Attention மீன ராசி நேயர்களே !!!!
இதுவரை சைக்கிளில் வந்து பார்சல் டெலிவரி செய்த சனி Yan, இனி விமானத்தில் பறந்து வந்து புல்லட் ஓட்டி வந்து நல்லவைகளை டெலிவரி செய்வார்.
மீன ராசி நேயர்கள் வீட்டுக்கு வரும் இந்த சனியனுக்கு இதுவரை மொத்தம் 2 பிரேக் of journey இருந்தது.
இதுவரை முதல் பிரேக் of journey – அஷ்டமத்தில் இருந்தது. அதனால் நம்ம ஆளுங்க டெலிவரி வராம கொஞ்ச மாசம் கஷ்ட்டபட்டோம்.
இப்ப அங்க connection flight கிடைச்சு 9 ஆம் நம்பர் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார். இப்ப தான் tracking நம்பர் அலெர்ட் வந்தது. செம நியூஸ்.
சனி நம்ம 9-ம் வீட்டில்தான் மூணு வருஷம் பிரேக் of journey எடுக்க போகிறார். Expected சூப்பர் Delivery 16.12.2014 முதல் 17.12.2017 வரை.
ஜனவரி உங்க வீட்டுக்கு Fed Ex பார்சலுடன் வருவார்.இதுவரை டெலிவரி வராம கோபப்பட்டு காத்து இருந்த நீங்கள் இனி சாந்தமாவீர்கள்.
சனிப்பயல் வந்து உங்களுடன் தான் தங்க போகிறார். பயபடாதீங்க ….நல்ல மூடில் இருக்கார்.
இந்த வின்டரில் சனி வரும் போது கூட ஒரு டார்ச் லைட் எடுத்துட்டு வருவார். அதன் பின் இருளில் இருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள்.
கருப்பா இருந்தா செவப்பா தெரிவீங்க..ஆல்ரெடி செவப்பா இருந்தா strawபெரி கலருக்கு மாறி கலக்குவீங்க.
இனி மூணு வருசமும் அவர் எடுத்துட்டு வந்த பார்சலில் இருக்கும் item உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.
நீங்க ஒன்னு ஒண்ணா எடுத்து பொறுமையா என்ஜாய் செய்யலாம். எல்லாமே ஜனவரி மாசம் கிடைக்காது. மூணு வருஷம் பொறுமையா எடுத்து என்ஜாய் செய்யுங்க.
இனி அதை பத்தி சுருக்கமா சொல்றேன்:
Snow கிளியர் ஆகும் போதே உங்கள் மன உளைச்சலும், டென்ஷனும் விலகும். Wait for 3 months.
தயிர் சாதம் செய்ய தெரியாம கஷ்டப்பட்ட நம்ம மீன ராசி ஆளுங்க இனி மீன் குழம்பு வைக்க கத்துக்குவாங்க.
அதாவது, சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறின நம்ம இனி உற்சாகத்துடன் அனைத்தையும் முடித்துக் காட்டுவோம்.
சனியின் பார்சலில் ஒரு கண்ணாடி இருக்கும். அது ஜூன் ஜூலையில் கிடைக்கும். அதை எடுத்து போட்டா எல்லாம் தெளிவா தெரியும். I mean இனி உங்கள் வாழ்வில் தெளிவுப் பிறக்கும்.
ஒரு மூணு வருஷத்துக்கு தூக்க மாத்திரையும் அந்த பார்சலில் இருக்கும். பல நாட்கள் தூக்கமின்றி அவஸ்தைப்பட்டீர்களே! இனி நிம்மதியாக உறக்கமும் வரும்.
விண்டர் முடிந்து தலையில் இருந்து குல்லாய் எடுக்கும் போது குல்லாயுடன் உங்களுக்கு இருக்கிற கொஞ்சம் நஞ்சம் கஷ்டமும் போகும்.
இனி உங்க வீட்டு Washing machine துணியை மட்டும் clean செய்யாது. உங்கள் கஷ்டத்தையும் சேர்த்து கிளீன் செய்யும் மக்களே. 2015 முடியும் போது ஆல் clear .
இதுவரை உங்களை பேமானினு சொன்னவன் 2015 மார்ச் மாசத்துக்கு அப்புறம் உங்களை ஞானின்னு சொல்லுவான். இது ஒரு பெரிய மாற்றம்.
காரணம் இது உங்க வீட்டில் இல்லை, நீங்க வேலை பார்க்கும் ஆபிசில். இதுவரை நீங்க ஞானின்னு நினைச்ச உங்க மேனேஜர் உங்ககிட்ட பேமானியா கெஞ்சி கெஞ்சி வேலை வாங்குவாரு. நீங்க தான் ராஜா.
கூனிக் குறுகி அவமானப்பட்டு பஸ்ஸில் டிக்கெட் இல்லாமல் நின்றீர்களே! அந்த நிலையெல்லாம் மாறும்.
உட்கார சீட் தானே கிடைக்கும். இனி தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து டிக்கெட் வாங்குவீர்கள்.
