொல்லப்பட்ட விதம்:

வேறு கிரகத்தில் இருந்து வந்த அமீர் கான் ராஜஸ்தான் பாலைவனத்தில் இறக்கி விடப்படுகிறார்.

அவர் திரும்பி செல்ல உதவும் ஒரு சிக்னல் திருடப்பட்டு ஒரு சாமியாரிடம் சென்று சேர்க்கிறது.

அதை அவர் ஒரு “சொப்பு வாய் சொப்பனசுந்தரி” (அனுஷ்கா ஷர்மா ) உதவியுடன் அடைகிறாரா, இல்லையா என்பது தான் கதை.

முடிந்த வரை லாஜிக் வைத்து திறமையாக எடுக்கப்பட்ட படம். கதை களம், கோர்வை மிக அற்புதம்.

 

படத்தின் வெற்றிக்கு எது காரணம்? – கான்செப்ட்: Third Eye and Clairvoyance:

மனிதனை மனிதன் கேள்வி கேட்பதைவிட ஒன்னும் தெரியாத மனுஷன் கேட்பதால் இந்த படம் ஒரு – Third Eye Perspective அப்ரோச் வகை.

The third eye  is a mystical and esoteric concept referring to a speculative invisible eye which provides perception beyond ordinary sight. இந்த மூன்றாம் கண் பாத்திரம்தான் அமீர்கான். படத்தின் வெற்றிக்கு இது தான் காரணம்.

இதுவே சிவ பெருமானின் கான்செப்ட். உலகமே இந்த Third Eye Perspective Approach ஐ –  கம்போடியாவில் இருக்கும் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து கத்துக்கொண்டது என்பது தனிக்கதை.

ஆனால் படத்தில் சிவ பெருமான் ஓவாராக கலாய்க்கபடுகிறார். இது தவறு என்பது என் கருத்து.

அடுத்து Clairvoyance என்பது தமிழில் நுழைபுலம் என்று அர்த்தம். ஒரு விபச்சாரியிடம் இருந்து அமீர்கான் ஒரு வட மொழியை Clairvoyance மூலம் கற்றுக்கொள்வார். இது – Fictional ability to gain information about a person through means other than the known senses . இது ஒரு

Sanātanī என்ற ஒரு பழைய இந்து மத வழிபாட்டில் வரும் ஒரு உக்தி. அதை போல் இது Aura (paranormal) என்பது ஒரு வகை சக்தி. இது தான் குண்டலி யாகத்தில் சொல்ல பட்ட மனிதன் பெரும் சக்தி. வேற்று கிரக வாசிக்கு அந்த சக்தி வரும் போது யாகம் செய்த உண்மை யோகிக்கு ஏன் இது வரக்கூடாது? இவர் சொல்லும் கதை Greek – Plaoto வின் – neoplatonism மற்றும் கப்பலாஹ் என்னும் உருது வழி சொல்லப்படும் கதைகள் போன்றது.

மொத்தத்தில் இந்த கதையை இந்த டைரக்டர் சொல்ல அவருக்கு இதிகாச, சமய வழிகள் தேவை பட்டு இருக்கின்றன என்பதே உண்மை.

 

எனக்கு பிடித்தது:

1. படம் பார்க்கும் முன் சாப்பிட்ட ” வான்கோவர் Chutney Villa வின் கோழி வருத்த கறி மற்றும் பரோட்டா ”

2. படத்தின் மாரல் மெசேஜ்: படத்தில் சொல்லப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் உண்மையானவை. நச் வகை.

3. கடவுளை கும்பிடாமல், கடவுள் நான்தான் என்று சொல்லும் சாமியார்களை கும்பிடும் மக்களை செருப்பால் அடித்தது போல் அமீர் கான் செருப்பை கையில் வைத்துக்கொண்டு கேள்வி கேட்டது.

4. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டது.

5. அமீர்க் கானின் நடிப்பு

 

எனக்கு பிடிக்காதது:

1. “சொப்பு வாய் சொப்பனசுந்தரி”- அனுஷ்கா ஷர்மாவின் சொப்பு வாய் அசைவு.
படத்தில் தேவை இல்லாதது:

முஸ்லிம்கள் தான் ரயிலில் குண்டு வைப்பவர்கள் என்று சாம்பிள் வெடி வைத்து சமாளித்தது.

