எல்லோருக்கும் உயரே பறந்து சென்று
அமர ஒரு கிளை இருக்கத்தான் செய்யும்
தாவி, தாவி கிளைகள் தேடுவது வாழ்க்கை இல்லை.
அமைதியாய் அமர்ந்து ரசிப்பதே வாழ்க்கை.
ஒரு மணி நேரம் ஆகியும் கிளைகள் மாறா கழுகு,
ஆப்ரிக்காவில் எனக்கு சொல்லிக் கொடுத்தது.
கடைசியில் கழுகு வானில் பறந்து போனது
இலக்கு இல்லா வாழக்கையே ஆனந்தம்.
A Nice Silhouette Sridar Photography !
இலக்கு இல்லா வாழ்க்கை மனிதனை ஒரு lazy ஆக ஆக்கிவிடும் அல்லவா
இலக்கிற்கும் (goal) சோம்பேறிதனத்திற்கும் ( laziness) சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறேன் ஸார். Laziness is just the desire to be idle, to do nothing and resist effort. வேண்டும் என்றே வேலை செய்யாமல் இருப்பது.
நிறைய பேருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
உண்மையில் சோம்பேறிகளுக்குதான் வாழ்கையில் அதிக இலக்குகள் இருக்கும்.
உழைப்பவனுக்கு என்றும் எதிப்பார்ப்புகள் குறைவு.
ஆரம்ப கால கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு தேவை தான்!
அனால் ஓரளவு இலக்கை அடைந்த பின்னர், திரும்பத் திரும்ப இலக்குகளை மாற்றிக் கொண்டு, வாழ்வியல் பயணத்தை வகுத்துக் கொள்வது அபத்தம்.
வாழ்வியல் உண்மைகளை முழுதும் புரிந்து கொண்டு, ஆனந்தமாகவும், பரமானந்தமாகவும் திளைக்க வேண்டுமெனில், இலக்குகளை கடந்து, இலக்குகளே இல்லாது (Purposelessness) அமைதியாக , அந்தக் கிளையில் அமர்ந்திருந்த கழுகு போல், அமர்ந்து “சாட்சி பாவனை யோடும்” (Witness-like), ரசிப்புத் தன்மையோடும் வாழ்வியலை அணுகுவதே உத்தமம்.
இந்த உளவியல் உண்மையை முழுமையாக தான் உணர்ந்ததோடு அல்லாமல், அனைவருக்கும் மனதில் பதியும் வண்ணம், அருமையான- எளிமையான புகைப்படத்தோடு, பதிவு செய்த நமது ஆர்க்டிக் ஹீரோவின் முயற்சிக்கு எமது நெஞ்சார்ந்த பாரட்டுதல்கள்!
Beautiful pic.Wonderful write up.Nice.
Nice words
ilakku illenaalum
luck irukkanum.