சீத்தாபதி:

குருவே, நானும் ஒவ்வொரு வருசமும் ஏதாவது ஒரு ஹாப்பி நியூ இயர் celebration னில் கலந்துகிறேன். அன்னிக்கு, எனக்கு ஒரு 1000 மெசேஜ் வரும். நானும் ஒரு 500 மெசேஜ் அனுப்புவேன். எதிர்ல போற வரவனுக்கு ஒரு வாரத்துக்கு கை கொடுப்பேன்.

ஒரு 150 ஈமெயில் வரும். ஒரு 10 பேரை நான் கட்டி புடுச்சி வாழ்த்து சொல்வேன் ஒரு அஞ்சு பேர் என்னை கட்டி புடிப்பாங்க. எல்லாரும் ஹாப்பி நியூ இயர் சொல்லுவாங்க…..ஆனா எந்த வருசமும் எனக்கு ஒன்னும் பெருசா எல்லோரும் வாழ்த்தின மாதிரி உருப்படியா நடந்ததில்லை…ஏன் குருவே?

குருஜி:

நானும் உன் கொண்டாட்டத்தை வருஷம் வருஷம் நோட் செய்யிறேன் …உன்னோட ஒவ்வொரு நியூ இயர் கொண்டாட்டத்திலும் ” இளமை இதோ இதோனு …கமல் பாட்டை 11.55 மணிக்கு பாட விட்டுட்டு ….டொய்ங்…டொய்ங்னு கவுன்ட் டோவ்ன் செஞ்சு கடிகாரத்தில் 12 அடிக்கும் போது, கொஞ்சம் சரக்கை அடிச்சிட்டு, நரி மாதிரி ஒரு பத்து பேர் வானத்தை பார்த்து ஹாப்பி நியூ இயர்னு கத்திட்டு, ஒருத்தரை ஒருத்தர் கட்டிபிடிச்சு கை குலுக்கி வாழ்த்துக்கள் சொல்லி நைட் முழுவதும் குத்தாட்டம் போட்டுட்டு மூணு மணிக்கு தூங்க போவ…

கலையில் 10 மணிக்கு எழுந்து சரக்கு அடிச்ச ஹாங் ஓவரோட புது வருஷத்தின் முதல் நாளை துவக்கினா அப்புறம் எப்படி ராஜா விளங்கும் ?

கடிகாரம் என்பது ஒரு காலக் குறியீடு.

 

நாளின் தொடக்கம் மற்றும் முடிவு சொல்ல மனுஷன் கண்டுபுடிச்ச ஒரு குறியீடுதான் கடிகாரம்.

அது போல புது வருசமும் ஒரு குறியீடு தான். மனித குலத்துக்கு மனிதன் உருவாகிய ஒரு குறியீடு.

 

நீ, புத்துணர்சியோட ஒவ்வொரு நாளையும் சந்தோசமா சந்திக்க உனக்கு நினைவூட்ட மனுஷன் கண்டுபுடிச்ச ஒரு குறியீடு தான் ஹாப்பி நியூ இயர்.

நியூ இயர் அன்னிக்கி ஓவரா சலம்பி மட்டையாகிறவன் தான் முழு சோம்பேறி…

 

தினமும் தன் நேரத்தை சரியா உபயோகித்து, புத்துணர்சியோட வாழ்கையை அனுபவக்கிறவனுக்கு எல்லா நாளும் ஹாப்பி நியூ இயர் தான்.

 

தினமும் காலையை சந்தோஷமா வரவேற்று கொண்டாடு. தூங்கும் போது நிம்மதியா தூங்கு.

2014 லில் 365 நாளையும் சந்தோஷமா கொண்டாடியவனுக்கு ஹாப்பி நியூ இயர் கொண்டாட முழு தகுதி உண்டு.

ஒரு நாள் சீன் போடுறவன் ஆட்டம் நாளையில் இருந்து ஆரம்பிக்கும்.

ஓரமா நின்னு பாரு புரியும், ஹாப்பி நியூ இயர் celebration என்றால் என்னனு…!!!