 

படத்தில் வைத்து இருக்க வேண்டியது:

கடைசி interview காட்சியில் ஒரு போலி பாதிரியார் , போலி முஸ்லிம் அடிபடைவாதியை வைத்து சாமியாருடன் நடத்தி இருக்கலாம்.

 

For Director – என் கேள்விகள்:

 

1. நீங்க சொன்ன message சூப்பர். அதை ஏன்  இந்து மதத்தை மட்டும் முன் நிறுத்தி சொல்லி உள்ளீர்கள் ?

படத்தில் ஏகப்பட்ட இடத்தில் உங்கள் பயந்தான் கொல்லி இமேஜ் தெரிகிறது. மத்த மதங்களை லைட்டா டச் செய்றீங்க? பயமா?

 

2. உண்மையான சாமியார்கள் எல்லா மதத்திலும் இருகிறார்கள். அதே போல் போலி  சாமியார்களும் எல்லா மதத்திலும் இருகிறார்கள்.

போலி சாமியார்களை இந்து மதத்தில் மட்டும் அதிகம் காட்டுவதால் மற்ற மதத்தில் போலிகள் இல்லை என்பது போல் படத்தில் தெரிகிறது. ஏன் எல்லா மதத்தின் போலிகளை காட்டவில்லை?

கையை வைத்து முடத்தை குணம் செய்யும் போலி கிருஸ்துவ பாதிரியாரையும், தாயத்து கட்டும் போலி முல்லாக்களும் ஏங்கே போனார்கள்?

 

3. உங்கள் படத்தில் கோவிலுக்குள் சென்று சாமியை காட்டி பூசாரியை கேள்வி கேட்க்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் பயந்து தேவாலயத்தில் சிலுவைக்கு கொஞ்ச தூரத்தில் தள்ளி நின்று பாதிரியாரை கேள்வி கேட்கிறீர்கள்.

கடைசியில் ரொம்பவே பயந்து, மசூதிக்கு வெளியில் நின்றே துரத்தி அடிக்கப்படுகிறீர்கள் ? காட்டினா எல்லாத்தையும் காட்டனும். கேட்டா எல்லாத்தையும் கேட்கனும். ஏன் எல்லாத்தையும் காட்டலை, ஏன் எல்லாத்தையும் கேட்கலை சார்?
4. சிவ பெருமான் வேஷம் போட்டவரை ஜட்டியோட கதைக்காக ஓட விட்ட உங்க தைரியம் ஏசுவையோ அல்லது நபிகள் நாயகம் வேஷம் போட்ட ஒருவரை ஜட்டியோட கதைக்காக ஓடவிட்டு காட்டமுடியுமா?

 

என் பார்வை:

இந்து பெற்றோருக்கு பிறந்தவன் இந்து. கிறிஸ்து பெற்றோருக்கு பிறந்தவன் கிறிஸ்து. முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவன் முஸ்லிம்.

குலம், குல தெய்வம், கோத்திரம், ஜாதி, மதம், கடவுள் அனைத்தும் பிறப்பின்பால் மனிதன் தன்னை அடையாளப்படுத்தி கொள்வது.

1. எந்த சாமியை யார் கும்பிடுவது என்று அவனவன் விருப்பம்.

2. கும்பிடுறதும், கும்பிடாம இருப்பதும் அவனவன் விருப்பம்.

3. எப்பிடி கும்பிடனும் என்பதும் அவனவன் விருப்பம்.

4. எந்த மதமும் கெட்டதை சொல்வதில்லை. சில மதங்கள் சொல்லும் சில கருத்துக்கள் காலத்துக்கு ஒத்துவராமல் outdate ஆகிவிடும். சிலது இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்துவராது. அப்பிடி இருக்கும் மதம், இனம் , ஜாதி எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும். கிரேக்க Mithraism, அழிந்துவரும் ஜைனம், பரவாமல் கஷ்டப்படும் பௌத்தம், மிசோ அமெரிக்கன் ஒல்மேக் மதம், ரஷ்ய Tengriism மற்றும் ஆரிய Vedism போன்றவை இதற்கு உதாரணம். ஒத்துவராத மொழி, இனம், கடவுள், ஜாதி காலப்போக்கில் Natural Selection அறிவியல் முறைப்படி அழியும். எத்தனை சாமியார், பாதிரியார், முல்லாக்கள் வந்தாலும் அழியனும் என்றால் அழியும். வளரனும் என்றால் வளரும்.