வாழ்க்கையில் முதல் முறையா ஒரு அதிசியம் நடக்க போகுது.
மீன ராசி ஆண்களின் பேச்சிற்கு அவுங்க பொண்ஜாதி மதிப்பளிப்பார்கள்.
மீன ராசி பெண்களின் புருஷன்கள் கிச்சனில் முட்டை வேக வைக்க ஆரம்பிப்பார்கள்.
அது வேகுதோ இல்லையோ ஆனா முட்டை கண்டிப்பா உடையும்.
அதில் இருந்து குஞ்சு வருதோ இல்லையோ, பிஞ்சு போன ஆம்லெட் கண்டிப்பா வரும்.
இதுவரை உங்களிடம் இருந்த basement மனப்பான்மை, டவுன் home போல மேல எழும்.
மனதில் தொக்கி நின்ற தாழ்வான எண்ணங்களை தூக்கி recycle bin னில் எறிவீர்கள்.
உங்களுக்குள் கலகமூட்டியவர்களை garbage கேனில் போட்டு மூடுவீர்கள.
சிலர் வாஸ்து படி driving licence சில் அட்ரெஸ் மாற்ற வேண்டிவரும்.
ஓட்டை கார், BMW வேனாக மாறும். வேனில் போனவன் வானில் பறப்பான்.
சேட்டுக்கடை அடகில் இருந்த நகை, வீட்டு பத்திரங்கள் எல்லாம் ராயல் கனேடியன் பேங்க் லாக்கருக்கு ஒரு பஞ்சாபி bank மேனேஜர் துணையுடன் இடம் மாறும்.
நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு face book like போடாமல் மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த மொக்க நண்பர்கள் நாலு பேர் வலிய வந்து உங்க பழைய போஸ்டுக்கு லைக் செய்வார்கள். உங்க மொக்கை மொபைல் போட்டோவை ஷேர் செய்வார்கள்.
பார்டி மற்றும் கல்யாணத்தில் நீங்க எப்பவும் போடும் பழைய ஜிப்பாவில் உள்ள பிஞ்ச பட்டனை தைக்க நினைச்ச உங்களுக்கு, புதுசா கோட்டு போட்டுவுட்டு சொந்தக்காரங்க மரியாதை செய்வாங்க.
இத்தனை நல்லது இருந்தும், கொஞ்சூண்டு bad items பார்சலில் இருக்கு.
நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும்.
இது எல்லாம் இருந்தும் சூப்பர் item ஒன்னு இந்த சனிப்பயல் பார்சலில் இருக்கு.
முக்கியமா அழகு, ஆரோக்யம் கூடும். இதை விட என்ன வேண்டும் சொல்லுங்க மீன்ஸ் குஞ்சுகளா ???
குருஜி சொன்னது மீன ராசியின் உண்மையான பலன் தான்.
வேணும்னா குருஜிக்கு ஒரு டின்னர் ரெடி செஞ்சா டீடைலா விளக்கி சொல்வார்.
லஞ்ச் அண்ட் டின்னர் package ல் மத்த ராசிக்கும் சொல்வார். இதில் ஒரு நல்ல பிரிண்ட் சினிமா படம் போட்டு காட்டனும்.
பேசும் போது டீ அல்லது காபி தேவை படலாம்.
இப்படிக்கு,
ஜோதிட சாம்ராட் ஸ்ரீ ஸ்ரீ டர்,
சுற்றே சுண்ணாம்பு ஜோதிட நிலையம்
ப்ளீட் வூட் சாஸ்திர சம்மேளனம்,
வான் கோவர்.
நோட்: dinner அழைப்புகள் SMS, Whatsapp, Phone, Facebook மற்றும் www.sridar.com வலை தளைத்திலும் பதிவு செய்யலாம். நேரிடையாகவோ, சூட்சமமாகவோ சொல்லலாம். மினிமம் ஒரு மாதம் முன்பே பதிவு செய்யவும். டிமான்ட் ஜாஸ்தி. கொஞ்சம் பிகு செஞ்சிட்டு தான் வருவார். ஆனா வருவார்.
Really great,’… Unique personality in TN(AU)
great man.
தோழரின் நூல்களை1998 முதலே படித்து வருகிறேன் . எப்போது காண நேர்ந்தாலும் அதே சிரிப்பு கலந்த ‘தோழரே’ தான் !
Sadly I did not know 🙁 I have read some of his books. I knew him as Paamaran later. neengalum 1998 la laam anga dhaan irundheengalaa?
why only மீன ராசி?
இது என் ராசி.. உங்க ராசிக்கு வேணும்னா கடைசி நாலு வரி மட்டும் படிங்க…
Yes Malathi Manimegalai
naanum veeeeeenaaaa pona meena raasi kaaran.
Me same rasi too
Jagathguru Krishnamurthi… me too same rasi – sasi
I am also meena rasi…I have been experiencing big troubles since from 2010..your words are giving me some moral support… Hope for best 2015..thanks bro