5. சீரியஸா படம் எடுத்தா எல்லாத்தையும் சொல்லனும். சிவ பெருமான் மட்டும் இமயமலையில் பிச்சை எடுப்பாராம், மாத சாமிகள் pizza பர்கர் சாப்பிடுவது தவறு.

6. உங்க படத்தில் சாமியை கும்பிடுபவன் ஒரு Fear Factor இருப்பதால்தான் கும்பிடுகிறான் என்று சொல்வது அபத்தம். பெரும்பாலோர்கடவுளை நம்பிக்கையின் பேரில் கும்பிடுகிறார்கள். அது மடத்தனம் அல்ல.

7. இந்த உலகத்தில் எல்லா மதத்திலும் உண்மையான சமய குருமார்கள் தேவை. சமய நூல்களை கடவுள் எழுதவில்லை. அறிவுள்ள மனுஷன் எழுதினதுதான் அது. அதை சரியா படிச்சு சொல்ல வந்த வாத்தியார்தான் சாமியார், பாதிரியார் மற்றும் முல்லாக்கள். இவங்க கண்டிப்பா தேவை.

8. சாமி இருக்கா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா சாமிக்கு கிழ உட்காந்து நான் தான் சாமின்னு சொல்றவன் ஒரு முடிச்சு அவுக்கின்னு மட்டும் தெரியும்.

9. சாமி கும்பிடுவதில் தப்பில்லை. கும்பிடாமல் இருந்தாலும் தப்பில்லை. அப்ப அப்ப தேவைக்கு ஏத்த மாதிரி மாத்தி கும்பிட்டாலும் தப்பில்லை.

10. மொத்தத்தில் இந்த படம் நிறைய நியாமான கேள்விகளை கேட்டு உள்ளது உண்மை. ஆனா எல்லா நியாத்தையும் கேட்கவில்லை. இந்தியாவில் இந்து மதத்தை தவறாக பேசினால் படம் வரும்.அதுவே மத்த மதத்தை பற்றி கொஞ்சம்பேசினால் கூட படம் வராது. காரணம் Secularism என்ற மதச்சார்பின்மை வெங்காயம்.

 

பின் குறிப்பு:

இங்க நான் மதம் பற்றி வாதம் செய்ய மாட்டேன். எனக்கு எல்லா மதமும் ஓகே.நான் 27 வருஷம் சாமி அதிகம் கும்பிட்டதில்லை. கஷ்டம் வந்தா மட்டும் கும்பிடும் சிறுன்பான்மை குரூப் நான்.சில கோவில்களுக்கு சாப்பிடவும், சில கோவில்களுக்கு சாமி கும்பிடவும்செல்வேன் செல்வேன். (Gone to Lakshmi Narayan Temple only for Pakora). யார் எதை கும்பிட்டா எனக்கு என்ன? நான் ஏமாறாமல், ஏமாற்றபடாமல் இருந்தால் மட்டும் போதும்.

எங்க அப்பாவும், மாமனாரும் தி க.

என் பையன் பேரு கிருஷ்ணன். என் பேரு ஸ்ரீதர் – அதாவது விஷ்ணு.

என் உயிர் நண்பன் முஸ்லிம்.

இந்த விஷயத்தை நான் போன் போட்டு Church க்கு போற என் friend கிட்ட சொன்னேன்.

அவன் புத்தர் மாதிரி சிரிச்சான்.

பகாய் பகாய் !!!

இந்த படம் ஒரு சமுதாய மாற்றம் கொண்டு வராது. ரெண்டு வாரத்தில் 300 கோடி கொண்டுவந்தது.

ஓரே சூப்பர் மெசேஜ்: போலி சாமியாரை செருப்பால் அடித்தது.

மிகப் பெரிய குறை: உண்மை சாமியையும், உண்மை  மத போதகர்களையும் அடையாளம் காட்டாமல் விட்டது.

 

நீதி:

அன்பே சிவம்

 

 www.sridar.com Rating: 8.0 /10.0